Wednesday, October 31, 2007

டக்ளஸ் கொடுத்த பணத்திற்கு என்ன ஆனது??!!

தமிழ்மணத்தில் தலித் மாநாடு பற்றி பல விவாதங்கள் நடத்து கொண்டிருந்த போது "கள்ள மௌனம்" சாதித்த சோபசக்தி இப்பொழுது வாய் திறந்திருக்கிறார்.

"மாநாட்டை நடத்தியவர்கள் புலிகளின் எதிர்ப்பாளர்கள்' என்று சிலர் இணையத்தளங்களில் ஓயாமல் கூக்குரலிடுகிறார்கள். போததற்குச் சிலர் வெளியான மாநாட்டு உரைகளிலிருந்து அசைக்க முடியாத எடுத்துக்காட்டுகளைக் காட்டித் தலித் அரசியலாளர்கள் புலிகளின் எதிர்ப்பாளர்கள் என்றும் நிறுவியிருக்கிறார்கள். இதற்கு எதற்கு இவர்கள் இவ்வளவு சிரமப்பட வேண்டும் என்பதுதான் எனக்கு உண்ணாண விளங்கவில்லை. நாங்கள்தான் பல வருடங்களாகவே "நாங்கள் அரசியலில் புலிகளின் சற்றேனும் விட்டுக்கொடுக்காத எதிரிகள்" என்று தமிழில் மட்டுமல்லாது பிரஞ்சு, ஆங்கிலம், சிங்களம், மலையாளம் எனப் பல பாஷைகளிலும் எழுதிவருகிறோமே! ஒளிவுமறைவில்லாமல் சொல்லி வருகிறோமே!"

இப்படி சோபாசக்தி தன்னுடைய தளத்தில் எழுதியிருக்கிறார். இதை முதலிலேயே சொல்லித் தொலைத்திருந்தால் பல கசப்புணர்வுகள் தவிர்க்கப்பட்டிருக்கும். "தலித் மாநாடு" என்ற பெயரில் விடுதலைப் புலிகளுக்கு எதிரானவர்கள் ஒன்று கூடுகிறார்கள் என்று நாம் மீண்டும் மீண்டும் சொல்வது உண்மை என்பதை அனைவரும் உணர்ந்திருப்பார்கள். மாநாடு நடக்கும் வரை கள்ள மௌனம் சாதித்து விட்டு இப்பொழுது கொக்கரிப்பதிலிருந்து இவர்களின் தீய நோக்கத்தை புரிந்து கொள்ளலாம்.

இதை விட சோபாசக்தி எழுதிய இன்னொரு விடயம் எனக்கு அதிர்ச்சியை தந்துள்ளது.

டக்ளஸ் தேவானந்தா கொடுத்த பணம் மாநாட்டு ஏற்பாட்டாளர்களுக்கு போய்ச் சேரவில்லையாம். மாநாட்டு ஏற்பாட்டாளர்கள் பணம் இல்லாமல் கஸ்ரப்படுகிறாராம்.

சோபாசக்தி எமக்கு காதுகுத்த முனைகிறாரா?

இப்படி ஒரு செய்தியைச் சொல்லி சோபாசக்திக்கு மாநாட்டு ஏற்பட்டாளர்கள் காது குத்தியுள்ளார்களா?

இந்தியா செல்வதற்கு வைத்திருக்கும் பணத்தில் சிறிதை இரக்கப்பட்டு தமக்கு கொடுப்பார் என்று மாநாட்டு ஏற்பாட்டாளர்கள் எதிர்பார்க்கிறார்களா?

உண்மையிலேயே டக்ளஸ் பணம் கொடுக்காது ஏமாற்றி விட்டாரா?

கொடுத்த பணத்தை இடையில் யாராவது அமுக்கி விட்டார்களா?

நிறையக் கேள்விகள் எழுகின்றன. யாரும் யாருக்கும் சளைத்தவர்கள் அல்ல என்பதால், அனைத்திற்குமே சந்தர்ப்பங்கள் உள்ளன. எதற்கும் இதைப் பற்றி உள்வட்டாரங்களில் விசாரித்துப் பார்க்க வேண்டும்.

இன்றைக்கு பத்திரிகை அலுவல்கள் இருக்கின்றன. நாளை "தீபாவளி இறுவட்டு" வேலைகள் முடிக்க வேண்டும். தொடர்ந்து வரும் நாட்களில் இறுவட்டுக்களை வினியோகிக்கும் வேலை இருக்கிறது.

தற்பொழுது "டக்ளஸ் கொடுத்த பணத்திற்கு என்ன ஆனது" என்று கண்டுபிடிக்கும் புலனாய்வு வேலைகளில் ஈடுபடுவது உடனடியாக சாத்தியம் இல்லை. இந்த வேலையை நண்பர் சாத்திரி மேற்கொண்டால் நல்லது. எனக்கு வேலை மிச்சம்.

3 comments:

Anonymous said...

டக்ளஸோடு முரண்படுகின்ற ரிபிசி வானொலி தங்களுடைய மாநாடு போல் கடைசியில் இதை நடத்தி முடித்துவிட்டது. அவர்களுடைய ஆட்களே அதிகமாக கலந்து கொண்டதோடு, நேரடி ஒலிபரப்பு, பேட்டிகள் எல்லாம் செய்தார்கள். அதனால் ஆத்திரத்தில் டக்ளஸ் பணம் கொடுக்காது விட்டிருப்பாரோ??

Anonymous said...

நீங்கள் ஏன் சாத்திரியிடம் கேட்கிறிர்கள்? கொழுவியிடம் கேட்டால் அவர் டக்ளஸின் பணத்திற்கு என்ன நடந்தது என்பதை ஒலிப்பதிவாகவோ வீடியோப் பதிவாகவோ வெளியிட்டு அசத்திவிடுவாரே! அவரிடம் கேட்டுப் பாருங்கள்! எங்களிற்கும் டக்ளஸ் பணத்திற்கு என்ன நடந்தது என்று அறிய ஆர்வமாக இருக்கிறது

கொழுவி said...

//நீங்கள் ஏன் சாத்திரியிடம் கேட்கிறிர்கள்? கொழுவியிடம் கேட்டால் அவர் டக்ளஸின் பணத்திற்கு என்ன நடந்தது //

சோபா சக்தி அந்த பணத்திற்கு என்ன நடந்தது என்பது குறித்து கேட்டதாக தெரியவில்லை. ஆனால் அவ்வாறு கொடுத்திருந்தால் அதனை ஆதாரத்துடன் உறுதிப்படுத்த கேட்டிருந்தார்.

குற்றச்சாட்டுக்களை சொல்பவர்கள் அதற்கான தகவல்களையும் சொல்லத் தானே வேண்டும் என எதிர்பார்ப்பது வழமை தான்.

அல்லாது விடில்.. போகிற போக்கில் நீ புலி என இராயகரன் வகையறாக்கள் சொல்லிச் செல்வது போல

நீங்களும் நீ அரச கூலி.. நீ பணம் வாங்கியவன்.. என முத்திரை குத்துவது போலாகிவிடும்.