Thursday, October 18, 2007

அறியாமையின் உச்சக்கட்டம்

பெண்கள் சந்திப்பில் விடுதலைப் புலிகளுக்கு "ஆதரவாகவும்" பெண் போராளிகளைப் "போற்றியும்" வாசிக்கப்பட்ட கட்டுரையில் இருந்து சில வரிகள்.

புலிகளின் தலைமை இன்று, ஆயிரக்கணக்கான ஆண்டுகள் பின்னோக்கிப் போய் அன்றைய கடவுளர்களின், சங்கத் தலைவர்களின் இடத்தை எடுத்துக்கொண்டு இலங்கைத் தமிழ்ப்பெண்களைத் தங்கள் உடமைகளாகவும் தங்களின் போருக்கு உயிரைக் கொடுக்கவும், உயிரைக் கொடுக்கும் குழந்தைகளைப் பெற்றுக் கொடுப்பவர்களாகவும் நடத்துகிறார்கள்.

மனித உரிமைகளை மீறிப் பெண்களையும் வயது குறைந்தவர்களையும் போர்முனைக்கு அனுப்புவதைப் புலிகள் மிகவும் சாதாரண விடயமாகக் கருதுவது உலகத்தின் மனித உரிமைச் சட்ட திட்டங்களையும் பென்களுக்கான சமுக உரிமைகளையும், பெண்களைப் பாதுக்கக்கும் சமுதாயப் பொறுப்பையும் அவர்கள் எள்ளளவும் மதிப்பது கிடையாது என்பதைத் தெளிவாக விளக்குகிறது.

இன்றைய பல விடுதலைப்போராட்டக்குழுக்களில் மிகவும் கொடிய வன்முறைத் தாக்குதல்களை மேற்கொள்ளும் தமிழீழ விடுதலைப்புலிகள் மிகவும் பயங்கரக் குழுவாகப் பல நாடுகளாற் பிரகடனப்படுத்தப்பட்டிருக்கிறார்கள்.

1983ம் ஆண்டின் இனக்கலவரத்தில் அனாதைகளான பல இளம் தமிழ் ஏழைக் குழந்தைகள் புலிகளின் முகாம்களின் வளர்க்கப்பட்டார்கள். குழந்தைப் படைவீரர்களைப் பாவிப்பதில் புலிகள் முன்னிடம் வகிக்கிறார்கள். அவர்களிடம் 5000 குழந்தைச் சிப்பாய்கள் இருப்பதாகக் கூறப்படுகிறது. அந்தக் குழந்தைச்சிப்பாய்கள் சிலருக்குப் பன்னிரண்டு வயது என்று மனித உரிமைச்சங்கம் தன் அறிக்கையிற் குறிப்பிட்டிருக்கிறது.

அந்த அனாதை இல்லங்களில் வளர்பவர்கள் பலர் தற்கொலைதாரிகளாகப் பயிற்சி பெற்றார்கள். புலிகளின் கட்டுப்பாட்டிலும் போதனைகளிலும் வாழ்ந்து பழகிய சிலர் தாங்களாகவே முன்வந்தார்கள். தலைவர் உட்படப் பல ஆண் ஆயுததாரிகள் பலர் திருமணம் செய்து குழந்தை குட்டிகள் பேரப்பிள்ளைகள் காணும் நிலையிலிருக்கும்போது பெண்புலித் தலைவிகள் யாரும் அப்பெரும்பேற்றைப் பெற்றதாகப் பத்திரிகைச்செய்திகள் வரவில்லை.

புலிகளுக்குத் தேவையான வீரர்களைப் பெற்றுக்கொடுப்பதும், பிறந்த குழந்தைகளைப் புலிகளிடம் ஒப்படைப்பதும் ஒப்பற்ற தமிழ்த் தேசிய சேவையாகக் கருதப்படுகிறது.

இலங்கை இராணுவத்தினர் பாலியற் கொடுமைசெய்வதற்காகவே தமிழ்ப்பகுதிகளுக்கு வருகிறார்கள். அவர்களிடமிருந்து தப்புவதற்குப்பெண்கள் தற்கொலைத் தாக்குதல்கைச்செய்வது இன்றியமையாத விடயம் என்று இடை விடாமற் பிரசாரம் செய்யப்படுகிறது. தமிழ்ப்பெண்களின் கற்பைக்காப்பாற்றத் தமிழ்ப் பெண்கள் முன்வரவேண்டுமென்று தூண்டப்படுகிறது. வெளி உலகத் தொடர்புகள் துண்டிக்கப்பட்டுப் புலிகள் சொல்வதுதான் சரி என நம்பும் அப்பாவித்தமிழ்ப் பெண்களின் உயிர் மிகவும் மலிவான விதத்தில் பாவிக்கப்படுகிறது.

அசுரர்களை அழிக்க வந்த கார்த்திகேயனைத் தலைவரைப் பணிவதும், நினைப்பதும் அவரைப்பாதுகாக்க கார்த்திகைப்பெண்களாகத் தற்கொலைதாரிகளைப் பயிற்சிசெய்வதும் நவநாகரீக உலகில் எங்கும் நடக்காத கொடுமை.

கட்டுரையில் இருந்த சில பகுதிகள் மட்டும்தான் தரப்பட்டிருக்கிறது. இந்தக் கட்டுரையில் பெண் போராளிகளை கொச்சைப் படுத்தி எதுவும் இல்லை என்று தமிழச்சி சொல்கிறார். இந்தக் கட்டுரையின் இணைப்பை தந்து புலிகளுக்கு எதிராக எதுவும் பேசவில்லை என்பதை தான் நிரூபித்து விட்டேன் என்று புளுகாங்கிதப்படுகிறார்.

ஞானி போன்றவர்கள் கலைஞருக்கு ஆதரவாக எழுதுவது போன்று எழுதிய கட்டுரைகளையே, அதன் உள் அர்த்தத்தைக் கண்டுபிடித்து பிரித்து மேய்கிறவர்கள் தமிழ்மணத்தில் இருக்கிறார்கள். வெளிப்படையாகவே விடுதலைப் புலிகளை கொச்சைப்படுத்தியுள்ள இந்தக் கட்டுரையை "விடுதலைப் புலிகளுக்கு எதிரானது அல்ல" என்று நம்பிவிடுவார்கள் என்று எண்ணுகின்ற அறியாமையை என்னவென்று சொல்வது?

22 comments:

வி.சபேசன் said...

இங்கே கொடுக்கப்பட்ட வரிகளில் உள்ளவற்றையே ராஜேஸ்வரியின் கட்டுரை முழுவதும் பேசுகிறது. துணையாக துரோக ஊடகங்களில் வந்த பொய்யான செய்திகளை துணைக்கு அழைக்கிறது.

ராஜேஸ்வரியின் கட்டுரையில் உள்ள விடயங்கள் எவ்வகையிலும் உண்மை அல்ல என்பதை நாமும், கொளத்தூர் மணி, வீரமணி, பழ. நெடுமாறன், கனிமொழி போன்றவர்களும் நன்கு அறிவோம்.

விடுதலைப் புலிகள் மீது உண்மையான விமர்சனங்களை வைத்தால், அதை ஏற்றுக்கொள்வதில் எமக்கு எவ்வித தயக்கமும் இல்லை. ஆனால் அபாண்டமான அவதூறுகளை கட்டுரையாக்கி பெண்கள் சந்திப்பில் வாசிக்கப்படுவது மிகவும் கண்டிக்கத்தக்கது.

விடுதலைப் புலிகள் ஒரு போதும், பெண்களை பிள்ளைகளைப் பெறும்படி பிரச்சாரம் செய்வது இல்லை.

தம்முடைய பராமரிப்பில் உள்ள தாய் தந்தையை இழந்த குழந்தைகளை போரளிகள் ஆக்குவது இல்லை. ஆனால் இங்கே தற்கொடைப் போராளிகள் ஆக்கப்படுகிறார்கள் என்று ராஜேஸ்வரி கூசாமல் பொய் சொல்கிறார்.

தமிழீழத்தின் உச்சநீதிமன்றத்தில் உள்ள மூன்று நீதிபதிகளில் ஒருவர் பெண் என்பதை இந்த இடத்தில் ஒரு செய்தியாக சொல்ல விரும்புகிறேன்.

ஆனால் தமிழ்நாட்டு அரசியில் பெரும் செல்வாக்கு உள்ள ஒருவருக்கு இது எதுவுமே தெரியவில்லையாம். நல்ல வேடிக்கை. பெண்கள் சந்திப்பில் பெண் போராளிகள் பற்றி மிகப் பெரும் அவதூறு செய்யப்பட்டிருக்கிறது. தட்டிக் கேட்காமல், கைகட்டி வேடிக்கை பார்த்து விட்டு வந்திருப்பது பெரும் வேதனை.

அத்துடன் அதற்கு நற்சான்றிதழ் அளிப்பதற்கு வேறு முயற்சி செய்கிறார். இதுதான் விழிப்புணர்வா?

kiddy ppl said...

வி.சபேசன் அவர்களுக்கு,

நான் சொல்லுவதெல்லாம் பெண்கள் கூட்டத்தில் இயக்தைப் பற்றியோ, போராளிகளைப் பற்றியோ யாரும் அங்கு எதுவும் பேசவில்லை என்று தான் சொல்கிறேன். இதில் என்ன அறியாமை இருக்கிறது. ஒரு வேளை நான் போய்விட்ட பிறகு பேசினார்கள் என்கிறீர்களா?

பெண்கள் சுதந்திரம், பெண்கள் பற்றிய சமூதாயத்தின் திணிப்புகள் பற்றி தான் பேச்சு சென்றது. கடைசியில் இராஜேஸ்வரி பாலசுப்ரமணியம் "இலங்கையில் தமிழ்பெண் தற்கொலைதாரிகள்"
என்ற தலைப்பில் கட்டுரை வாசித்தார். அதன் பிறகு பெண்களின் சொந்தப்பிரச்சனைகளைப் பற்றி பேசினோம். அவ்வளவு தான்.

அய்ரோப்பிய கண்டம் புலிகளை தீவிரவாதிகள் என்கிறது. இவர்களை நீங்கள் தேசத் துரோகிகள், தீவிரவாதிகள் என்கிறீர்கள். இப்படியே பேசிக் கொண்டிருந்தால் எந்த தீர்வும் கிடைக்காது. இதற்கு மேல் என்னை சம்பந்தப்படுத்தி பேசிக் கொண்டிருப்பதை விட்டு விடுங்கள். நான் அவர்களை முழுதாக
ஆதரிப்பதாக இருந்தால் அவர்களின் ஈராக் மாநாட்டை பற்றியும் விளம்பரப்படுத்தி இருப்பேன். ஆனால் எனக்கு பெண்கள் சந்திப்பும், தலீத் மாநாடும் ஈர்த்ததால் ஒத்துழைப்பு கொடுத்துக் கொண்டிருக்கிறேன்.

நன்றி!

kiddy ppl said...

ஆனால் தமிழ்நாட்டு அரசியில் பெரும் செல்வாக்கு உள்ள ஒருவருக்கு இது எதுவுமே தெரியவில்லையாம். நல்ல வேடிக்கை. பெண்கள் சந்திப்பில் பெண் போராளிகள் பற்றி மிகப் பெரும் அவதூறு செய்யப்பட்டிருக்கிறது. தட்டிக் கேட்காமல், கைகட்டி வேடிக்கை பார்த்து விட்டு வந்திருப்பது பெரும் வேதனை.

அத்துடன் அதற்கு நற்சான்றிதழ் அளிப்பதற்கு வேறு முயற்சி செய்கிறார். இதுதான் விழிப்புணர்வா?//////

யாருய்யா நக்கல் பண்ணார்கள்? பண்ணால் தானே கேட்பதற்கு?

வி.சபேசன் said...

தோழர் தமிழச்சிக்கு,

உங்களுடைய கருத்துக்கு நன்றி. நான் உங்களை சம்பந்தப்படுத்தி எழுது வேண்டும் என்பதற்காக இவைகளை எழுதவில்லை.

பெண்கள் சந்திப்பு, தலித் மாநாடு போன்றவைகள் நடைபெறுவதன் நோக்கம் பற்றி நாம் பலமுறை தெளிவாகச் சொல்லி உள்ளோம்.

நீங்களே சிந்தித்துப் பாருங்கள்! பெண்கள் சந்திப்பில் பல விடயங்கள் பேசப்பட்டதாக சொல்கிறீhகள். ஆனால் அவைகள் எதுவும் எந்த ஊடகங்களிலும் வரவில்லை. ராஜேஸ்வரி விடுதலைப் புலிகளை கொச்சைப்படுத்தி வாசித்த கட்டுரைதான் வருகிறது.

நீங்கள் நேர்மையான முறையில் பதில் சொல்லுங்கள்!

ராஜேஸ்வரியின் கட்டுரை விடுதலைப் புலிகளை கொச்சைப்படுத்துவது போன்று இல்லையா?

அக் கட்டுரையில் இருந்த சிலவற்றை நான் மேற்கோள் காட்டியிருக்கிறேன். ராஜேஸ்வரி கூறிய அந்தக் கருத்துக்களை நீங்களும் ஆமோதிக்கிறீர்களா?

ராஜேஸ்வரி கூறிய கருத்துக்களை வேறு சபைகளில் கூறினால், உடனடியாகவே யாராவது மறுத்துப் பதில் சொல்வார்கள். ஆனால் பெண்கள் சந்திப்பில் அனைவரும் மௌனமாக அதை ஆமோதித்தபடி அமர்ந்திருந்ததற்கு என்ன காரணம்?

பெண்கள் சந்திப்பில் கலந்து கொண்ட அனைவருமே விடுதலைப் புலிகளுக்கு எதிரானவர்களாகவும், தமிழீழப் போராட்டத்தைப் பற்றி ஏதும் அறியாதவர்களாகவும் மட்டுமே இருக்கிறார்கள் என்பது இப்பொழுதாவது புரிகிறதா?

அப்படியானவர்கள் மட்டுமே தேர்ந்தெடுத்து அழைக்கப்பட்டுள்ளார்கள் என்பது புரிகிறதா?

தோழர், நீங்கள் புரிய வேண்டியது நிறைய இருக்கிறது என்று நினைக்கிறேன். சில பொறுக்கிகள் உங்களை மிரட்டினார்கள் என்பதற்காகவும், பண்பு மீறி கட்டளை இட்டார்கள் என்பதற்காகவும் நீங்கள் ஆத்திரப்பட்டு, அவசரப்பட்டு அடாவடியாக நடந்து கொள்கிறீர்கள்.

அதனால் பாதிக்கப்படப் போவது நானோ, நீங்களோ அல்ல. புலம்பெயர்ந்து வாழும் தமிழீழ மக்களிடம் பெரியார் கருத்துக்களை நாம் பரப்புவதற்கு எடுக்கும் முயற்சிகள்தான் பாதிக்கப்படப் போகின்றன.

kiddy ppl said...

/////பெண்கள் சந்திப்பில் கலந்து கொண்ட அனைவருமே விடுதலைப் புலிகளுக்கு எதிரானவர்களாகவும், தமிழீழப் போராட்டத்தைப் பற்றி ஏதும் அறியாதவர்களாகவும் மட்டுமே இருக்கிறார்கள் என்பது இப்பொழுதாவது புரிகிறதா?

அப்படியானவர்கள் மட்டுமே தேர்ந்தெடுத்து அழைக்கப்பட்டுள்ளார்கள் என்பது புரிகிறதா?////

1 - விடுதலைப் புலிகளுக்கு எதிரானவர்களாக இருந்தால் என்னுடைய புத்தகங்களை அங்கு விற்பனைக்கு வைக்க அனுமதித்து இருப்பார்களா? ( தமிழ்சோலை சம்பந்தப்பட்ட புத்தகம்)

2 - தேர்ந்தெடுத்து அழைக்கப்பட்டுள்ளார்கள் என்ற வாதம் தவறு. ஊடறு இணையத்தில் மற்றும் சில இணையத்தில் நான் விளம்பரம் கண்டேன். ஆனால் என் இணையத்தில் போட்டதில்லை. பதிவர் சாத்திரி பெண்கள் மாநாடு உள்பட எல்லாவற்றையும் தாக்கியும் இயக்கத்திற்கு எதிரானவை என்றும் பதிவு போட்டார். பெண்கள் கூடி இயக்கத்திற்கு எதிராக என்ன செய்துவிடப் போகிறார்கள் என்று நினைத்துக் கொண்டிருந்த வேலையில் சுவீஸ் - இல் இருந்து மின் அஞ்சல் வந்தது. பெண்கள் சந்திப்பில் கலந்து கொள்ளச் சொல்லி. ஆக தலீத் மாநாடு போல் விளம்பரப்படுத்தப்பட்ட பெண்கள் சந்திப்பை எப்படி குறிப்பிட்டவர்களை மட்டும் அழைத்ததாக சொல்ல முடியும்?

வி.சபேசன் said...

நீங்கள் தமிழ்சோலை பற்றி புத்தகம் எழுதி இருக்கிறீர்களா? அதைப் பற்றிய மேலதிக விபரங்களை தரமுடியுமா?

அப்படித்தான் நீங்கள் தமிழ்சோலை பற்றி புத்தகம் எழுதியிருந்தாலும், அவர்கள் அதை தடை செய்து இருக்க மாட்டார்கள். நீங்கள் கொண்டு போய் அங்கே மேசையில் சில புத்தகங்களை வைப்பதால், அவர்களுடைய பிரச்சாரம் எந்த விதத்திலும் பாதிக்கப்படப் போவதில்லை. தமிழ்சோலை நேரடியாக விடுதலைப் புலிகளோடு சம்பந்தப்படும் ஒன்று அல்ல.

நீங்கள் வேண்டுமென்றால் பெண் போராளிகள் நடத்துகின்ற விடுதலைப் போர் பற்றி உண்மையான முறையில் ஒரு புத்தகத்தை எழுதி அங்கே வைத்துப் பாருங்கள். அடுத்த முறை உங்களுக்கு அழைப்பு அனுப்ப மாட்டார்கள்.

உங்களின் தற்போதைய செயற்பாடுகளை கவனித்த பிறகுதான் உங்களுக்கு சுவிஸில் இருந்த அழைப்பு அனுப்பியிருக்கிறார்கள்.

அதை விட ஈழத் தமிழர்களுக்கு உங்களுக்கு தெரியாத சில விடயங்கள் தெரியும். விளம்பரங்கள் எந்த ஊடகங்களில் வருகிறது என்பதை வைத்தே, அது எவ்வகையானது என்று அறிந்து கொள்வார்கள். தலித் மாநாடு, பெண்கள் சந்திப்பு போன்றவைகள் ஈழத் தமிழர்கள் படிக்கின்ற பொதுவான ஊடகங்களில் விளம்பரப்படுத்தப்படவில்லை என்பதையும் கவனியுங்கள்.

"ஏன் விடுதலைப் புலிகளுக்கு ஆதரவான ஊடகங்களில் இந்தச் சந்திப்புக்கள் விளம்பரப்படுத்தப்படவில்லை" என்பதை ஒரு முறை சிந்தித்துப் பார்த்தாலும் உங்களுக்கு சில விடயங்கள் புரியும்.

இந்தப் பெண்கள் சந்திப்பு பல ஆண்டுகளாக நடந்து வருகின்றது. ஆரம்பத்தில் விடுதலைப் புலிகளை ஆதரிக்கின்ற பெண்களும் கலந்து கொண்டார்கள். அவர்கள் கலந்து கொள்வதைத் தடுத்து, மெதுமெதுவாக புலிகளை எதிர்க்கின்றவர்கள் மட்டும் கலந்து கொள்வது மாதிரி இந்தப் பெண்கள் சந்திப்பை மாற்றி விட்டார்கள். இப்படித்தான் இலக்கியச் சந்திப்பிலும் நடந்தது.

இதிலே விடுதலைப் புலிகளை ஆதரிப்பவர்கள் மீதும் தவறு உண்டு. அவர்கள் தொல்லைகளையும், தடைகளையும் மீறி பெண்கள் சந்திப்பிற்கும், இலக்கியச் சந்திப்பிற்கும் சென்று கலகம் செய்திருக்க வேண்டும். ஆனால் ஒதுங்கிப் போய்விட்டார்கள்.

நீங்கள் இப்பொழுது போகத் தொடங்கியிருக்கிறீர்கள். நல்ல விடயம். தொடர்ந்து செல்லுங்கள். ராஜேஸ்வரி போன்றவர்கள் எமது போராட்டம் பற்றி அவதூறாக பேசுகின்ற போது தட்டிக் கேளுங்கள்! கலகம் செய்யுங்கள்!

ராஜேஸ்வரி அவதூறாகப் பேசியிருக்கிறார் என்பதை நான் சான்றுகளோடு நிரூபித்திருக்கிறேன். இப்பொழுது நீங்கள் உணர்ந்திருப்பீர்கள். இம் முறை அமைதியாக வந்த விட்டீர்கள். பரவாயில்லை.

அடுத்த முறை நீங்கள் ஒரு துணிவு மிக்க பெரியார் தொண்டர் என்பதை செயலில் காட்டுங்கள்!

இதுவே என் நியாயமான எதிர்பார்ப்பு

kiddy ppl said...

/////நீங்கள் தமிழ்சோலை பற்றி புத்தகம் எழுதி இருக்கிறீர்களா? அதைப் பற்றிய மேலதிக விபரங்களை தரமுடியுமா?

அப்படித்தான் நீங்கள் தமிழ்சோலை பற்றி புத்தகம் எழுதியிருந்தாலும், அவர்கள் அதை தடை செய்து இருக்க மாட்டார்கள். நீங்கள் கொண்டு போய் அங்கே மேசையில் சில புத்தகங்களை வைப்பதால், அவர்களுடைய பிரச்சாரம் எந்த விதத்திலும் பாதிக்கப்படப் போவதில்லை. தமிழ்சோலை நேரடியாக விடுதலைப் புலிகளோடு சம்பந்தப்படும் ஒன்று அல்ல. /////

தமிழ்சோலை இயக்கத்தின் கீழ் செயல்படவில்லை என்று இரட்டடிப்பு செய்வதை என்னால் ஏற்றுக் கொள்ள முடியாது. பிரான்சில் பரப்புரையாளராக இருந்த திரு. மேத்தா அவர்கள் திரு. பருதி அவர்கள் தமிழ்சோலையில் நடந்த சம்பவத்தை விசாரித்தனர். திரு. பருதி அவர்கள் கைது செய்வதற்கு 1 வாரத்திற்கு முன்பு கூட தமிழ்சோலை பிரச்சனைப் பற்றி என்னுடன் போனில் பேசி இருக்கிறார்.

பெரியார் விழிப்புணர்வு இயக்கத்தின் தோழர்கள் அக்டோபர் மாதம் முடியும் வரை தமிழ்சோலை பற்றி என்னை பேசக் கூடாது என்று அன்புக் கட்டளை போட்டிருக்கிறார்கள். நவம்பர் 1 அன்று பேசுவோம்.

வி.சபேசன் said...

தமிழ்சோலை விடுதலைப் புலிகளோடு நேரடியாக சம்பந்தப்படவில்லை என்று நான் சொன்னதை நீங்கள் தவறாக புரிந்து கொண்டிருக்கிறீர்கள். ஆனால் நான்தான் இதில் தெளிவான முறையில் சொல்லவில்லை என்று நினைக்கிறேன்.

தமிழ்சோலை யாருடையதாக இருந்தாலும், அது ஒரு கல்வி நிறுவனம் என்ற அளவில், அது சம்பந்தமான புத்தகங்களை யாரும் தடுக்க மாட்டார்கள் என்ற அர்த்தத்தில்தான் சொன்னேன். ஆனால் பெண் போராளிகள் பற்றியோ, தமிழீழ விடுதலைப் போராட்டம் பற்றியோ நேரடியாகப் பேசுகின்ற ஒரு புத்தகத்தை அங்கே நீங்கள் வைத்திருந்தால், அதை அவர்கள் அனுமதித்திருப்பார்கள் என்று நான் நினைக்கவில்லை.

நீங்கள் தமிழ்சோலையி;ன் பிரச்சனை பற்றி எதுவும் பேச வேண்டாம். ஆனால் உங்களுடைய புத்தகத்தைப் பற்றிய விபரத்தையாவது நீங்கள் தரலாம் அல்லவா?

நீங்கள் எழுதிய "தைரியமும், அதைரியமும்" என்ற புத்தகத்தையா குறிப்பிடுகிறீர்கள்?

kiddy ppl said...

///////"தைரியமும்,
அதைரியமும்" என்ற புத்தகத்தையா குறிப்பிடுகிறீர்கள்?/////////

ஆமாம்!

kiddy ppl said...

/////வி.சபேசன் a dit...
தமிழ்சோலை விடுதலைப் புலிகளோடு நேரடியாக சம்பந்தப்படவில்லை என்று நான் சொன்னதை நீங்கள் தவறாக புரிந்து கொண்டிருக்கிறீர்கள். ஆனால் நான்தான் இதில் தெளிவான முறையில் சொல்லவில்லை என்று நினைக்கிறேன்.////

ஒவ்வொரு ஊரில் புதியதாக தமிழ் பள்ளி தொடங்கும் போதும் இயக்கத்தின் முன்னணியில் தான் உறுப்பினர்கள் அனைவரும் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். அவர்களை கண்டாலே பவ்யமாக பம்பிக் கொண்டு போவார்கள்.

இதில் மறைப்பதற்கு என்ன இருக்கிறது?

அதே போல் தமிழ்சோலை தலைவருக்கு பிரச்சனையே சில நாட்களுக்கு முன்பு தான் தெரியும் என்றீர்களே! அந்த அளவுக்கு ஏன் புரட்டி பேசுகிறீர்கள் என்று தான் புரியவில்லை. திரு. ரொனி அவர்களுக்கு (தமிழ் சோலை தலைவர் ) பிரச்சனை நடந்த அன்று இரவே தெரிவிக்கப்பட்டது.

வி.சபேசன் said...

"தைரியமும் அதைரியமும்" என்ற புத்தகம் நான் அறிந்த வரையில் தமிழ் சோலை பற்றியது அல்ல. அந்தப் புத்தகத்தை விற்று அதில் வருகின்ற பணத்தை தமிழ் சோலைக்கு வழங்குவதாக நீங்கள் அறிவித்தது மட்டும்தான் தமிழ் சோலை சம்பந்தப்பட்டது என்று நினைக்கிறேன்.

தற்பொழுது அந்த முடிவையும் நீங்கள் மாற்றிவிட்டதாக அறிகிறேன். ஆனால் அது உங்களின் முடிவு. அதில் வருகின்ற பணத்தை நீங்கள் யாருக்கு என்றாலும் வழங்கலாம். அதில் யாரும் தலையிட முடியாது.

தமிழ்சோலையில் நடந்த பிரச்சனை பொறுப்பாளர்களுக்கு தெரியாது என்று நான் சொல்லவில்லை. நீங்கள் உங்களுடைய தளத்தில் தமிழ்சோலை பற்றி எழுதியது, அதை சிலர் தமது நலன்களுக்கு பயன்படுத்த முனைந்தது போன்ற விடயங்களை தமிழ்சோலை பொறுப்பாளர் சில நாட்களுக்கு முன்புதான் அறிந்து கொண்டார்.

தமிழ்மணத்தில் நடந்த பிரச்சனை எதுவும் அவர்களை சென்றடையவில்லை என்றுதான் நான் சொன்னேன்.

நீங்கள் தற்பொழுது தமிழ்சோலை நிறுவனத்திற்கு கெடு கொடுத்து தீர்மானம் போட்டிருப்பது கூட அவர்களுக்கு தெரிந்திருக்காது. எதற்கும் கடிதம் மூலமும் ஒரு முறை அறிவித்து விடுங்கள்.

kiddy ppl said...

/////"தைரியமும் அதைரியமும்" என்ற புத்தகம் நான் அறிந்த வரையில் தமிழ் சோலை பற்றியது அல்ல. அந்தப் புத்தகத்தை விற்று அதில் வருகின்ற பணத்தை தமிழ் சோலைக்கு வழங்குவதாக நீங்கள் அறிவித்தது மட்டும்தான் தமிழ் சோலை சம்பந்தப்பட்டது என்று நினைக்கிறேன்./////

தைரியமும் அதைரியமும் .... பிரான்சில் வாழும் தமிழ் மக்களுக்காக எழுதப்பட்டது.தமிழ் சோலை பற்றிய புத்தகமல்ல.

////தற்பொழுது அந்த முடிவையும் நீங்கள் மாற்றிவிட்டதாக அறிகிறேன்.////

ஆம்! முடிவை மாற்றிவிட்டேன்.

/////தமிழ்சோலையில் நடந்த பிரச்சனை பொறுப்பாளர்களுக்கு தெரியாது என்று நான் சொல்லவில்லை. /////

நீங்கள் முன்பு பதிவிட்ட கட்டுரையை பாருங்கள். (லீங்க் கொடுத்துள்ளேன்)

http://webeelam.blogspot.com/2007/10/blog-post_5132.html

/////தமிழ்சோலையில் நடந்த பிரச்சனை பொறுப்பாளர்களுக்கு தெரியாது என்று நான் சொல்லவில்லை. நீங்கள் உங்களுடைய தளத்தில் தமிழ்சோலை பற்றி எழுதியது, அதை சிலர் தமது நலன்களுக்கு பயன்படுத்த முனைந்தது போன்ற விடயங்களை தமிழ்சோலை பொறுப்பாளர் சில நாட்களுக்கு முன்புதான் அறிந்து கொண்டார். /////

அதை அறிந்து கொண்டவருக்கு அக்டோபர் கடைசி நாள் வரை கெடு கொடுக்கப்பட்டிருப்பதும் கண்டிப்பாக தெரிந்திருக்கும் திரும்பவும் போய் நியாயம் கேட்டுக் கொண்டிருக்க விருப்பமில்லை. நான் இருக்கும் ஊரின் மேயர் எங்கள் வீட்டுக்கு வந்து போகும் அளவுக்கு பழக்கமுண்டு. தமிழ்சோலை பற்றி ஒரு வார்த்தை நான் சொல்லியிருந்தால் அல்லது போலீசில் சொல்லியிருந்தால் என்ன நடந்திருக்கும் என்று உங்களுக்கு தெரிந்திருக்கும்.

திரு. மேத்தா அவர்களின் வார்த்தைக்கு கட்டுப்பட்டு இவ்வளவு நாள் பொறுத்தது போதும்.

பதவிகளில் இருந்தால் என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்று எண்ணுபவர்களுக்கும், ஓர் அமைப்பை எதிர்த்து ஒரு தனிமனிதனாலும் போராட முடியும் உலகம் ஆதரவாக கேள்வி கேட்கும் என்பதற்கு உதாரணமாக இச்சம்பவம் அமையும். சிறிய தவறு சிறிய தவறு என்று அலட்சியப்படுத்தப்படும் போது அது எவ்வளவு பெரியதாக விஸ்வரூபம் எடுக்கும் என்பதை நினைவில் கொள்ள இச்சம்பவம் தமிழ்சோலைக்கு ஒரு பாடமாக அமையட்டும். இப்படி பேசிக் கொண்டிருப்பதால் ஆணவத்துடன் பேசுவதாக எண்ண வேண்டாம்.

Anonymous said...

ராஜேஸ்வரியின் arikkaija allathu singala rajapachaven arikkaija jarukavthu vithijasam yhyrijutha...eval ellam pengal endu chiiiiiii thuuu odu kulukkal ellam kumbathiy kudi singalavankku kouduthudankal ....athu gale appadithan pesum ....தமிழச்சி ijooooooo pavammmm

Anonymous said...

பின்னூட்டங்களில் கதைக்கப்படும் விடயங்களுக்கும், மேலே உள்ள கட்டுரை உள்ளடக்கத்துக்கும் ஏதும் தொடர்புள்ளதா? இங்கு பின்னூட்டங்களில் குறிப்பிடும் அமைப்புகளின் உத்தியோகபூர்வ பிரதிநிதிகள் போன்று நீங்கள் கதைத்துக்கொள்வது அருவருக்கத்தக்கதாக உள்ளது.

வி.சபேசன் said...

தமிழச்சி!

நான் மிகத் தெளிவாக எழுதியிருக்கிறேன்

///இதிலே வேடிக்கை என்னவென்றால், தம்முடைய நிறுவனத்தை சாடி தமிழச்சி எழுதியிருக்கின்ற விடயமே தமிழ்ச்சோலைப் பொறுப்பாளருக்கு நேற்று முந்தினம்தான் தெரியும்.///

இதனுடைய அர்த்தம் என்ன? அங்கு நடந்த பிரச்சனையே அவர்களுக்கு தெரியாது என்று சொன்னேனா? இல்லையே!
நீங்கள் அந்தப் பிரச்சனை குறித்து எழுதியுள்ள விடயம்தான் அவர்களுக்கு தெரியாது என்று சொல்லியிருக்கிறேன்



அனானி நண்பரே!

நான் இங்கே எந்த அமைப்பின் பிரதிநிதியாகவும் பேசவில்லை. அப்படி பேசியிருந்தால் சுட்டிக்காட்டுங்கள். ஒரு பத்திரிகையாளன் என்ற வகையில் எனக்கு தெரிந்த விடயங்கள் குறித்து பேசுவது தவறில்லை என்று நினைக்கிறேன்.
ஆனால் தலைப்பில் எழுதப்பட்டுள்ள விடயத்தை தாண்டி நாம் பேசிக் கொண்டிருப்பது உண்மைதான். அதை ஒத்துக்கொள்ளத்தான் வேண்டும்.

Anonymous said...

சபேசன் நீங்கள் தேவையற்ற விவாதங்களில் இறங்கி ஐரோப்பியத் தமிழ்க் குழந்தைகளுக்குத் தமிழ் கற்பிக்கும் நிறுவனங்களை இழுத்து மூடுவதற்கு வழி கோலுகின்றீர்கள்.

வந்தியத்தேவன் said...

நண்பர் சபேசனுக்கு நான் இலங்கையில் இருக்கும் ஒருவர் தலித் மா‍நாடு பெண்கள் மா‍நாடு சம்பந்தப்பட்ட எந்த விடயம் செய்தியாகவோ அல்லது கட்டுரையாகவோ இதுவரை எங்கேயுள்ள எந்த தமிழ்ப் பத்திரிகைகளிலும் வரவில்லை. தினக்குரல் வீரகேசரி சுடரொளி ஏன் தினகரனில் கூட இவை பற்றிய செய்திகள் இல்லை. வலையில் மட்டும் தான் செய்திகள் வருகின்றன.

ஈழத்து மக்களால் புறக்கணிக்கப்பட்ட ஒரு சிலரின் கருத்துக்களுக்கு தமிழச்சி தான் சென்றபடியால் வக்காலத்து வாங்குகின்றார். அத்துடன் அவர் இதனை தனக்கு நல்ல விளம்பரமாகவும் உபயோகப்படுத்தியுள்ளார். பிரான்ஸ்சில் இருக்கும் உறவினர்களைக் கேட்டாலும் இதே பதில் தான் அங்கேயுள்ள பெரும்பாலானவர்களுக்கு இவை பற்றித் தெரிந்திருக்கவில்லை.

தமிழச்சியும் ஒரு சில 20 பேரும் எம் போராட்டத்தை ஒன்றும் செய்துவிடமுடியாது. இந்த நிகழ்வுகளின் மூலம் தமிழச்சியின் உண்மை முகம் வெளிப்பட்டுவிட்டது. மீண்டும் மீண்டும் தமிழச்சி பற்றி பதிவுகள் இட்டு அவரைத் பெரியாளாக்கவேண்டாம்.

லக்கிலுக்குக்கோ செந்தழல் ரவிக்கோ தெரிந்தளவு ஈழப்பிரச்சனை பற்றிய தெளிவு தமிழச்சிக்கு இல்லை. தமிழச்சி எஜமான் படத்தில் வரும் நெப்போலியன் பாத்திரம் போன்ரவர். திருமண வீட்டுக்குச் சென்றால் தான் தான் மணமகளாக இருக்க விரும்புவார். மரண வீட்டுக்குச் சென்றால் தான் தான் இறந்தவராக மாறவிரும்பும் ஒரு சுய விளம்பரப் பிரியை.

இவரைப் பற்றி மேலும் கதைத்து எம் பொன்னான நேரத்தை வீணடிக்கவேண்டாமே.

மாசிலா said...

//திருமண வீட்டுக்குச் சென்றால் தான் தான் மணமகளாக இருக்க விரும்புவார். மரண வீட்டுக்குச் சென்றால் தான் தான் இறந்தவராக மாறவிரும்பும் ஒரு சுய விளம்பரப் பிரியை.//

ஐய்ய்ய்ய்! இது நல்லாவே இருக்குது! செம ஜோக்கு சார்.

//இவரைப் பற்றி மேலும் கதைத்து எம் பொன்னான நேரத்தை வீணடிக்கவேண்டாமே.//

இது அதைவிர பெரிய மெகா ஜோக்குங்க!

மத்தபடி இந்த பதிவுல இருக்கிற எந்த கருத்தோடையும் எனக்கு ஒப்புதல் இல்லைன்னு சொல்லிட்டு போவ வந்தேனுங்க.

முடிஞ்ச வரைக்கும் இந்த பக்கம் திரும்பி வராம இருக்க முயற்சிக்கிறேனுங்க.

வர்ரேனுங்க!

நன்றி.

Anonymous said...

//மாசிலா said...
மத்தபடி இந்த பதிவுல இருக்கிற எந்த கருத்தோடையும் எனக்கு ஒப்புதல் இல்லைன்னு சொல்லிட்டு போவ வந்தேனுங்க.//

தமிழச்சியின் கருத்துடனுமா?

வந்தியத்தேவன் said...

மாசிலா said...
//மத்தபடி இந்த பதிவுல இருக்கிற எந்த கருத்தோடையும் எனக்கு ஒப்புதல் இல்லைன்னு சொல்லிட்டு போவ வந்தேனுங்க.//

மாசிலா எங்களுக்கு உங்கள் பொன்னான கருத்துக்கள் ஒன்றும் தேவையில்லை. போய்த் தமிழச்சியின் வலையில் ஜால்ரா தட்டுங்கள் ஜிங் சக் ஜிங் சக்

Anonymous said...

சபேசன்,

நீங்கள் சொன்னதுபோலவே தமிழச்சியின் பெண்கள் சந்திப்பின் பங்கு புலிகளுக்கு எதிராக பிரச்சாரம் செய்ய பயன்படுத்தப்பட்டுவிட்டது
"...சந்திப்பில் பாரிசிலிருந்து வருகை தந்திருந்த தமிழிச்சி என்பவர் விடுதலைப் புலிகளினால் தனக்கு ஏற்பட்ட துன்பங்களை விபரித்தார்...."

http://www.thenee.com/html/201007.html

kiddy ppl said...

////////
Anonymous a dit...
சபேசன்,

நீங்கள் சொன்னதுபோலவே தமிழச்சியின் பெண்கள் சந்திப்பின் பங்கு புலிகளுக்கு எதிராக பிரச்சாரம் செய்ய பயன்படுத்தப்பட்டுவிட்டது
"...சந்திப்பில் பாரிசிலிருந்து வருகை தந்திருந்த தமிழிச்சி என்பவர் விடுதலைப் புலிகளினால் தனக்கு ஏற்பட்ட துன்பங்களை விபரித்தார்...."

///////////

காண்க :
http://www.thenee.com/html/201007.html








http://thamilachi.blogspot.com/2007/10/blog-post_9687.html