Friday, September 28, 2007

மகாத்மா காந்திக்கும் ராகுல் காந்திக்கும் என்ன சம்பந்தம்?

இன்றைக்கு அரசியலில் கொள்கைகளை மாற்றிக் கொள்வது என்பது ஒரு சாதரண விடயம். மக்களின் ஆதரவை பெறுவதற்காகவும் தக்கவைப்பதற்காகவும் கொள்கையை மட்டும்தான் அரசியல்வாதிகள் மாற்றுவர்கள் என்று அல்ல. மதத்தை மாற்றிய தலைவர்கள் இருக்கிறார்கள். பெயரை மாற்றிய தலைவர்கள் இருக்கிறார்கள். இனத்தை மாற்றிய தலைவர்கள் இருக்கிறார்கள்.

ஆனால் கொள்கை, மதம், பெயர், இனம் என்று அனைத்தையுமே மாற்றிய அரசியல் குடும்பம் எதுவென்று பார்த்தால், அது இந்தியாவின் நேரு குடும்பமாக மட்டுமே இருக்கிறது.

இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி, சோனியா காந்தி என்பவை அனைவரும் அறிந்த பெயர்கள். ஆனால் காந்தி என்பது மகாத்மா காந்தி என்று அழைக்கப்படும் மோகன்தாஸ் கரம்சந்த் காந்தியைத்தான் குறிக்கும். காந்தியோடு குடும்பரீதியாக எந்த ஒரு சம்பந்தமும் இல்லாத நேரு குடும்பத்தில் இருந்து இத்தனை காந்திகள் எப்படி வந்தனர்? இந்தக் கேள்விக்கான பதிலை தேடினால் பல சுவாரஸ்யமான செய்திகள் காணக் கிடைக்கும். பெயர்களை சுற்றி இந்திய அரசியல் சுழல்வது புரியும்.

ஜவகர்லால் நேருவுக்கம் அவருடைய மனைவியான கமலா நேருவுக்கும் பிறந்த ஒரே மகள்தான் இந்திரா பிரியதர்சினி. இவர் இலண்டனில் கல்வி கற்கின்ற போது ஒருவரைக் காதலித்தார். இந்தக் காதலுக்கு இந்திரா பிரயதர்சினியின் தாய் கமலா நேரு கடும் எதிர்ப்பை தெரிவித்தார். நேருவும் இந்தக் காதலை அவ்வளவாக ரசிக்கவில்லை.

அதற்குக் காரணம் இந்திரா பிரியதர்சினி காதலித்த பெரொஸ் ஒரு முஸ்லீம். பெரொஸின் உண்மையான பெயர் பெரொஸ்கான். அவருடைய தந்தையின் பெயர் நவாப்கான். பெரொஸ்கான் மீதான காதலில் உறுதியாக நின்ற இந்திரா பிரியதர்சினி முஸ்லீமாக மதம் மாறினார். பெரொஸ்கானை லண்டனில் உள்ள ஒரு மசூதியில் வைத்து நிக்கா செய்து கொண்டார்.

இந்தியா திரும்பிய இந்திரா பிரியர்தனியையும் பெரொஸ்கானையும் வேறு வழியின்றி ஏற்றுக்கொண்ட நேரு அவர்களுக்கு மீண்டும் வேத முறைப்படி திருமணம் செய்து வைத்தார். இதன் பிறகுதான் இந்தப் பெயர் மாற்றங்கள் ஆரம்பமானது.

பெரொஸ்கான் ஒரு முஸ்லீம் என்றும் அவருடைய தந்தையின் பெயர் நவாப்கான் என்றும் பார்த்தோம். பெரொஸ்கானின் தயார் நவாப்கானை திருமணம் செய்வதற்கு முன்பு பர்ஸி மதத்தை சேர்ந்தவராக இருந்தார். பர்சிகளின் ஒரு சாதிப் பிரிவினருக்கு "கண்டி" என்று பெயர். இந்த "கண்டி" பிரிவைச் சேர்ந்தவராக பெரொஸ்கானின் தாயார் இருந்தார்.

இந்தக் "கண்டி" என்பதைத்தான் நேரு குடும்பத்தினர் "காந்தி" என்று மாற்றினார்கள்.

முதலில் பெரொஸ்கான் என்ற பெயர் பெரொஸ் காந்தி என்று மாறியது. உண்மையில் அது பெரொஸ் கண்டி என்று மாறியிருக்க வேண்டும். ஆனால் பெரொஸ் காந்தி என்று மாற்றப்பட்டு அப்படியே இந்திரா பிரியதர்சினியின் பெயரும் இந்திரா காந்தி என்று மாற்றப்பட்டது.

இந்த இருவருக்கும் பிறந்தவர் ராஜீவ். இந்த நேரத்தில் பெரொஸ் காந்திக்கும் இந்திரா காந்திக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்து போய்விட்டார்கள். பெரொஸ் காந்தி பிரிந்து போனதன் பிற்பாடு இன்னும் ஒரு குழந்தை பிறந்தது. அந்தக் குழந்தையின் பெயர் சஞ்சீவ். கவனியுங்கள்! சஞ்சய் அல்ல, சஞ்சீவ்.

சஞ்சீவ் பெரொஸ் காந்திக்குப் பிறந்தவர் அல்ல, அவர் முகமது யூனுஸ் என்ற இன்னொரு முஸ்லீமுக்கு பிறந்தவர் என்ற பலமான ஒரு "கிசுகிசு" இந்திய அரசியல் உயர்மட்டங்களில் உண்டு. இதை அறிந்து கொண்ட சஞ்சீவ் தனது தயாரான இந்திரா காந்தியை மிரட்டியதாலேயே, விமான விபத்தில் அவர் இறந்து போக நேரிட்டது என்று சிலர் சொல்வார்கள். பெரொஸ் காந்தியின் மரணம் குறித்தும் சந்தேகம் கிளப்புபவர்கள் இருக்கிறார்கள். இவைகள் ஊகம் கலந்த தனிக் கதைகள்.

இப்பொழுது சஞ்சீவ் எப்படி சஞ்சய் காந்தியாக மாறினார் என்பதை பார்ப்போம். சஞ்சீவ் லண்டனில் தங்கியிருந்த போது காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார். சஞ்சீவ் ஒரு காரை திருடியதாக குற்றம் சாட்டப்பட்டே காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார். அவருடய கடவுச் சீட்டும் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த நிலையில் லண்டனில் இருந்த இந்தியத் தூதரகம் சஞ்சீவிற்கு புதிய கடவுச்சீட்டு வழங்கியது. அதில் அவருடைய பெயர் சஞ்சய் என்று மாற்றப்பட்டிருந்தது. இப்படித்தான் சஞ்சீவ் காந்தியாக இருந்திருக்க வேண்டியவர் சஞ்சய் காந்தியாக மாறினார்.

இந்தப் பெயர் மாற்றம் ராஜீவ் காந்தியிடமும் தொடர்ந்தது. ராஜீவ் காந்தி இத்தாலியை சேர்ந்த சானியா மைனோ என்ற பெண்ணை காதலித்தார். சானியா மைனோவை திருமணம் செய்வதற்காக ராஜீவ் கிறிஸ்தவ மதத்திற்கு மாறினார். தன்னுடைய பெயரையும் "ரொபோர்டோ" என்று மாற்றிக் கொண்டார். ரொபோர்டோவிற்கும் சானியா மைனோவிற்கும் இரண்டு குழந்தைகள் பிறந்தன. பெண் குழந்தைக்கு "பியங்கா" என்று பெயரிட்டார்கள். ஆண் குழந்தைக்கு "ராவுல்" என்று பெயரிட்டார்கள். இரண்டுமே இத்தாலியிலும் வைக்கப்படுகின்ற ஐரோப்பிய பெயர்கள். இன்றைக்கு இவர்களுடைய பெயர்களும் வழமை போன்று மாறிவிட்டது.

இந்திரா பெரொஸ்கான் அரசியல் நலன்களுக்காக இந்திரா கண்டியாக மாறி அப்படியே இந்திரா காந்தியாக மாறினார். சஞ்சீவ் காந்தி லண்டனில் காவல்துறையால் கைது செய்யப்பட்டதனால் சஞ்சய் காந்தியாக மாறினார். இந்திய அரசியலில் ஈடுபட வேண்டிய தேவை ரொபோர்டோவிற்கு வந்த பொழுது, ரொபோர்டோ மீண்டும் ராஜீவ் காந்தியாக மாறினார். அதே தேவை சானியா மைனோவிற்கு வந்த போது, அவர் சோனியா காந்தியாக மாறினார். அப்படியே பியங்கா பிரியங்கா காந்தியாகவும், ராவுல் ராகுல் காந்தியாகவும் மாறி விட்டார்கள்.

தற்பொழுது ராகுல் காந்தி காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளராக முடி சூட்டப்பட்டுள்ளார். நேரு குடும்பம் காங்கிரஸ் கட்சியின் அதிகார பீடத்திலிருந்து மாறாது தொடர்ந்து இருப்பதற்கு அவர்களின் இந்த "பெயர் மாற்றும் அரசியலும்" ஒரு காரணம்.

Saturday, September 22, 2007

ராமன் தேடிய சீதை

சீதை அலறித் துடித்தாள். தீநாக்குகள் அவளை சுட்டன. "என்னை கொன்றுவிடாதீர்கள், நான் ஒரு பாவமும் அறியாதவள்" சீதை கதறினாள். ராமன் ஒரு குரூரச் சிரிப்போடு அவளைப் பார்த்துக் கொண்டு நின்றான். அரியாசனத்திற்காக சோரம் போன சுக்கிரீவனும் விபீடணனும் செய்வதறியாது தலைகுனிந்து நின்றனர்.

அப்பொழுது சத்தம் கேட்டு அங்கே அனுமானும், லக்குமணனும் மற்றவர்களும் ஓடி வந்தார்கள். அவர்கள் ஓடி வருவதைப் பார்த்த ராமன் சீதையை கருக்கிக் கொண்டிருந்த தீயை அணைத்தான். "சீதை தன்னை தூய்மையானவள் என்று நிரூபிக்க தீயில் இறங்கிவிட்டாள், நல்ல வேளை அக்கினிதேவன் காப்பாற்றி விட்டான்" ராமன் எங்கோ பார்த்துக் கொண்டு சொன்னான்.

அப்பொழுது சீதை தப்பி விட்டாளே தவிர, அவளது வாழ்க்கை அதன் பிறகு நரகமாகி விட்டது. தினமும் ராமன் குடித்துவிட்டு வந்து சீதையை அடித்து உதைப்பான். மிகக் கொடிய வார்த்தைகளால் அவளை துன்புறுத்துவான். சீதைக்கு ஆறுதல் சொல்வதற்கு யாரும் இல்லாமல் போய்விட்டது. இடையிடையே சீதை தன்னுடன் கண்ணியமாகவும் அன்பாகவும் நடந்து கொண்ட ராவணனை நினைத்துக் கொள்வாள்.

ஒரு நாள் ராமன் குடித்துவிட்டு போதை தலைக்கேற ஆடியாடி வந்தான். சீதையைக் கண்மண் தெரியாமல் அடித்தான். அவளை இனிமேல் தன்முன் நிற்கக் கூடாது என்று சொல்லி காட்டுக்கு விரட்டி விட்டான். காட்டில் உள்ள மிருகங்களுக்கு சீதை பலியாகட்டும் என்று நினைத்துக் கொண்டான்.

ஆனால் சீதை காட்டுக்குள் வாழப் பழகிக் கொண்டாள். அங்கே இரண்டு குழந்தைகளையும் பெற்றெடுத்தாள். செய்தி ராமனை எட்டியது. ராமனுடைய சந்தேகம் மேலும் அதிகரித்தது. சீதையை இனியும் உயிருடன் விடக் கூடாது என்று நினைத்தான். காடெல்லாம் தேடி அலைந்தான். ஆனால் சீதையை அவனால் கண்டுபிடிக்க முடியவில்லை.

ஒரு நேரத்தில் சலித்துப் போய் சீதையை தேடுவதை ராமன் கைவிட்டுவிட்டான். தன்னுடைய வெறியை குடித்தும் பெண்களுடன் கும்மாளமிட்டும் ஆற்றிக் கொண்டான். கிண்ணரி, உதமா, நாட்டியப் பெண்கள், வேலைக்காரப் பெண்கள் என்று யாரையும் ராமன் விட்டு வைக்கவில்லை. அனைவரிடமும் தன்னுடைய பசியை தீர்த்துக் கொண்டான்.

ஒரு நாள் காட்டுக்குள் வேட்டைக்குச் சென்ற ராமனின் படைவீரர்கள் ராமன் தேடிய சீதையை கண்டு விட்டனர். ராமனிடம் ஓடிச் சென்று, அவன் தேடிய சீதையை கண்ட செய்தியை சொன்னார்கள். ராமன் வெறியோடு காட்டுக்கு புறப்பட்டான்.

இந்த முறை சீதையால் தப்ப முடியாது போய்விட்டது. சீதை ராமனிடம் அகப்பட்டு விட்டாள். ராமன் சீதையை கடுமையாக சித்திரவதை செய்தான். சீதை பலவாறு கெஞ்சியும் விடவில்லை. சித்திரவதை தாளாது சீதை மூர்ச்சித்துவிட்டாள். ராமன் ஒரு குழியை தோண்டி அதற்குள் போட்டு சீதையை மூடினான்.

"சீதை பூமாதேவியன் மகள் அல்லவா! அதனால் பூமியே பிளந்து சீதையை உள் வாங்கிக் கொண்டது" சில காலம் கழித்து அயோத்தியில் மக்கள் இப்படிப் பேசிக் கொண்டார்கள்.

Friday, September 14, 2007

பழ. நெடுமாறன் உண்ணாநிலைப் போராட்டத்தை கைவிட மறுப்பு!

ஈழத்திற்கு தாம் சேகரித்த நிவாரணப் பொருட்களை அனுப்புவதற்கு அனுமதி தரவேண்டும் என்று வலியுறுத்தி பழ. நெடுமாறன் அவர்கள் கடந்த இரண்டு நாட்களாக உண்ணாநிலைப் போரட்டம் நடத்தி வருகிறார்.

இந்நிலையில் திராவிடர் இயக்க தமிழர் பேரவையின் பொதுச் செயலாளர் சுப வீரபாண்டியன் அவர்கள் தமிழ்நாட்டின் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதியுடன் தொடர்பு கொண்டு பேசியதோடு, கலைஞரின் செய்தியை ஒரு அறிக்கையாகவும் வெளியிட்டு பழ. நெடுமாறன் அவர்களை உண்ணாநிலைப் போராட்டத்தை கைவிடும்படி கோரியிருந்தார்.

ஆனால் கலைஞரின் உத்தியோகபூர்வமான வேண்டுகோளை எதிர்பார்ப்பதாக பழ. நெடுமாறன் தரப்பில் தெரிவிக்கப்பட்டதை அடுத்து கலைஞர் கருணாநிதி அவர்கள் பழ.நெடுமாறன் அவர்களை உண்ணாநிலைப் போராட்டத்தை கைவிடும்படி உத்தியோகபூர்வமாக வேண்டுகோள் விடுத்திருந்தார்.

கலைஞர் கருணாநிதியின் வேண்டுகோள் குறித்து போராட்டக் குழுவினருடன் பழ. நெடுமாறன் அவர்கள் ஆலோசனை நடத்தினார். ஆலோசனையின் முடிவில் உண்ணாநிலைப் போராட்டத்தை தொடர்வது என்றும், அதே வேளை கலைஞரின் சந்திப்பிற்கான அழைப்பை ஏற்பது என்று முடிவாகியுள்ளது.

இதையடுத்து பழ. நெடுமாறன் அவர்களின் உண்ணாநிலைப் போராட்டம் மூன்றாவது நாளான இன்றும் தொடர்ந்து நடைபெற்று வருகின்றது.

கலைஞர் கருணாநிதி தற்பொழுது சுற்றுப் பயணம் மேற்கோண்டிருக்கிறார். இரண்டு நாள் கழித்தே அவர் சென்னை திரும்புகிறார். பழ. நெடுமாறன் அவர்கள் உண்ணாநிலைப் போராட்டத்தை கைவிட மறுத்தது குறித்து கலைஞர் ஏமாற்றம் அடைந்திருப்பதாக தெரியவருகிறது.

தனக்கு எதிராக மேற்கொள்ளப்படும் அரசியல் நடவடிக்கையாக கலைஞர் இதை சந்தேகிக்கிறார் என்றும் அவருடைய நெருங்கிய வட்டாரங்கள் மூலம் அறிய முடிகிறது. பழ. நெடுமாறன் அவர்களுடைய இன்றைய ஆலோசனைக் கூட்டத்தில் மதிமுகின் பொதுச் செயலாளர் வைகோ கலந்து கொண்டதும் கலைஞரின் சந்தேகத்தை அதிகரித்துள்ளது.

பழ. நெடுமாறன் அவர்களின் தூய்மையான போராட்டம் அரசியல் ஆக்கப்படுவது மிகவும் கவலைக்குரிய விடயம் என்று அரசியல் ஆய்வாளர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர். எனினும் கலைஞர் பழ. நெடுமாறன் அவர்களுடன் மேற்கொள்ளவிருக்கும் சந்திப்பை அடுத்த இந்தப் பிரச்சனை தீர்ந்துவிடும் என்றும் அவர்கள் நம்புகின்றனர்.

Monday, September 10, 2007

என்ன செய்ய??!!

பூக்களை தருவதற்காய்

நான் வந்து கொண்டிருக்கிறேன்

மாட்டுவண்டி ஒன்றிலே

கரடு முரடான பாதையிலே

மெது மெதுவாய் வந்து கொண்டிருக்கிறேன்

கண்ணைப் பறிக்கும்

வண்ணம் கொண்ட

சொகுசுக் காரிலே

எனக்குப் போட்டியாக

அவர்களும் வருகிறார்கள்

வாண வேடிக்கைகள் முழங்க

சுவரெல்லாம் செய்திகள் சொல்ல

ஆடம்பரமாய்

அவர்கள் வருகிறார்கள்

நான் தருவதற்கு

பூக்களை கொண்டு வருகிறேன்

அவர்கள் விற்பதற்கு

மலத்தைக் கொண்டு வருகிறார்கள்

மக்கள் எல்லோரும்

காரை நோக்கியே

கட்டுக்கடங்காமல் ஓடி வருகிறார்கள்

ஓடி வந்து தங்கத் தாம்பாளத்தில்

வைத்து அவர்கள் கொடுத்ததை

சந்தோசமாய் வாங்கிச் செல்கிறார்கள்

என்னையும் பூக்களையும் சீண்டுவார்தான்

யாருமில்லை

நான் பார்த்துக் கொண்டிருக்கும் போதே

வேறு கார்களும் என்னை முந்திச்

செல்கின்றன

சுற்று முற்றும் பார்க்கிறேன்

கண்ணுக்கு எட்டிய தூரம் வரை

பீக்களை மொய்க்கும்

ஈக்களே தெரிகின்றன

இனி இந்தப் பூக்களை

நான் என்ன செய்ய??!!

Friday, September 07, 2007

சிலாவத்துறை நாடகம்

கிழக்கைக் கைப்பற்றிவிட்டதாக சொல்லிக்கொள்ளும் சிறிலங்கா அரசு, வடக்கிலும் மன்னாரின் சிலாபத்துறைப் பகுதியை கைப்பற்றிவிட்டதாக அறிவித்துள்ளது.

சிலாபத்துறை, அரிப்பு போன்ற பகுதிகளை கடந்த 01.09.07 அன்று சிறிலங்காப் படைகள் சென்றடைந்தன. இதன் மூலம் வடக்கிலும் விடுதலைப் புலிகளின் ஒரு பகுதியை கைப்பற்றி விட்டதாக சிறிலங்கா அரசு தம்பட்டம் அடித்து வருகிறது.

கிழக்கை முற்றுமுழுதாகக் கைப்பற்றி விட்டதாக சிறிலங்கா அரசு சொல்வதிலும் உண்மை இல்லை. வடக்கில் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த சிலாபத்துறையை கைப்பற்றிவிட்டதாக சொல்வதிலும் உண்மை இல்லை.

கிழக்கு முற்றுமுழுதாக சிறிலங்காப் படைகளின் கட்டுப்பாட்டில் இல்லை என்பதற்கு அங்கு நடந்து வருகின்ற சம்பவங்களே சான்று. விடுதலைப் புலிகளே கிழக்கில் இல்லையென்று கூறிய சிறிலங்கா இராணுவம் கடந்த வாரம் அம்பாறையில் விடுதலைப் புலிகளின் முகாமில் இருந்து வந்த 8 இளவயதுப் போராளிகளை கைதுசெய்திருப்பதாக கூறியுள்ளது.

கடந்த 27.08.09 அன்று விடுதலைப் புலிகள் தம்மிடம் இணைந்த வயது குறைந்த 14 பேரை யுனிசெப் அமைப்பிடம் ஒப்படைப்பதற்கு விடுதலைப் புலிகள் முன்வந்தார்கள். இவர்களை அழைத்துக் கொண்டு பொத்துவில் திருக்கோவில் வீதியில் உள்ள தாண்டியடிக்கு விடுதலைப் புலிகள் வரும் போது சிறிலங்கா சிறப்பு அதிரடிப்படை தாக்குதல் நடத்தியது.

இந்தத் திடீர் தாக்குதலினால் 14 சிறுவர்களும் பல திசைகளில் சிதறி ஓடினார்கள். இதில் 6 பேர் மீண்டும் விடுதலைப் புலிகளின் முகாம்களுக்கே திரும்பி சென்று விட்டார்கள். மிகுதி எட்டுப் பேரும் வழி தெரியாது காடுகளில் தத்தளித்த போது சிறிலங்கா சிறப்பு அதிரடிப் படையால் கைது செய்யப்பட்டார்கள்.

இந்தச் சம்பவம் சில விடயங்களை உணர்த்துகிறது. அம்பாறையில் அனைத்துப் பகுதிகளையும் கைப்பற்றி விட்டோம் என்று சிறிலங்கா இராணுவம் கூறினாலும் அம்பாறையின் குறிப்பிட்டளவு காட்டுப் பகுதியில் விடுதலைப் புலிகள் முகாம்களை அமைத்து நிலைகொண்டுள்ளார்கள்.

அத்துடன் சில காரமங்களை பகலில் சிறிலங்கா அதிரடிப் படையும் இரவில் விடுதலைப் புலிகளும் கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறார்கள். குறிப்பிட்ட தாண்டியடிப் பகுதியில் பகலில் அதிரடிப் படையினர் நிலைகொண்டு விட்டு, மாலையானதும் விலகிச் சென்றுவிடுவார்கள். இரவில் விடுதலைப் புலிகளின் நடமாட்டம் அப் பகுதியில் இருக்கும். அதனாலேயே விடுதலைப் புலிகள் சிறுவர்களை ஒப்படைப்பதற்கு மாலை வேளையை தேர்ந்தெடுத்தார்கள்.

இரண்டாம் கட்ட ஈழப் போரின் போதும் இப்படித்தான் நடந்தது. ஆரம்பித்தில் சிறிலங்காப் படையினர் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்து அனைத்துப் பகுதிகளையும் கைப்பற்றினார்கள். காடுகளுக்குள் சிறு சிறு குழுக்காளாக பின்வாங்கிய விடுதலைப் புலிகள் பின்பு மெதுமெதுவாக கிராமங்களிலும் நடமாட்டத்தை தொடங்கினார்கள். அப்பொழுதும் பல கிராமங்களில் நிலைகொண்டிருந்த அதிரடிப் படை இரவு வேளைகளில் அங்கிருந்து விலகிவிடும். இவ்வாறு காடுகளிலும், இரவு நேரங்களில் கிராமப் புறங்களிலும் நடமாடிய புலிகள் பின்பு சிறிய சிறய கரந்தடித் தாக்குதல்கள் மூலமும், வடக்கில் நடந்த பெரும் சமர்களின் மூலம் கிழக்கில் தமது கட்டுப்பாட்டுப் பிரதேசத்தை பெருப்பித்தார்கள்.

இன்று கிழக்கில் அம்பாறை, மட்டக்களப்பு, திருகோணமலை என்று அனைத்துப் பிரதேசங்களிலும் விடுதலைப் புலிகளின் சிறிய சிறிய தாக்குதல்கள் இடம்பெறுகின்றன. பெரும்பாலானவை கண்ணிவெடி மற்றும் கிளைமோர் தாக்குதல்களாக இருக்கின்றன. ஒட்டுக்குழுக்கள் மீதும் தாக்குதல்கள் நடத்தப்படுகின்றன. ஒட்டுக்குழுக்கள் ஒரு பக்கம் தங்களுக்குள் மோதிக்கொள்ள மறுபக்கம் விடுதலைப் புலிகளின் தாக்குதல்களும் நடைபெறுகின்றன.

அன்று நடந்த அதே சம்பவங்கள் கிழக்கில் மீண்டும் நடக்கத் தொடங்கியுள்ளன. விரைவில் கிழக்கும் மீண்டும் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் வரும் என்று உறுதியாக நம்பலாம்.

கிழக்கில் சிறிலங்காப் படைகளின் பிடியில் இருந்து சில பகுதிகள் கைநழுவ ஆரம்பித்துள்ள இந்த வேளையில், சிறிலங்கா அரசு வடக்கில் ஒரு நாடகத்தை ஆடி முடித்திருக்கிறது. அதுதான் சிலாவத்துறையை தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்திருப்பதாக சிறிலங்கா அரசு வெளியிட்டிருக்கும் அறிக்கை. சிறிலங்கா அரசு ஒரு மோசடியான ஏமாற்று நாடகம் செய்திருக்கிறது என்பதை வரைபடத்தைப் பார்த்தே இலகுவாகப் புரிந்து கொள்ளலாம்.

வவுனியாவில் இருந்து மன்னாரை நோக்கிச் சொல்கின்ற ஏ 30 பாதையும், மதவாச்சியில் இருந்து மன்னாரை நோக்கிச் சொல்கின்ற ஏ 14 பாதையும் சிறிலங்காப் படைகளின் கட்டுப்பாட்டில் நீண்டகாலமாகவே இருக்கின்றன. இந்தப் பாதையின் வடக்குத் திசையிலேயே விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதி இருக்கிறது. இந்தப் பாதையிலும், அதற்கு அண்டிய பகுதிகளிலும் இருந்தபடிதான் சிறிலங்காப் படைகள் மடுவை நோக்கி தாக்குதல்களை நடத்தி வருகின்றன.

1990ஆம் ஆண்டு விடுதலைப் புலிகள் சிலாவத்துறையில் இருந்து படைத்தளம் மீது ஒரு பாரிய தாக்குதலைத் தொடுத்தனர். அந்தத் தாக்குதலில்தான் மேயர் டாம்போ கரும்புலித் தாக்குதலை மேற்கொண்டார். மேயர் டாம்போ ஓட்டி வந்த வெடிமருந்து நிரப்பிய வண்டி இடையிலேயே சிறிலங்காப் படைகளின் தாக்குதலுக்கு இலக்காகி வெடித்துச் சிதறியது. அத்துடன் சிறிலங்கா வான்படையினர் மிகக் கடுமையான வான்தாக்குதல்களிலும் ஈடுபட்டனர்.

சிலாவத்துறைத் தாக்குதல் விடுதலைப் புலிகளுக்கு வெற்றியைக் கொடுக்கவில்லை. விடுதலைப் புலிகள் பின்வாங்க நேர்ந்தது. அதன் பிறகு குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய சண்டைகள் எதுவும் இப் பகுதியில் நிகழவில்லை.

சிறிலங்காப் படைகள் 1999ஆம் ஆண்டு பல கட்டங்களாக மேற்கொள்ளப்பட்ட "ரணகோச" நடவடிக்கை மூலம் மடு, பள்ளமடு போன்ற பகுதிகளை கைப்பற்றியிருந்தன. பின்பு அந்தப் பகுதிகள் அனைத்தும் விடுதலைப் புலிகளின் ஓயாத அலைகள் மூன்றின் மூலம் மீட்கப்பட்டன. ஆனால் அப்பொழுதும் விடுதலைப் புலிகளின் படையணிகள் மதவாச்சி மன்னார் வீதியை தாண்டிச் செல்லவில்லை.

ஆகவே மதவாச்சி மன்னார் வீதிக்கு தெற்குப் புறமாக இருக்கின்ற, விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் இல்லாத சிலாவத்துறை, அரிப்பு போன்ற பகுதிகளுக்கு தன்னுடைய படையினரை நடைபயணம் செய்ய வைத்துவிட்டு, சிறிலங்கா அரசு தன்னுடைய சிங்கள மக்களை ஏமாற்றி உள்ளது.

இதை வேறுவிதமாக விளக்குவது என்றால் மன்னார் மாவட்டத்தில் உள்ள ஐந்து பிரதேச சபைகளில் மாந்தை மேற்கு, மடு ஆகிய இரண்டு பிரதேசசபைப் பகுதிகளின் பெரும்பகுதி விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் இருக்கின்றன. மன்னார் நகரம், நானாட்டான், முசலி ஆகிய மூன்று பிரதேச சபைக்குள் அடங்குகின்ற பகுதிகளின் பெரும்பகுதி சிறிலங்காப் படைகளின் கட்டுப்பாட்டில் இருக்கின்றன.இதில் முசலி பிரதேச சபைப் பகுதிக்குள் அடங்குகின்ற சிலாவத்துறை, அரிப்புப் பகுதியிலேயே சிறிலங்காப் படைகள் தமது "பாரிய படை நடவடிக்கையை" செய்திருக்கின்றன.

சிலாவத்துறை, அரிப்பு போன்ற பகுதிகளில் சிறிலங்காப் படைகளின் நிலைகள் இல்லாத இடங்களில் விடுதலைப் புலிகளின் நடமாட்டங்கள் இருந்தது உண்மை. சிலாவத்துறையை ஒரு வழங்கல் பாதையாகவும் விடுதலைப் புலிகள் பயன்படுத்தியதாக சொல்லப்படுகிறது. ஆனால் இவ்வாறான பகுதிகள் இலங்கைத் தீவு முழுவதும் இருக்கின்றன. அதற்காக அப் பகுதிகள் அனைத்தும் இராணுவரீதியாக விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதி என்று வரையறுக்க முடியாது.

ஆனால் இந்த நடவடிக்கை மூலம் சில நன்மைகள் இருப்பதாக சிறிலங்கா அரசு கருதுகிறது. விடுதலைப் புலிகள் மன்னார் மீது தாக்குதல் நடத்தக்கூடும் என்ற அச்சம் சிறிலங்கா அரசுக்கு இருக்கிறது. அப்படி விடுதலைப் புலிகள் மன்னாரில் இருக்கின்ற தள்ளாடி போன்ற படைத் தளங்களை தகர்ப்பார்களாயின் மன்னாரின் தெற்குப் பகுதி நோக்கி விடுதலைப் புலிகளின் படையணிகள் வேகமாக நகர்ந்து முன்னேறிவிடலாம். அல்லது சிலாவத்துறைப் பகுதியில் தமது படைகளை அனுப்பி மன்னார் மீது பல முனைத் தாக்குதலைகளை விடுதலைப் புலிகள் தொடுக்கலாம்.

மன்னாரின் தெற்குப் பகுதியிலும் பாரிய படைத்தளங்களை நிறுவுவதன் மூலம் இவைகளை தடுத்து விட்டதாக சிறிலங்கா அரசு கருதுகிறது. இதைக் கருத்தில் கொண்டே சிலாவத்துறை நோக்கி படைகளை சிறிலங்கா அரசு நகர்த்தியுள்ளது. அத்துடன் வடக்கிலும் ஒரு பகுதியை கைப்பற்றி விட்டதாக பெரும் பிரச்சாரங்களை மேற்கொண்டு சிங்களவர்களையும் குசிப்படுத்தலாம் என்று நம்புகிறது.

இப்படி சிறிலங்கா அரசு பல கணக்குகளைப் போட்டாலும், விடுதலைப் புலிகளின் நகர்வுகளால் அவைகள் பிழைத்துப் போகும் என்பதுதான் உண்மை