Friday, October 12, 2007

தமிழச்சிக்கு மீண்டும் ஒரு விளக்கம்!

தமிழச்சி,

நீங்கள் தமிழ்சோலையில் தவறுகள் நடப்பதாக கருதினால், அதைக் கண்டிக்க உங்களுக்கு முழு உரிமையும் உண்டு. அதற்காக நீங்கள் விடுதலைப் புலிகளுக்கு எதிரானவர் ஆகி விட மாட்டீர்கள்.

தமிழர்கள் புலம்பெயர்ந்த நாடுகளில் பல நிறுவனங்கள் உண்டு. இவைகளில் நடக்கின்ற தவறுகளை சுட்டிக் காட்டுவதற்கு அனைவருக்கும் உரிமை உண்டு.

தமிழ்சோலை பற்றி நீங்கள் எழுதியதால், உங்களை விடுதலைப் புலிகளுக்கு எதிராக சித்தரிக்க இராஜகரன் போன்றவர்களால்தான் முடியும்.

நான் ஒருபோதும் அப்படிச் செய்ய மாட்டேன். நானே பல செயற்பாடுகளை விமர்சித்து எழுதியது உண்டு. ஆகவே உங்களை விமர்சிக்கக்கூடாது என்று சொல்ல மாட்டேன்.

ஆனால் தமிழ்சோலை குறித்து நீங்கள் எழுதியுள்ள தகவல்கள் பக்கசார்பானவை என்று அதை படிக்கின்ற அனைவருமே புரிந்து கொள்கிறார்கள். ஆகவே அதை மட்டும் படித்துவிட்டு எம்முடைய கழகம் கருத்துச் சொல்வது பொறுப்பான செயல் அல்ல. நாம் விசாரித்த வகையில் அந்தப் பெண் மீதும் தவறு இருப்பதாக தெரிகிறது. ஆகவே இதில் எம்மால் நடுநிலை வகிக்க மட்டுமே முடியும்.

இதைவிட எந்த ஒரு நிறுவனத்திற்கும் தனக்கு இடைஞ்சல் என்ற கருதுகின்றவர்களை வெளியேற்ற முழு உரிமையும் உண்டு. நாம் யாரும் வெளியில் இருந்து கொண்டு, நீங்கள் இவரை சேர்க்கத்தான் வேண்டும் என்று கட்டாயப்படுத்த முடியாது.

பிரான்ஸில் பலர் நடத்துகின்ற பாடாசாலைகள் உண்டு. அந்தப் பிள்ளைகள் படிக்க விரும்பினால், வேறு பாடசாலைகளிலும் சென்று படிக்க முடியும். இரு தரப்புக்கும் ஒத்து வரவில்லை என்கின்ற போது, வீணாக பிரச்சனை செய்து கொண்டிருக்காது, வேறு வழியைப் பார்ப்பதுதான் சிறந்தது. சுலபமாக பிரச்சனையும் தீர்ந்துவிடும்.

இவை எல்லாவற்றையும் விட நான் இதை ஒரு பாரதூரமான பிரச்சனையாகப் பார்க்கவில்லை என்பதையும் நான் சொல்ல வேண்டும். நீங்கள் இந்தப் பிரச்சனையை ராமர் பாலப் பிரச்சனையோடு ஒப்பிட்டுக் கேள்வி கேட்பது எனக்கு ஆச்சரியத்தைத்தான் எழுப்புகிறது. நீங்கள் வேண்டும் என்றே இந்தப் பிரச்சனையே உள்நோக்கத்தோடு பெரிது படுத்துகிறீர்களோ என்ற சந்தேகமும் எழுகிறது.

எதுவாயிருப்பினும் தமிழ்சோலை பற்றிய உங்கள் விமர்சனத்தால் நான் உங்களை தமிழீழ மக்களுக்கு எதிரானவராக கருதவில்லை. தமிழ்சோலையில் நடந்த பிரச்சனையையும் நான் பாராதூரமானதாகப் பார்க்கவில்லை. அதை நீங்கள் விமர்சித்ததையும் பாராதூரமானதாக நான் பார்க்கவில்லை.

ஆனால், "தலித் மாநாடு" என்ற பெயரை சம்பந்தமில்லாத வகையில் வைத்துக் கொண்டு, நடக்க இருக்கும் தமிழீழ விடுதலைக்கு எதிரான பிரச்சார கூட்டத்திற்கு நீங்கள் ஆதரவு தெரிவிப்பதும், அதை விளம்பரப்படுத்தும் நோக்கில் சோபாசக்தியின் இணைப்பை வழங்கி விடுதலைப் புலிகளுக்கு எதிரான அவதூறுகளை பரப்புவதாலுமே, உங்களை நான் சந்தேகப்படுகிறேன். இதை விட வேறு எந்தக் காரணமும் இல்லை.

நீங்கள் ஒன்றைச் சிந்தித்துப் பார்க்க வேண்டும். "தமிழச்சி பற்றி செய்திகள் அறிய" என்று உங்களைப் பற்றி அவதூறாக ஒருவர் எழுதியதன் இணைப்பை என்னுடைய தளத்தில் கொடுத்துவிட்டு, நான் தமிழச்சிக்கு எதிரானவர் இல்லை என்று சொன்னால், யாராவது நம்புவார்களா? உங்களைப் பற்றிய அவதூறுகளை நானும் பரப்புகிறேன் என்றுதானே அர்த்தம்.

தயவுசெய்து பகுத்தறிவோடு சிந்தியுங்கள். மீண்டும் தமிழ்சோலைப் பிரச்சனையிலேயே நின்று சிந்திக்காதீர்கள். எம்முடைய விமர்சனம் தமிழ்சோலை சார்ந்தது அல்ல.

நீங்கள் தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்கு எதிரான செயற்பாடு ஒன்றிற்கு ஆதரவு கொடுக்கிறீர்கள்! விடுதலைப் புலிகள் பற்றிய அவதூறு நிரம்பிய இணைப்பை வழங்கி, அதை "செய்தி" என்று வேறு சொல்லி எதிர்பிரச்சாரத்தை முன்னெடுக்கிறீர்கள்! இவைகளின் அர்த்தம் என்ன?

தயவுசெய்து ஒன்றுடன் ஒன்றை முடிச்சுப்போட்டு சிந்திப்பதை விட்டுவிட்டு, பகுத்து அறிந்து சிந்தியுங்கள்! தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்கு எதிரான பிரச்சாரத்தை நிறுத்துங்கள்! இது நான் தோழமையுடன் விடுக்கும் அன்பான வேண்டுகோள்.

3 comments:

Anonymous said...

சபேசன் தன்னுடைய நிலைப்பாட்டை அழகான முறையில் விளக்கி உள்ளார். அன்பான முறையில் வேண்டுகோளும் விடுத்துள்ளார். இதை தமிழச்சி அவர்களும் உணர்ந்து கொள்ளவேண்டும்.

இரு அமைப்புக்களும் இணைந்து செயலாற்றி பெரியார் சிந்தனைகளை அய்ரோப்பாவில் பரப்ப வேண்டும் என்பதே எம்முடைய விருப்பம்.

ரவி said...

வாழ்த்துக்கள் சபேசன்...

ரவி said...

தமிழச்சியின் பின்னால் இருந்து பதிவு எழுதிக்கொடுக்கும் தோழருக்கு... ( ஆமாம், வன்புணர்ச்சிக்கு அர்த்தம் தெரியாதவர் பக்கம் பக்கமாக கேள்விகளை அள்ளித்தெளிக்கிறாரா என்ன ? யாரை டபாய்க்கிறீங்க)

நீங்கள் நல்லது செய்வதாக நினைப்பதெல்லாம் தமிழச்சிக்கு அல்லதாககத்தான் முடியும்...

அல்லது நீங்கள் தமிழச்சியை வெறுமன ஒரு Tool ஆக உபயோகப்படுத்தி உங்கள் காரியத்தை சாதிக்க முயல்கிறீர்கள்..

அல்லது தமிழச்சியை ஏத்திவிட்டு உங்கள் அரிப்பை தீர்த்துக்கொள்ள நினைக்கிறீர்கள்...

(என்னடா இவன் கரெக்ட்டா அடிக்கறானேன்னு பாக்குறீங்களா ? மாம்ஸே...என்னா நினைச்சே எங்களை...மூச்சுக்காத்தை வெச்சே மூனு நாளைக்கு முன்னால மட்டன் சாப்பிட்டதை சொல்வோம் நாங்க)

அதனால் மறுபடியும் சொல்கிறேன்...தமிழச்சியை வைத்து / பயன்படுத்தி நீங்கள் விளையாடும் விளையாட்டை நிறுத்திக்கொள்ளும்...