Thursday, October 11, 2007

தோழர் தமிழச்சிக்கும் மற்றும் சிலருக்கும் கழகத்தின் விளக்கங்கள்

எமது புரட்சிகர பெரியார் கழகத்தின் சார்பில் இயற்றப்பட்ட தீர்மானங்கள் குறித்து மு. மயூரன் மற்றும் தமிழச்சி ஆகியோரால் சில கேள்விகளும் சந்தேகங்களும் எழுப்பப்பட்டுள்ளன. மயூரனின் கேள்விக்கு சற்று நீண்ட விளக்கம் அளிக்க வேண்டும் என்பதால், அதை பிறதொரு சந்தர்ப்பத்தில் எமது கழகம் அளிக்கும்.

தற்பொழுது தமிழச்சியின் கேள்விகளுக்கு கழகத்தின் சார்பில் நான் சில விளக்கங்களை தருகிறேன்.

எல்லாவற்றிற்கும் முதல் என்னை அறியாதவர்களுக்காக ஒரு சிறு அறிமுகம். நான் பகுத்தறிவுப் பணிகளை கடந்த ஐந்து நாட்களில் ஆரம்பிக்கவில்லை. கடந்த ஏழு வருடமாகச் செய்து வருகின்றேன். இடையிடையே ஏற்படுகின்ற நெருக்கடியான சூழ்நிலைகளின் போது என்னுடைய பணிகளில் சற்றுத் தொய்வு ஏற்படுவது உண்டு. ஆனால் கடந்த இரண்டு வருடமாக தொய்வேதும் இன்றி பணியாற்றி வருகின்றேன். இவைகளை தமிழ்நாட்டில் வீரமணி, சுபவீ போன்றவர்களிடம் கேட்டு உறுதிப்படுத்திக் கொள்ளலாம். ஆகவே ஐந்து நாட்களாகத்தான் என்னுடைய பணி நடைபெறுகிறது என்பது தவறான ஒரு கருத்து.

ஒரு அமைப்பு உருவாக்குவது பற்றி சென்ற ஆண்டு எம்மிடம் யோசனை உதித்தது. கடைசியில் இந்த ஆண்டின் பொங்கல் அன்று உருவாக்குவது என்று தீர்மானித்தோம். இந்த அமைப்பு உருவாக்குவது பற்றி "உண்மை" இதழின் பொறுப்பாசிரியர் நண்பர் பெரியார்சாக்கிரட்டீஸிடமும் பேசியிருந்தோம். இதை நீங்கள் நண்பர் பெரியார்சாக்கிரட்டீஸிடம் கேட்டு உறுதிப் படுத்திக் கொள்ளலாம். ஆனால் சில காரணங்களால் ஒரு அமைப்பு உருவாவது தள்ளிப் போய்விட்டது. தற்பொழுதுதான் அனைத்தும் கைகூடி வந்திருக்கிறது. ஆகவே புரட்சிகர பெரியார் கழகத்தை உருவாக்குவதற்கு தமிழச்சிதான் காரணம் என்று சிலர் நம்புவதும் தவறு.

தமிழச்சியின் பெரியார் விழிப்புணர்வு இயக்கம் உருவான போது, நானும் எனது தோழர்களும் எமது கழகத்தை உருவாக்கும் திட்டத்தை கைவிட்டு, பெரியார் விழிப்புணர்வு இயக்கத்தில் இணைந்து பணியாற்றுகின்ற சிந்தனையில் இருந்தோம் என்பதை இந்த இடத்தில் சொல்ல வேண்டும். இது பற்றி நான் தமிழச்சியுடன் தொடர்பு கொண்டு பேசியும் இருக்கிறேன்.

ஆனால் தமிழச்சியின் சில நடவடிக்கைகள் அவருடன் ஒரே அமைப்பாக இயங்குவது கடினம் என்பதை எமக்கு உணர்த்தின. ஆகவே அவருடைய அமைப்பில் இணையும் திட்டத்தை கைவிட்டு, நாம் எமது கழகத்தை உருவாக்கி இரண்டு அமைப்புக்களும் ஒருமித்த கருத்துள்ள விடயங்களில் இணைந்து பணியாற்றுவது என்று தீர்மானித்தோம்.

ஆகவே பெரியார் விழிப்புணர்வு இயக்கத்தில் நாம் இணைய முடியாமல் போனதற்குத்தான் தமிழச்சி காரணமே தவிர, நாம் எமது கழகத்தை உருவாக்கியதற்கு தமிழச்சி காரணம் இல்லை. கழகம் என்ற பெயர் இல்லாது, தனிநபர்களாக செயற்பட்ட நாம் சென்ற ஆண்டு எடுத்த முடிவின்படி, தற்பொழுது கழகமாக செயற்படுகிறோம்.

சரி! இப்பொழுது தமிழச்சியின் கேள்விகளுக்கு வருகிறேன்.

1. மதம் சார்ந்த அனைத்து மூடப் பழக்க வழக்கங்களையும் கழகம் கண்டிக்கிறது. இதில் அதைக் கண்டிக்கிறதா, இதைக் கண்டிக்கிறதா என்று கேள்விக்கே இடமில்லை.

2. கழகத் தோழர்கள் அனைவருமே பல மாதங்களாக பகுத்தறிவுப் பணிகளில் பல வகைகளில் ஈடுபட்டுத்தான் வருகிறார்கள். துண்டுப்பிரசுரம், இணையத் தளம், பத்திரிகை, வானொலி என்று அனைத்து வழிகளிலும் எமது பணிகளை செய்துதான் வருகின்றோம். இது மேலும் விரிவுபடுத்தப்படும்

3. தமிழச்சி பெரியாரின் உரைகளை சிறப்பாக தட்டச்சு செய்வதற்காக அவரை கழகம் வாழ்த்துகிறது. அவருடைய தட்டச்சு திறமையை கழகம் பாராட்டுகிறது. (நான் தமிழச்சிக்கு தெளிவு இல்லை என்று ஏன் எழுதினேன் என்பதற்கு நேற்றே என்னுடைய விளக்கத்தை அளித்துவிட்டேன்)

4. இந்தத் தீர்மானத்திற்கு நீங்கள் கேட்ட கேள்வி அடுத்த தீர்மானத்திற்கே பொருந்துகிறது.

5. தமிழ்சோலை உட்படி தமிழைக் கற்பிக்கும் அனைத்து நிறுவனங்களையும் நாம் பாராட்டுகிறோம். ஒவ்வொரு பாடசாலைகளிலும் ஒவ்வொரு பிரச்சனை இருக்கும். தமிழ்சோலையை பற்றி தமிழச்சி பக்க சார்பாக எழுதி உள்ளதாக நான் நினைக்கிறேன். பெண் என்பதற்காக யாரும் தமிழ்சோலை நிறுவனத்தால் அவமானப்படுத்தப்படவில்லை. தமிழச்சி வழங்கிய ஒரு தவறான தகவலுக்காக கழகம் தன்னுடைய கருத்தை தெரிவிக்கத் தேவையில்லை.

6, 7 இந்தத் தீர்மானங்களுக்கு உங்களுடைய கேள்விகள் தலித் மாநாடு பற்றி இருப்பதால், அது பற்றிய தீர்மானங்கள் குறித்து உங்களுடைய கேள்விகளுக்கான பதிலோடு இந்தக் கேள்விகளுக்கும் பதில் தரப்பட்டிருக்கிறது.

8. தமிழீழ விடுதலையின் அவசியத்தை நீங்களும் ஏற்றுக்கொள்வதாக எழுதி உள்ளீர்கள். எழுத்தில் மட்டும் அல்லாது செயலிலும் அப்படி இருக்கும்படி கழகம் உங்களை அன்பாகக் கேட்டுக் கொள்கிறது.

9. இதற்கு நேற்று வழிமொழிவதாக எழுதியிருந்தீர்கள். இன்றைக்கு நிலவரம் தெரியாது என்று எழுதுகிறீர்கள். நீங்கள் தெளிவாக இல்லை என்று மீண்டும் இங்கே உறுதிப்படுத்தப்படுகிறது.

10. ஈழத்தின் தற்போதைய நிலவரம் தெரியாது என்றால், உங்களுடைய கொளத்தூர் மணி, வீரமணி, கனிமொழி, நெடுமாறன் போன்றோரிடம் கேட்டு அறிந்து கொள்ளும்படி கழகம் கேட்டுக் கொள்கிறது.

11. ஐரோப்பாவில் பகுத்தறிவுப் பணி செய்வதை தடை செய்யவில்லை. தடையின்படி விடுதலைப் புலிகளுக்கு ஆயுதம் வழங்குவதோ, நிதி வழங்குவதோதான் குற்றம். மற்றையபடி நிறைய வேலைகளை செய்யலாம்.

12, 13, 14. உங்களுடைய கையைப் பிடித்துக் கொண்டு அழுது அந்த முதியவரிடம் போய், நீங்கள் தலித் மாநாட்டிற்கு போகிறேன் என்று சொல்லிப் பாருங்கள். அவர் இப்பொழுதும் அழுவார். அன்றைக்கு அழுததை நினைத்து இப்பொழுது அழுவார்.

தலித் மாநாடு பற்றி எமது கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெளிவாக, இந்த மாநாட்டின் பின்னால் இருப்பவர்கள் யார், அவர்களின் நோக்கம் என்ன என்பது கூறப்பட்டுள்ளது. இதை விட வேறு என்ன விளக்கத்தை எதிர்பார்க்கிறீர்கள்?

தலித் மாநாட்டை பின்னால் இருந்து இயக்குபவர்கள் விடுதலைப் புலிகளுக்கு எதிரான வேளாள மேலாதிக்கவாதிகள். இந்த வேளாள மேலாதிக்கவாதிகளை இயக்குவது சிங்கள அரசு. இதுதான் உண்மை.

தலித் மாநாட்டில் எவ்வாறு விடுதலைப் புலிகளுக்கு எதிராக பிரச்சாரம் மேற்கொள்ளப்படும் என்பதற்கு தமிழச்சி "ஈழத்தில் உள்ள தலித்களைப் பற்றி அறிவதற்கு" என்று சொல்லி வழங்கிய இணைப்பே ஆதாரம். தலித் மாநாடு நடைபெறுவதற்கு முன்பே தமிழச்சி விடுதலைப் புலிகளுக்கு எதிரான பிரச்சாரத்தை இந்த இணைப்பை வழங்கி ஆரம்பித்து வைத்துவிட்டார்.

சோபாசக்தி அதில் எழுதிய அத்தனை புரட்டுக்களும் தலித் மாநாட்டில் பேசப்படும். அவைகள் உண்மையென்று பார்வையாளர்கள் நம்பவைக்கப்படுவார்கள். சாதியற்ற சமத்துவ சமுதாயத்தை உருவாக்குவதற்கு விடுதலைப் புலிகள் செய்துவரும் பணிகள் திட்டமிட்டு மறைக்கப்படும். இதுதான் தலித் மாநாடு என்ற பெயரில் நடைபெறும்.

இதுதான் நடைபெறும் என்பதற்கு தமிழச்சி வழங்கிய இணைப்பே கட்டியம் கூறுகிறது. இதன் பிறகும் யாராவது "தலித் மாநாடு விடுதலைப் புலிகளுக்கு எதிரானது அல்ல" என்று நம்புவார்களாக இருந்தால், அவர்களைப் பார்த்துப் பரிதாபப்படத்தான் முடியும்.

தலித் மாநாட்டின் நோக்கம் தமிழீழ மக்களுக்கு எதிரானது. தலித் மாநாட்டையும், அதற்கு ஆதரவு தெரிவிப்பவர்களையும் கண்டிப்பதற்கு எமக்கு உரிமை உண்டு. தலித் மாநாடு என்ற பெயரில் தமிழ்நாட்டு மக்களை குழப்புகின்ற செயலை நாம் கண்டிக்கின்றோம். தலித் மாநாடு என்ற பெயரில் விடுதலைப் புலிகளுக்கு எதிராக நடத்தத் திட்டமிடப்பட்டிருக்கும் செயற்பாடுகளை கண்டிக்கின்றோம். இவைகளுக்கு துணை போகின்ற அனைவரையும் நாம் கண்டிக்கின்றோம்.

மற்றையபடி தலித் மாநாட்டை நாம் தடை செய்யச் சொல்லவில்லை. மக்களை விழிப்பாக இருக்கும்படிதான் கேட்கின்றோம். தலித் மாநாடு நடைபெறவதைத்தான் நாமும் விரும்புகின்றோம். அப்படி நடந்தால்தான், சிலருடைய வேசம் கலையும். சிலருக்கு தெளிவு பிறக்கும்.

10 comments:

வி.சபேசன் said...

கடைசி இரண்டு பந்திகள் சரியான முறையில் விளக்கப்படவில்லை என்று தோழர் ஒருவர் மின்னஞ்சல் போட்டிருந்தார். அதை ஒரு முறை விளக்குகிறேன்.

ஒரு மாநாடோ, சந்திப்போ நடைபெறுவது தவறு அல்ல. ஆனால் பொருந்தாத ஒரு பெயரினை வைத்து மக்களை ஏமாற்றுவதுதான் தவறு. மாநாடு நடத்துபவர்கள் தாராளமாக "புலி எதிர்ப்பு மாநாடு" என்று பெயர் வைக்கலாம். அதுதான் நேர்மையான செயலாக இருக்கும்.

ஆனால் பல நூற்றாண்டுகளாக அடக்கப்படும் ஒரு மக்கள் கூட்டத்தை குறிக்கப் பயன்படுத்தப்படும் ஒரு பதத்தினைக் கொண்டு, ஒரு இனத்தின் விடுதலைக்கு எதிராக மாநாடு நடத்துவது என்பது எவ்வளவு கொடிய செயல் என்பதை நீங்கள் எண்ணிப் பார்க்க வேண்டும். நாம் கண்டிப்பது இதைத்தான்.

இந்த மாநாடு தலித் மக்களுக்கும் எதிரானது. தமிழீழ விடுதலைக்கும் எதிரானது. அதில் எந்த ஒரு சந்தேகம் இல்லை.

Anonymous said...

ஒரு சம்பவத்தை இரண்டு விதமாக எழுத முடியும். தமிழச்சி தமிழ்சோலை பற்றி எழுதியதை, அப்படியே அத்தனை சம்பவங்களையும் வைத்துக் கொண்டு, எதையும் மாற்றாது டீச்சரம்மாவை நியாயப்படுத்தியும், அந்தப் பெண்ணை தவறாகவும் எழுத முடியும். ஒன்றை எழுதுபவர் யாருக்கு சார்பாக எழுத விரும்புகிறார் என்பதை வைத்துத்தான் அவர் வசனங்களை உருவாக்குகிறார். தமிழச்சி பக்கசார்பாக எழுதியுள்ளது அப்பட்டமாக தெரிகிறது.

தமிழச்சி சொல்கிறார், முப்பது இலட்சம் மக்களின் வாழ்வுரிமைப் பிரச்சனை பெரியாரிசத்திற்கு அப்பாற்பட்டதாம். மூன்று பிள்ளைகளின் படிப்பு (அந்தப் பிள்ளைகள் வேறு பாடசாலையிலும் படிக்க முடியும்) பெரியாரிசத்திற்கு உட்பட்டதாம்.

இதிலிருந்தே தமிழச்சிக்கு பெரியாரிசம் குறித்த தெளிவு இல்லை என்பது புரிகிறது.

Anonymous said...

அய்யா பழ.நெடுமாறன் இருக்காக........
தமிழர் தலைவர் கி.வீரமணி அய்யா இருக்காக.....
தோழர் கொளத்தூர் மணி இருக்காக........
கனிமொழி அம்மா இருக்காக........

இப்படியெல்லாம் துள்ளிக் குதிச்ச தமிழச்சிக்கு ஈழத்து நிலவரம் தெரியவில்லையாம். அப்படியென்றால் இவர்களிடம் தமிழச்சி பேசுகின்ற போது, விசும்பி விசும்பி அழுவதைத்தான் செய்வாரா? அல்லது ஆபாசமாக திட்டியவனை "ஒரு அப்பனுக்கு பிறந்தால் நேரே வாடா" என்று கேட்டு பெரியாரியத்தை வாழ வைக்கின்ற கதையை பெருமையுடன் சொல்வாரா? இதில் எதைச் செய்வார்? இவர் ஈழத்துப் பிரச்சனை பற்றி கேட்கவே மாட்டாரா?

இவர்கள் எல்லாம் தனக்கு பக்கபலம் என்று சொல்கின்ற ஒருவர் தனக்கு ஈழத்து நிலவரம் தெரியாது என்று சொல்வதும், விடுதலைப் புலிகளின் போராட்டத்தில் உள்ள நியாயத்தன்மைகள் பற்றி உறுதியாக பதில் சொல்லத் தயங்குவதும் மாபெரும் வெட்கக் கேடான விடயம்.

புரட்சிகர பெரியார் கழகத்தின் தீர்மானங்கள் குறித்து தமிழச்சி எழுப்பிய கேள்விகளே அவருடைய உண்மை முகத்தை காட்டி விட்டது.

Anonymous said...

தனக்கு சாதகமான பின்னூட்டங்களை மட்டுமே தமிழச்சி அனுமதிப்பார்.(ஆபாசமான பின்னூட்டங்களாக இல்லாவிட்டாலும்கூட).

லக்கிலுக் said...

1, 2, 3 என்று பட்டியலிடப்பட்ட விடயங்களை கிண்டலாக சொல்கிறீர்களா? சீரியஸாக சொல்கிறீர்களா என்றே தெரியவில்லை.

நானும் கொஞ்சம் குழம்பிப் போயிருக்கிறேன். :-)))))

-/பெயரிலி. said...

சபேசன்
ஒரு கேள்விமட்டும். தமிழ்ச்சோலையிலே தமிழச்சி சொன்னதுபோல நடக்கவில்லையென்றும் அவர் ஒரு பக்கத்தையே சொல்கிறார் என்றும் சொல்கிறீர்கள்; பின்னூட்டத்திலும் வருகிறவர்கள் சொல்கிறார்கள். அப்படியானால், என்னதான் நடந்து என்று வெளிப்படையாக உங்கள் பக்கத்து நியாயத்தையும் விரிவாக ஓர் இடுகையிலே சொன்னால், பிரச்சனை முடிந்துவிடுமே? தமிழச்சி/சபேசன் இவர்கள் யார் சொல்வது சரி பிழை என்பதைப் பார்க்கிறவர்கள் தீர்மானித்துக்கொள்ளட்டும்.

நான் சொல்வதன் தேவையை நீங்கள் புரிந்துகொள்வீர்களென நம்புகிறேன்

வி.சபேசன் said...

லக்கிலுக்!
நான் எதையும் கிண்டலாகச் சொல்லவில்லை. அனைத்தையும் சீரியசாகத்தான் சொல்கிறேன். உங்களுக்கு ஏதாவது கிண்டலாகப்படுகிறதா?

பெயரிலி!
நான் தமிழ்ச்சோலையில் நடந்த பிரச்சனையை பாராதூரமானதாகப் பார்க்கவில்லை. ஆனால் தமிழச்சி சில சுயநலம் கலந்த காரணங்களல் இதை ஒரு பெரும் பிரச்சனையாக்க முனைந்து நிற்கின்றார்.

இதிலே வேடிக்கை என்னவென்றால், தம்முடைய நிறுவனத்தை சாடி தமிழச்சி எழுதியிருக்கின்ற விடயமே தமிழ்ச்சோலைப் பொறுப்பாளருக்கு நேற்று முந்தினம்தான் தெரியும்.

தமிழச்சி இந்தப் பிரச்சனையை பெரிதாக்குவதன் உண்மையான நோக்கம் எனக்குத் தெரியும். ஆனால் தற்பொழுது அதை எழுத நான் விரும்பவில்லை. சந்தர்ப்பம் வரும்பொழுது, தமிழ்சோலையில் நடந்த உண்மையான சம்பவத்தையும், அதை தமிழச்சி பெரும் பிரச்சனையாக மாற்ற முனைவதன் காரணத்தையும் எழுதுவேன்.

Anonymous said...

சதயகடுதாசி பெரியர் படம் போட்டு முளைச்சிருக்கு பாருங்க.
எப்போ கட்சி மாறினாங்க

theevu said...

ஐயா

பிரச்சனை என்னவென்று நமக்கு தெரியாது.

யாரில் பிழை என்பதும் தேவையில்லை.

சம்பந்தப்பட்டவருக்கு தெரியாமல் அவரது பேச்சை தமிழ்ச்சோலை ஒலிப்பதிவு செய்யததா இல்லையா?

அப்படி செய்திருந்தால் அது சரியா?

வி.சபேசன் said...

ஒருவருடைய பேச்சை அவருக்கு தெரியாமல் பதிவு செய்வது சில நாடுகளில் சட்டப்படி குற்றமாக கருதப்படுகிறது. பிரான்ஸில் எப்படி என்று தெரியவில்லை. விசாரித்துப் பார்க்க வேண்டும்.

பிரான்ஸில் இருக்கும் தமிழச்சி தன்னுடைய தளத்தில் சம்பந்தப்பட்டவருக்கு தெரியாமல் பதிவு செய்த ஒரு உரையாடலை வெளியிட்டிருக்கிறார். ஆகவே பிரான்ஸில் இப்படி பதிவு செய்வது குற்றம் அல்ல என்று எடுத்துக் கொள்ளலாம். குற்றமோ, குற்றமில்லையோ, சிலவேளைகளில் ஒருவருடனான உரையாடலை பதிவு செய்ய வேண்டிய கட்டாயம் வந்து விடுகிறது என்பதற்கு தமிழச்சியே ஒரு உதாரணமாக இருக்கிறார்.

தமிழ்மணத்தில் சில வாரங்களுக்கு முன்பு நடந்த ஒரு பிரச்சனையிலும் சில உரையாடல்கள் பதிவு செய்யப்பட்டு வெளியிடப்பட்டதும் உங்களுக்கு தெரியும்.

தொடர்ந்து ஒருவர் தொந்தரவு செய்கின்ற போது, அந்த தொந்தரவை நிரூபித்து நடவடிக்கை எடுப்பதற்கு, தொந்தரவு செய்பவர் அறியாமலேயே அவருடனான உரையாடலை பதிவு செய்து ஆதாரமாக வைத்திருப்பது என்பது பலர் பின்பற்றுகின்ற ஒன்றுதான்.

தமிழ்சோலையை சேர்ந்தவர்கள் பேச்சை பதிவு செய்வதற்கு தயாராக இருந்ததை வைத்தே, அந்தப் பெண் பல முறை அவர்களுக்கு இடைஞ்சல் கொடுத்திருக்கிறார் என்பது புரிகிறது. பலமுறை தொடர்ந்து தொலைபேசியில் தொந்தரவு செய்ததன் பின்பே தமிழச்சியும் தொந்தரவு செய்பவர்களுடனான உரையாடலை பதிவு செய்வதற்கான ஏற்பாட்டை செய்தார் என்பது இதில் ஒப்புநோக்கத்தக்கது.

இவை எல்லாவற்றையும் இன்னும் ஒரு விடயம் இருக்கிறது. தான் பதிவு செய்து வைத்திருக்கும் தமிழ்ச்சோலை பிரச்சனை சம்பந்தமான உரையாடலை வெளியிடப்போவதாக தமிழச்சி தன்னுடைய தீர்மானத்தில் பூச்சாண்டி காட்டியிருக்கிறார்.

இப்பொழுது என்னுடைய கேள்வி : உரையாடலை பதிவு செய்தது தமிழச்சியா? தமிழ்ச்சோலையா?