Wednesday, August 29, 2007

லலிதாவின் கதை (பாகம் 2)

டென்மார்க்கில் தன்னை அம்மன் என்று சொல்லி மக்களை ஏமாற்றுகின்ற அபிராமி எனப்படும் லலிதா என்கின்ற பெண்மணியை கடவுள் என்று உண்மையிலேயே நம்புகின்ற பலர் ஐரோப்பாவில் இருக்கத்தான் செய்கிறார்கள். அவரை வாழும் தெய்வம், நடமாடும் தெய்வம் என்றெல்லாம் போற்றிப் புகழ்கிறார்கள்.

இப்படி இவர்கள் லலிதாவை நம்புவதற்கு என்ன காரணம்? ஆயிரக் கணக்காண தமிழர்களை முட்டாள்கள் ஆக்கி தன்னை நம்ப வைக்க லலிதாவால் எப்படி முடிந்தது? இந்தக் கேள்விகளுக்கான பதில் ஒன்றும் கடினமில்லை. தன்னை கடவுள் என்று சொல்கின்ற அனைத்து மோசடிப் பேர்வழிகளும் கையாளுகின்ற அதே வழியைத்தான் லலிதாவும் கையாளுகிறார்.

தன்னிடம் வருபவர்களை பயமுறுத்துவது, வாயிலே இருந்து லிங்கம், மாணிக்கம் போன்ற வாய்க்குள் ஒளித்து வைக்கக்கூடிய மிகச் சிறிய பொருட்களை வாயிலிருந்து வரவழைத்து மாயாஜாலம் புரிவது, பெரும்பாலும் பலிப்பதற்கு சந்தர்ப்பம் உள்ளவைகளையே சொல்வது, பலிக்காது விட்டால் விதி என்று சொல்வது. இவைகள்தான் லலிதா மக்களை ஏமாற்றுவதற்கு பயன்படுத்துகின்ற வழிமுறைகள்.

லலிதா பலருடைய நோயைக் குணப்படுத்தி உள்ளதாக அவருடைய பக்தர்கள் புகழ்கின்றனர். அவ்வாறான கதைகளை பரப்புகின்றனர். இவைகள் உண்மையா என்று அறிவதற்கு பல இடங்களில் விசாரித்தோம். கிடைத்த தகவல்களுள் சுவாரஸ்யமான தகவல்களோடு அதிர்ச்சிகரமான தகவல்களும் இருந்தன.

டென்மார்க்கிலே லலிதாவின் கோயிலுக்கு சென்று வருகின்ற ஒருவர் இருந்தார். அவர் நாட்டின் மீது பற்றுக்கொண்டு நாட்டுக்காகவும், மக்களுக்காகவும் தன்னால் இயன்ற பணிகளையும் செய்து கொண்டிருந்தார். திடீரென்று ஒருநாள் அவரை புற்றுநோய் தாக்கியது. மருத்துவர்கள் அவர் பிழைப்பதற்கு சாத்தியங்கள் மிகக் குறைவு என்று சொல்லிவிட்டனர்.

அவர் இடிந்து போனார். ஓடிப் போய் லலிதா முன் நின்றார். லலிதாவே சரணம் என்றார். லலிதாவும் "கவலைப்படாதே, உன்னுடைய நோய் குணமாகும்" என்று அருள்வாக்குச் சொன்னார். அவரும் அதை முழுவதும் நம்பி லலிதாவே கதியென்று கிடந்தார். மருத்துவர் தந்த மருந்துகளை கவனிக்காது விட்டார். மருத்துவர் தந்த மருந்துகளை விட லலிதாவே தன்னைக் காப்பார் என்று நம்பினார். ஓரிரு மாதங்களில் அவர் பரிதாபமாக இறந்து போனார்.

இதே போன்று ஜேர்மனியில் இன்னும் ஒருவர். அவருக்கும் புற்றுநோய் தாக்கியிருந்தது. லலிதாவைப் பற்றி கேள்விப்பட்டு லலிதாவிடம் நம்பிக்கையோடு போனார். லலிதாவைக் கண்டதும் அவருக்கு ஒரு புத்துணர்ச்சி ஏற்பட்டது. அத்தனை நாளும் அவருக்கு இருந்த வலி குறைவது போல் இருந்தது. லலிதா மீது முழு நம்பிக்கை ஏற்பட்டு விட்டது. அவரிடமும் லிலிதா புற்றுநோய் நீங்கும் என்றுதான் அருள்பாலித்தார். லலிதா அவருக்கு ஒரு தேசிக்காயும் சந்தணமும் கொடுத்து அனுப்பினார்.

மிக உற்சாகத்துடன் வீடு திரும்பிய அவர் மருத்துவர் தந்த மருந்துகளை புறம் தள்ளினார். லிலதா தந்த தேசிக்காயை முகர்ந்து பார்ப்பதும், சந்தணத்தை பூசுவதுமே அவர் தனக்கு செய்த வைத்தியமாக இருந்தது. அவர் ஒரு வாரத்திலேயே இறந்து போனார்.

நாகரீகம் கருதி இறந்து போனவர்கள் பெயர் விபரங்களை தவிர்த்திருக்கிறோமே தவிர இவைகள் நூறு வீதம் உண்மையான சம்பவங்கள். தேவையேற்படின் இவைகள் உண்மையென்று நிரூபிப்பதற்கு தயாராகவே இருக்கிறோம். உண்மையில் இறந்து போன இருவரும் மருத்துவர்களின் ஆலோசனைகளை முற்றுமுழுதாக கடைப்பிடித்திருந்தால் மேலும் சில காலம் உயிர் வாழந்திருக்க முடியும். சில வேளைகளில் நோய் குணமாகி இருக்கவும் கூடும். ஆனால் லலிதாவின் பேச்சை நம்பி இறந்து போய்விட்டார்கள். இவர்களின் இறப்புக்கு லலிதாவும் ஒரு காரணம் என்பது மறுக்க முடியாத உண்மை.

இதே வேளை லலிதாவின் பக்தையாக இருந்து புற்றுநோய் குணமான ஒரு பெண்ணும் ஜேர்மனியில் இருக்கிறார்.

லலிதாவின் பக்தையான அவருக்கும் புற்றுநோய் வந்தது. மருத்துவர்கள் குணமடைவதற்கு சாத்தியங்கள் குறைவு என்றனர். லலிதாவோ வழமை போன்று நோய் குணமடையும் என்று சொன்னார். அந்தப் பெண் தினமும் வீட்டில் லலிதாவின் அம்மன் "மேக்கப்" போட்ட புகைப்படங்களை வைத்து வழிபட்டு வந்தார். அதே வேளை மருத்துவர் தந்த மருந்துகளை வேளாவேளைக்கு உட்கொண்டார். ஆனால் அவருக்கு நோய் குணமடையவில்லை. மேலும் தீவிரம் அடைந்தது.

அப்பொழுது ஒருநாள் அவருடைய "அலேலூயா" நண்பர்கள் சிலர் அவரை வற்புறுத்தி பிரார்த்தனைக் கூட்டத்திற்கு அழைத்துக் கொண்டு போனார்கள். அதன் பிறகு அவருடைய நோய் குணமடையத் தொடங்கிவிட்டது. இன்றைக்கு அவர் தன்னுடைய வீட்டில் இருந்த லலிதாவின் படங்களை களற்றி எறிந்துவிட்டார். இன்றைக்கு அவருடைய வீட்டில் "இயேசு ஜீவிக்கிறார்" என்ற வார்த்தைகளே தொங்குகின்றன. அவருடைய குடும்பமே "அலேலூயா" என்று கத்துகிறது.

உண்மையில் அவருடைய நோய் மாறியதற்கு யேசு காரணம் இல்லை. மருத்துவர் தந்த மருந்துகளும், அவர் தொடர்ந்து செய்த வைத்தியங்களுமே காரணம். ஆனால் அவர் யேசுதான் காரணம் என்று அப்பாவித்தனமாக நம்புகிறார். அவர் பிரார்த்தனைக் கூட்டத்திற்கு போகாது விட்டிருந்தாலும் அவருடைய நோய் குணமாகி இருக்கும். அப்பொழுது அவர் லலிதாதான் தன்னுடைய நோயைக் குணப்படுத்தியதாக நம்பியிருப்பார்.

இன்னும் ஒரு இளைஞனின் கதை இருக்கிறது. நோய் கண்டு வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட அவனை பரிசோதித்த மருத்துவர்கள் அவனிடம் புற்றுநோய்க்கான அறிகுறிகள் இருப்பதாக கூறினார்கள். புற்றுநோய்க்கான வைத்தியசாலைக்கும் அவன் மாற்றப்பட்டான். அவனுடைய இரத்தம் பரிசோதனை கூடத்திற்கு அனுப்பப்பட்டது.

அவனுடைய தாயும் லலிதாவின் ஒரு பக்தைதான். தாய் லலிதாவிடம் போய் நின்று கதறினார். லலிதா மீண்டும் வழமையாகச் சொல்வது போன்று மகனுடைய நோய் குணமாகும் என்று சொன்னார்.

சில நாட்கள் கழித்து மருத்துவ பரிசோதனைக் கூடத்தில் இருந்து அறிக்கை வந்தது. மகனுக்கு வந்திருப்பது புற்றுநோயே அல்ல என்று அந்த அறிக்கை சொன்னது. இப்பொழுது அந்தத் தாய் பரவசத்தின் உச்சிக்கே போய் விட்டார்.

தகவல் லலிதாவிற்கும் போனது. இந்த அற்புதத்தை எல்லோரிடமும் சொல்லும்படி லலிதா கட்டளை இட்டார். இப்பொழுது அந்தப் அப்பாவித் தாய் லலிதா தன்னுடைய மகனின் புற்றுநோயை இல்லாமல் செய்த "அற்புதத்தை" காண்போரிடம் எல்லாம் சொல்லிவருகிறார்.

இங்கே உண்மையில் அந்த இளைஞனுக்கு புற்றுநோயே வரவில்லை. மருத்துவர்கள் புற்றுநோயாக இருக்கக்கூடும் என்று சந்தேகப்பட்டார்கள். அவ்வளவுதான். அந்த இளைஞனின் தாய் லலிதாவிடம் செல்லாதுவிட்டிருந்தாலும், அதே மருத்துவ அறிக்கைதான் வந்திருக்கும். செல்லவில்லை என்பதற்காக இல்லாத புற்றுநோய் இருப்பதாக அறிக்கை மாறியிருக்காது. ஆனால் இந்த சிறிய விடயத்தைக் கூட புரியாத அளவிற்கு அந்தத் தாய் அப்பாவியாக இருக்கிறார்.

இந்த அப்பாவித்தனமும், முட்டாள்தனமுமே லலிதா போன்றவர்களை கடவுளாக மாற்றி இருக்கிறது.

இந்த இடத்தில் ஒரு விடயத்தை சொல்ல வேண்டும். பொதுவாக தம்மை கடவுள் என்று சொல்பவர்களிடம் கொடிய நோய்கள் வருகின்ற போதுதான் பலர் போவார்கள். புற்றுநோய் போன்ற கொடிய நோய்கள் வருகின்ற போது மருத்துவர்களும் குணப்படுவதற்கு சாத்தியங்கள் உண்டு என்று உறுதியாகச் சொல்லமாட்டார்கள். அப்படிச் சொல்லி குணமாகாது விட்டால் மருத்துவர்கள் பின்பு பல பிரச்சனைகளை சந்திக்க வேண்டியும் வரும்.

இதைத்தான் இந்த சாமியாடிகள் பயன்படுத்திக் கொள்கிறார்கள். தம்மை நம்பி வருபவர்களிடம் நோய் குணமாகிவிடும் என்று சொல்லிவிடுவார்கள். சிலவேளைகளில் குணமடைந்தால், தம்மால்தான் குணமானது என்று நம்பவைத்தம் விடுவார்கள். மருத்துவர்கள் கைவிட்ட எம்மை லலிதா காப்பாற்றிவிட்டார் என்று பக்தர்களும் நம்பி விடுவார்கள்.

இப்படித்தான் இவர்களின் பிழைப்பு நடக்கிறது. இவர்கள் தங்கள் பிழைப்புக்காக மக்களை ஏமாற்றுகிறார்கள். அவர்களின் பணத்தை பிடுங்குகிறார்கள். சிலவேளைகள் அவர்களுடைய சாவுக்கும் காரணமாகி விடுகிறார்கள். ஆனால் எமது மக்கள் விழிப்புறும் வரை எதுவுமே மாறப்போவது இல்லை.

Friday, August 24, 2007

விலகவேண்டியது யார்?

எமது தளத்தில் "விலகுகிறேன் - சோனியா அதிரடி முடிவு", என்றும் "விலகுகிறோம் - பார்ப்பனர்கள் அதிரடி முடிவு" என்றும் இரண்டு செய்திகள் வெளியாகி இருந்தன. இந்தச் செய்திகள் தமிழ்நாட்டில் இருந்து வெளிவரும் "தமிழன் எக்ஸ்பிரஸ்" இதழில் வெளியானது போன்ற தோற்றத்தையும் நாம் கொடுத்திருந்தோம்.

ஆனால் தமிழன் எக்ஸ்பிரஸிலோ இருந்த செய்தி வேறு. "விலகுகிறேன் - பிரபாகரன் அதிரடி முடிவு" இதுதான் தமிழன் எக்ஸ்பிரஸ் வெளியிட்டிருந்த அட்டைப்படக் கட்டுரை. தமிழீழத்தின் தேசியத் தலைவரின் படத்தை அட்டையில் தாங்கியபடி "விலகுகிறேன் - பிரபாகரன் அதிரடி முடிவு" என்று கொட்டை எழுத்துக்களில் அந்தச் செய்தி வெளியாகி இருந்தது. தமிழ்நாட்டில் இதைப் பார்த்த பலர் பரபரப்புடன் "தமிழன் எக்ஸ்பிரஸ்" இதழை வாங்கிப் படித்தார்கள். சிலர் தமிழன் எக்ஸ்பிரஸ் வெளியிட்ட செய்தியை நம்பவும் செய்தார்கள்.

இந்தச் செய்தியை அறிந்த நாமும் சோனியா விலகுவதாகவும், பார்ப்பனர்கள் விலகுவதாகவும் "புருடா" விட்டுப் பார்த்தோம். ஆனால் யாரும் நம்பவில்லை. செய்தியை வெளியிட்ட எம்மை கிண்டலோடும் அனுதாபத்தோடும்தான் பார்த்தார்கள்.

எமக்கு ஒன்று புரிந்தது. எமது தளத்தை வாசிக்கின்ற பெரும்பாலானவர்கள் புத்திசாலிகளாகவும், தமிழன் எக்ஸ்பிரஸ் படிப்பவர்களில் பெரும்பாலானவர்கள் முட்டாள்களாகவும் இருக்கிறார்கள். இல்லையென்றால் பி.ராமன் போன்றவர்களால் தமிழன் எக்ஸ்பிரஸ் இதழில் தொடர்ந்து "கதை" எழுத முடியாது. பி.ராமன் என்கின்ற பிராமணியன் தமிழன் எக்ஸ்பிரஸில் தொடர்ந்து எழுதிவந்த கதைகளின் சாராம்சம் இன்றைக்கு அட்டைப்படக் கதையாகவே வெளிவர அதை நம்பிப் படிக்கின்ற அளவிற்கும் சிலருடைய மூளை இருக்கிறது. இதுதான் நாம் உணர்ந்து கொண்ட செய்தி.

பி.ராமன் போன்றவர்கள் தொடர்ச்சியாக இரண்டு விடயங்களை மக்கள் மத்தியில் பரப்ப முனைந்து வருகின்றார்கள். இந்தியா தலையிட்டால் மாத்திரமே ஈழத் தமிழர்களுக்கு விடிவு வரும் என்பது ஒன்று. இரண்டாவதுதான் மிக முக்கியமானது. அப்படி இந்தியா ஈழப் பிரச்சனையில் தலையிட வேண்டுமென்றால் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் தலைமைப் பொறுப்பில் இருந்து விலக வேண்டும்.

ஈழத் தமிழருக்கு விடிவு ஏற்படுவதற்கு விடுதலைப் புலிகள் தலைமைத்துவத்தில் மாற்றம் அவசியம் என்ற கருத்தை இவர்கள் மிகவும் நசூக்காக பரப்பி வருகிறார்கள். இப்பொழுது அவ்வாறான அர்த்தம் வருவது போன்று அட்டைப்படக் கட்டுரை வெளியிடுகின்ற அளவிற்கு வந்து விட்டார்கள்.

விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனை தமிழீழ மக்கள் தேசியத் தலைவர் என்றுதான் அழைப்பார்கள். இந்தியப் புலனாய்வுத் துறையை சேர்ந்தவர்களுக்கு அவர்களின் கைக்கூலிகளுக்கும் "தேசியத் தலைவர்" என்றால் என்றவென்று தெரியவில்லை. அவர்கள் "தேசியத் தலைவர்" என்றால் இந்தியாவின் ஜனாதிபதி, பிரதமர் போன்று மாற்றக்கூடிய பதவிகள் என்று நினைத்துவிட்டார்கள் போல் உள்ளது.

உண்மையில் இவர்கள் பரப்பி வருகின்ற கருத்தின் அடிப்படையே தவறானது. இந்தியா தலையிட்டால்தான் ஈழத் தமிழர்களுக்கு விடிவு வரும் என்று ஈழத் தமிழர்கள் யாரும் கருதவில்லை. இந்தியா தலையிடவும் தேவையில்லை. இந்தியா தலையிட்டு பல்லாயிரக் கணக்கான தமிழர்களை கொன்றும், பெண்களை வல்லுறவுக்கு உட்படுத்தியும் "விடிவு" வாங்கித் தந்தது போதும்.

உண்மையிலேயே இந்தியா ஈழத் தமிழர்களுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்று நினைத்தால், இருந்த இடத்தில் இருந்தபடியே சில விடயங்களைச் செய்யட்டும். ஈழத் தமிழர்களை அழிக்கின்ற சிறிலங்காவிற்கு உதவி செய்யாமல் இருக்கட்டும். அகதிகளுக்கான சர்வதேச சட்டங்கள் வழங்கியுள்ள உரிமைகளை மதித்து அதன்படி ஈழத் தமிழ் அகதிகளை நடத்தட்டும்.

உண்மையில் இந்தியா சில காரணங்களால் ஈழத்தில் தலையிட விரும்புகிறது. சீனா போன்ற நாடுகள் தலையிடுவதை இந்தியா விரும்பவில்லை. இந்த நாடுகளின் தலையீட்டை தடுப்பதற்கு இந்தியா தானே தலையிட விரும்பினாலும் விடுதலைப் புலிகளைக் காரணம் காட்டி இந்தியாவில் உள்ள பார்ப்பனிய சக்திகள் அதை தடுத்துவருகின்றன. என்ன செய்வது என்று தெரியாது இந்தியா குழம்பிப் போய்நிற்கிறது. தற்பொழுது "விடுதலைப் புலிகளின் தலைமையில் மாற்றம்" என்ற கோசத்தையும் இந்தியப் புலனாய்வுத்துறை கிளப்ப முனைகிறது.

இந்திய புலனாய்வுத்துறை ஈழத் தமிழர்களுக்கு எதிராக பல சதி நாடகங்களை ஆடிப் பார்த்து மண் கவ்விவிட்டது. ஆயினும் அது திருந்துவதாக தெரியவில்லை.

பார்ப்பனிய சிந்தனை கொண்ட ஒரு புலனாய்வுத்துறை இருக்கும் வரை இந்தியா உய்யப் போவதும் இல்லை. இந்தப் புலனாய்வுத்துறை மாற்றப்பட்டு உண்மையிலேயே இந்தியாவின் நலனை நேசிக்கின்ற ஒரு புலனாய்வுத்துறையை இந்தியா உருவாக்க வேண்டும்.

அப்பொழுது ஈழத் தமிழர்களும் இந்தியாவின் தலையீட்டை வரவேற்பார்கள். ஆகவே விலகவேண்டியது இந்தியாவின் பார்ப்பனிய சிந்தனையாளர்கள்தான். இவர்கள் ஹைபர் கணவாய் வழியாக மீண்டும் வந்த இடங்களுக்கே திரும்பிச் சென்றால்தான் இந்தியா உருப்படும். அப்படி பார்ப்பனியர்கள் திரும்பி செல்வதை எல்லோரும் விரும்புவார்கள்.

இவர்களின் சொந்த இடங்களில் தற்பொழுது அமெரிக்காவிற்கு ஆகாதவர்களே வாழ்ந்து வருகிறார்கள். அவர்களை அழிக்கவும் கட்டுப்படுத்தவும் கண்காணிக்கவும் பெரும் படைபலத்தையும் பொருளாதாரத்தையும் அமெரிக்கா செலவிட வேண்டி இருக்கிறது.

இந்தப் பார்ப்பனியர்கள் திரும்பிப் போனால் அங்கே வாழுகின்றவர்களை உண்டு இல்லை என்று ஆக்கி அமெரிக்காவிற்கு உதவி செய்வார்கள். ஆசியாவில் அமெரிக்காவின் நேரடியான பிரசன்னமும் குறையும். எல்லோரும் சற்று நிம்மதியாக இருக்கலாம்.

இந்த விடயத்தோடு சம்பந்தப்பட்ட மேலும் இரு ஆக்கங்கள்:

http://www.webeelam.com

Thursday, August 23, 2007

"விலகுகிறோம்" - பார்ப்பனர்கள் அதிரடி முடிவு!

உள்ளே நுழைந்த சாலமன் எடுத்த எடுப்பிலேயே, ""பிரிக்க முடியாதது என்னவோ..?'' என்று திருவிளையாடல் ஸ்டைலில் ஒரு கேள்வியைக் கேட்டார். உடனே, ""நீங்களும், உளவுத்துறையும்'' என்று நாம் கொடுத்த பதிலில் சட்டென உச்சி குளிர்ந்தவர், ""நீங்கள் சொல்வது உண்மை. ஆனால் இன்னொரு பதிலும் உண்டு. அது இலங்கை ராணுவத்திற்கும் -விடுதலைப் புலிகளுக்கும் இடையே நடக்கும் சண்டைதான்'' என்றபடி நியூஸ்களைச் சொல்ல ஆரம்பித்தார்."

"இலங்கை ராணுவத்திற்கும், விடுதலைப் புலிகளுக்கும், இடையே கடுமையான சண்டை நடந்து கொண்டிருக்கிறது. இங்கே பழ. நெடுமாறன் போன்றவர்கள், "விடுதலைப் புலிகளுக்கு உணவு எடுத்துச் செல்லப் போகிறோம்' என்று அறிவித்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் கடந்த ஆகஸ்ட் பதினைந்தாம் தேதி, கோட்டையில் கொடியேற்றி வைத்து சுதந்திர தின உரையாற்றிய முதல்வர் கருணாநிதி, இலங்கைத் தமிழர் பிரச்சினை பற்றி எந்தக் கருத்தும் தெரிவிக்கவில்லை. அதே நேரத்தில் அன்றைய தினம் பிரபல ஆங்கில நாளிதழ் ஒன்றில் மாநிலத்திற்கு அதிக அதிகாரம் கேட்டுப் போராடிய வரலாறுகள் பற்றி முதல்வரே நடுப்பக்கக் கட்டுரை ஒன்றை எழுதியிருக்கிறார். இதன் பின்னணியில் இலங்கையில் உள்ள தமிழ் நேஷனல் பார்ட்டி, (விடுதலைப் புலிகள் ஆதரவு பெற்ற கட்சி) "அதிகாரப் பகிர்வு குறித்து நாங்கள் ஒரு திட்ட முன் வடிவைக் கொடுக்கப் போகிறோம்' என்றும் அறிவித்துள்ளது. இந்தச் சம்பவங்கள் வெள்வேறு இடங்களில் நிகழ்ந்தாலும், ஒன்றுக்கு ஒன்று தொடர்புடையவையாகவே காட்சியளிக்கின்றன''

"விரிவாகச் சொல்லுங்கள்''

"இலங்கையில் போர் நடைபெற்று வருகிறது. அங்கே அமெரிக்கா போன்ற நாடுகளின் தலையீடு இந்தியாவிற்கு ஆபத்தானது என்ற கருத்து நிலவுகிறது. ஆனால் இந்தியா பேச்சுவார்த்தை நடத்துவதற்கு வர, இந்தியாவில் உள்ள பார்ப்பனர்களின் போக்கு ஒரு பெரும் தடையாக இருக்கிறது. இதனால் இந்தியா, இலங்கைத் தமிழர் பிரச்சினையில் ஒதுங்கி நிற்கிறது என்ற கவலை இந்திய நலன் மீது அக்கறை கொண்ட பலரிடம் இருக்கிறது. ஆகவே இந்தியா விடுதலைப் புலிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி மீண்டும் தொடர்புகளை ஏற்படுத்துவதற்கு அவர்கள் விரும்புகிறார்கள். அதற்கு முன்பு பார்ப்பனத் தலைவர்களிடமும் தூதுவர்கள் மூலம் பேச்சுவார்த்தை நடத்தியிருக்கிறார்கள். அப்போது, "நீங்கள் இங்கே அதிகார மையத்தில் இருந்து கொண்டு செய்கின்ற அட்டகாசங்களால் விடுதலைப் புலிகளுடன் அமர்ந்து பேச முடியாத ஒரு தர்மசங்கடமான சூழ்நிலை இந்தியாவுக்கு இருக்கிறது. அதை அமெரிக்கா, சீனா, பாகிஸ்தான் போன்ற நாடுகள் பயன்படுத்திக்கொண்டு ஈழப் பிரச்சனைக்குள் தலையிடுகின்றன. அதற்கு நீங்கள் இடம் கொடுக்க வேண்டுமா? விடுதலைப் புலிகள் இல்லாமல் தமிழர் பிரச்சினைக்கு தீர்வு காண முடியாது என்பது அனைவரும் அறிந்ததே. ஆனால் இலங்கைத் தமிழர் பிரச்சினையில் இந்தியாவை ஈடுபட வைக்க என்ன செய்வது?' என்று அந்த தூதுக்குழுவினர் பார்ப்பனத் தலைவர்களிடம் கேட்டிருக்கிறார்கள்''

"அதற்கு பார்ப்பனத் தலைவர்கள் என்ன சொன்னார்களாம்?''

"நாங்கள் அந்தப் பேச்சுவார்த்தைகளில் இருந்து விலகி நிற்கிறோம். நீங்களும் மற்றைய இந்திய அதிகார அமைப்புகளும் விடுதலைப் புலிகளை பேச்சுவார்த்தைக்கு அழைத்து வந்து நல்லுறவு கண்டால் எங்களுக்குச் சம்மதமே' என்று பார்ப்பனர்கள் கூறியுள்ளார்களாம். இதைத் தொடர்ந்து இந்தியாவை சேர்ந்த சிலர் ஈழம் வந்து தமிழ் தேசியக் கூட்டமைப்பின் அரசியல் தலைவர்களைச் சந்தித்துப் பேசிக் கொண்டிருப்பதாகத் தகவல். விடுதலைப் புலிகளும் பேச்சுவார்த்தைக்கு தாங்கள் தயார் என்பதைத் தெரிவிக்கும் பொருட்டு இந்தியாவின் சில சமிக்ஞைகளைக் கொடுத்துள்ளது. இதன்படி பார்த்தால், இலங்கைத் தமிழர் பிரச்சினையைத் தீர்க்கும் முயற்சியில் இந்தியா முழு வீச்சில் இறங்க வேண்டும் என்பதற்காக பார்ப்பனர்கள் சிலவேளைகளில் ஹைபர் கணவாய் வாழியாக சொந்த இடங்களிற்கு திரும்பிச் சென்றுவிடலாம் என்றும் தகவல் கசிந்து வருகிறது''

நன்றி : தமிழன் எக்ஸ்பிரஸ்

முக்கிய குறிப்பு: தமிழன் எக்ஸ்பிரஸ் வெளியிட்டுள்ள இந்தத் தகவல் பற்றிய மேலும் அதிர்ச்சிகரமான செய்திகள் நாளை வெளிவரும்!!!

http://www.webeelam.com

"விலகுகிறேன்" - சோனியா அதிரடி முடிவு!

உள்ளே நுழைந்த சாலமன் எடுத்த எடுப்பிலேயே, ""பிரிக்க முடியாதது என்னவோ..?'' என்று திருவிளையாடல் ஸ்டைலில் ஒரு கேள்வியைக் கேட்டார். உடனே, ""நீங்களும், உளவுத்துறையும்'' என்று நாம் கொடுத்த பதிலில் சட்டென உச்சி குளிர்ந்தவர், ""நீங்கள் சொல்வது உண்மை. ஆனால் இன்னொரு பதிலும் உண்டு. அது இலங்கை ராணுவத்திற்கும் -விடுதலைப் புலிகளுக்கும் இடையே நடக்கும் சண்டைதான்'' என்றபடி நியூஸ்களைச் சொல்ல ஆரம்பித்தார்.

""இலங்கை ராணுவத்திற்கும், விடுதலைப் புலிகளுக்கும், இடையே கடுமையான சண்டை நடந்து கொண்டிருக்கிறது. இங்கே பழ. நெடுமாறன் போன்றவர்கள், "விடுதலைப் புலிகளுக்கு உணவு எடுத்துச் செல்லப் போகிறோம்' என்று அறிவித்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் கடந்த ஆகஸ்ட் பதினைந்தாம் தேதி, கோட்டையில் கொடியேற்றி வைத்து சுதந்திர தின உரையாற்றிய முதல்வர் கருணாநிதி, இலங்கைத் தமிழர் பிரச்சினை பற்றி எந்தக் கருத்தும் தெரிவிக்கவில்லை. அதே நேரத்தில் அன்றைய தினம் பிரபல ஆங்கில நாளிதழ் ஒன்றில் மாநிலத்திற்கு அதிக அதிகாரம் கேட்டுப் போராடிய வரலாறுகள் பற்றி முதல்வரே நடுப்பக்கக் கட்டுரை ஒன்றை எழுதியிருக்கிறார். இதன் பின்னணியில் இலங்கையில் உள்ள தமிழ் நேஷனல் பார்ட்டி, (விடுதலைப் புலிகள் ஆதரவு பெற்ற கட்சி) "அதிகாரப் பகிர்வு குறித்து நாங்கள் ஒரு திட்ட முன் வடிவைக் கொடுக்கப் போகிறோம்' என்றும் அறிவித்துள்ளது. இந்தச் சம்பவங்கள் வௌ;வேறு இடங்களில் நிகழ்ந்தாலும், ஒன்றுக்கு ஒன்று தொடர்புடையவையாகவே காட்சியளிக்கின்றன'' ""விரிவாகச் சொல்லுங்கள்''"

"இலங்கையில் போர் நடைபெற்று வருகிறது. அங்கே அமெரிக்கா போன்ற நாடுகளின் தலையீடு இந்தியாவிற்கு ஆபத்தானது என்ற கருத்து நிலவுகிறது. ஆனால் இந்தியா பேச்சுவார்த்தை நடத்துவதற்கு வர, ராஜீவ்காந்தி கொலை வழக்கு தடையாக இருக்கிறது. பிரபாகரன், பொட்டு அம்மன் ஆகியோர் மீதுள்ள இந்த வழக்கைக் காட்டியே இந்தியா, இலங்கைத் தமிழர் பிரச்சினையில் ஒதுங்கி நிற்கிறது என்ற கவலை இந்திய நலன் மீது அக்கறை கொண்ட பலரிடம் இருக்கிறது. ஆகவே இந்தியா விடுதலைப் புலிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி மீண்டும் தொடர்புகளை ஏற்படுத்துவதற்கு அவர்கள் விரும்புகிறார்கள். அதற்கு முன்பு சோனியாவிடமும் தூதுவர்கள் மூலம் பேச்சுவார்த்தை நடத்தியிருக்கிறார்கள். அப்போது, "ராஜீவ்காந்தி கொலை வழக்கில் பல உண்மைகளை மறைத்து விடுதலைப் புலிகளை குற்றம் சாட்டியதால், ராஜீவ்காந்தியின் மனைவியாகிய நீங்கள் இங்கே அதிகார மையத்தில் இருக்கும் வரை, விடுதலைப் புலிகளுடன் அமர்ந்து பேச முடியாத ஒரு தர்மசங்கடமான சூழ்நிலை இந்தியாவுக்கு இருக்கிறது. அதை அமெரிக்கா, சீனா, பாகிஸ்தான் போன்ற நாடுகள் பயன்படுத்திக்கொண்டு ஈழப் பிரச்சனைக்குள் தலையிடுகின்றன. அதற்கு நீங்கள் இடம் கொடுக்க வேண்டுமா? விடுதலைப் புலிகள் இல்லாமல் தமிழர் பிரச்சினைக்கு தீர்வு காண முடியாது என்பது அனைவரும் அறிந்ததே. ஆனால் இலங்கைத் தமிழர் பிரச்சினையில் இந்தியாவை ஈடுபட வைக்க என்ன செய்வது?' என்று அந்த தூதுக்குழுவினர் சோனியாவிடம் கேட்டிருக்கிறார்கள்''

"அதற்கு சோனியா என்ன சொன்னாராம்?''

"நானும், எம்.கே நாராயணனும் அந்தப் பேச்சுவார்த்தைகளில் இருந்து விலகி நிற்கிறோம். நீங்களும் மற்றைய இந்திய அதிகார அமைப்புகளும் விடுதலைப் புலிகளை பேச்சுவார்த்தைக்கு அழைத்து வந்து நல்லுறவு கண்டால் எங்களுக்குச் சம்மதமே' என்று கூறியுள்ளாராம் சோனியா. இதைத் தொடர்ந்து இந்தியாவை சேர்ந்த சிலர் ஈழம் வந்து தமிழ் தேசியக் கூட்டமைப்பின் அரசியல் தலைவர்களைச் சந்தித்துப் பேசிக் கொண்டிருப்பதாகத் தகவல். விடுதலைப் புலிகளும் பேச்சுவார்த்தைக்கு தாங்கள் தயார் என்பதைத் தெரிவிக்கும் பொருட்டு இந்தியாவின் சில சமிக்ஞைகளைக் கொடுத்துள்ளது. இதன்படி பார்த்தால், இலங்கைத் தமிழர் பிரச்சினையைத் தீர்க்கும் முயற்சியில் இந்தியா முழு வீச்சில் இறங்க வேண்டும் என்பதற்காக சோனியா சிலவேளைகளில் இத்தாலி சென்றுவிடலாம் என்றும் தகவல் கசிந்து வருகிறது''

நன்றி : தமிழன் எக்ஸ்பிரஸ்

முக்கிய குறிப்பு: தமிழன் எக்ஸ்பிரஸ் வெளியிட்டுள்ள இந்தத் தகவல் பற்றிய மேலும் அதிர்ச்சிகரமான செய்திகள் நாளை வெளிவரும்!!!

http://www.webeelam.com/

Friday, August 17, 2007

மாத்தையாக்களும் கருணாக்களும்!

கிழக்கில் விரைவில் உள்ளுராட்சி சபைத் தேர்தலையும் மகாண சபைத் தேர்தலையும் நடத்தவதற்கு சிறிலங்கா அரசு அனைத்து ஏற்பாடுகளையும் செய்து வருகிறது. மகாண சபை தேர்தல் நடைபெறுவது சந்தேகம் என்றாலும் உள்ளுராட்சிச் சபைத் தேர்தல் விரைவில் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அவ்வாறான ஒரு தேர்தலில் விடுதலைப் புலிகளின் ஆதரவைப் பெற்ற தமிழ் தேசியக் கூட்டமைப்பு போட்டியிட முடியாதை நிலை நிலவுகிறது. அதனால் கருணா குழுவே அதிக இடங்களை கைப்பற்றக் கூடிய நிலைமை அங்கு ஏற்பட்டுள்ளது. தமிழினத்திற்கு துரோகம் இழைக்கின்ற கருணா குழுவிற்கு கிழக்கு மக்கள் வாக்களிப்பார்களா என்ற ஆச்சரியாமான கேள்வி எழலாம். வாக்களிப்பதற்கு சந்தர்ப்பங்கள் உண்டு என்பதுதான் அதற்கு பதில்.

அதற்கு காரணம் கிழக்கில் தமிழர்களுக்கும் முஸ்லீம்களுக்கும் இடையில் உருவாக்கிவிடப்பட்டள்ள பகைமை உணர்வுகள். பல ஆண்டுகளாகவே முஸ்லீம்கள் வெற்றி பெறக்கூடாது என்பதற்காக அங்குள்ள தமிழ் மக்கள் ஏதாவது ஒரு தமிழ்கட்சிக்கு வாக்களித்து பழகிவிட்டார்கள். தேர்தல் புறக்கணிப்பு என்பது கிழக்கில் பல ஆண்டுகளாக நடைபெறவே இல்லை. புறக்கணிக்கவும் மாட்டார்கள்.

ஒட்டுமொத்த தமிழர்களின் பிரதிநிதிகளான விடுதலைப் புலிகளை ஆதரிக்கின்ற தமிழ் தேசியக் கூட்டமைப்பு போன்ற கட்சிகள் தேர்தலில் நின்றால் அவர்களிற்கு வாக்களிப்பார்கள். இல்லையென்றால் வேறு ஏதாவது தமிழ் கட்சிக்கு வாக்களித்து விடுவார்கள். இதுதான் கிழக்கில் உள்ள வாக்களிப்பு நிலைமை. இவ்வாறான நிலை இருக்க வேண்டும் என்பதற்காகத்தான் ஒட்டுக் குழுக்கள் தமிழ் முஸ்லீம் உறவு ஏற்படக் கூடாது என்பதில் கவனமாக செயற்பட்டு வருகிறார்கள்.

தமிழர்களும் முஸ்லீம்களுக்கும் ஏற்பட்ட பிணக்குகளை ஆராய்கின்ற போது இரு தரப்பிலும் மாறி மாறி தவறுகள் இருந்து வந்ததையும், அவைகளை சிறிலங்கா அரசு சரியாகப் பயன்படுத்திக்கொண்டதையும் காணக்கூடியதாக உள்ளது.

1915ஆம் ஆண்டு சிங்களவர்களுக்கும் முஸ்லீம்களுக்கும் இடையில் கலவரம் ஏற்பட்டது. அப்பொழுது இலங்கையை ஆண்டு கொண்டிருந்த ஆங்கிலேய அரசு முஸ்லீம்கள் மீது தாக்குதல் நடத்திய சிங்களத் தலைவர்களையும், காடையர்களையும் கைது செய்து சிறையில் அடைத்தது. ஆங்கிலேய அரசு முஸ்லீம்களுக்கு சார்பாக நடந்து கொள்வதாக சிங்களத் தலைவர்கள் குற்றம் சாட்டினார்கள்.

இந்த நேரத்தில் தமிழர்களின் தலைவர்களாக இருந்தவர்கள் முஸ்லீம்களும் தமிழர்கள் என்ற ரீதியில் முஸ்லீம்களை ஆதரித்திருக்க வேண்டும். ஆகக் குறைந்தது நடுநிலையாவது வகித்திருக்க வேண்டும். ஆனால் தமிழர்களின் தலைமை ஒரு பெரும் தவறை இழைத்தது. அன்றைக்கு தமிழர் தலைவராக இருந்த சேர்.பொன் இராமநாதன் சிங்களவர்களுக்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுத்தார்.

அப்பொழுது முதலாம் உலக யுத்தம் (1914 - 1918) நடைபெற்றுக்கொண்டிருந்த காலம். கப்பற் போக்குவரத்து என்பது மிகவும் ஆபத்தான ஒன்றாக இருந்தது. ஆனால் ஆபத்தையும் பொருட்படுத்தாது சேர்.பொன் இராமநாதன் இங்கிலாந்த பயணமானார். அங்கே சிங்களவர்களுக்காக வாதாடினார். வாதாடி கைது செய்யப்பட்ட சிங்களத் தலைவர்களையும், காடையர்களையும் விடுவிக்கச் செய்தார். இலங்கை திரும்பிய இராமநாதனை சிங்களவர்கள் ரதத்தில் வைத்து ஊர்வலமாக அழைத்துச் சென்றனர். ரதத்தை சிங்களவர்களே இழுத்தனர்.

சில தமிழர்கள் இராமநாதனை ரதத்தில் வைத்து சிங்களவர்கள் இழுத்த சம்பவத்தை பெருமையோடு குறிப்பிடுவார்கள். உண்மையில் தமிழர்கள் வெட்கப்பட வேண்டிய சம்பவம் அது. அன்றைய தமிழர் தலைமை முஸ்லீம்களுக்கு எதிரான சிங்களவர்களுக்கு ஆதரவாக நின்று பெரும் தவறைச் செய்து விட்டது. முஸ்லீம்களை பிரித்து வைத்து விட்டது.

அதன் பிற்பாடு பல ஆண்டுகள் கழித்து தந்தை செல்வா அவர்கள் இரண்டு சமூகங்களும் ஒற்றுமையாக இருக்க வேண்டியதன் அவசியத்தை உணர்ந்து பல முயற்சிகளை மேற்கொண்டார். அதில் ஓரளவு வெற்றியம் கண்டார். தந்தை செல்வாவின் தலைமையிலான தமிழரசுக் கட்சியின் சார்பில் முஸ்லீம்கள் வெற்றி பெற்றனர். தமிழர்கள் வெற்றி பெறுவதற்கான சந்தர்ப்பம் உள்ள தொகுதிகளைக் கூட முஸ்லீம் பிரதிநிதிகளுக்கு ஒதுக்கி அவர்களை தமிழரசுக் கட்சி வெற்றி பெற வைத்தது.

ஆனால் இம் முறை முஸ்லீம் பிரதிநிதிகள் தவறு செய்தனர். தமிழர்களினதும் மற்றும் முஸ்லீம்களினதும் வாக்குகளைப் பெற்று நாடாளுமன்றம் சென்றவர்கள் கட்சி மாறி அரசில் இணைந்தனர். இது ஒரு முறையோ அல்லது இரு முறையோ மட்டும் நடைபெறவில்லை. பட்டியல் போடுகின்ற அளவிற்கு பலமுறை நடந்தது. ஒரு நேரத்தில் தமிழரசுக் கட்சியின் தலைவர்கள் முஸ்லீம் பிரதிநிதிகளிடம் "கட்சி மாறக் கூடாது" என்று சத்தியம் வாங்க வேண்டிய அளவிற்கு ஒவ்வொரு முறையும் கட்சி மாறுதல் நடந்தது. சத்தியம் செய்து கொடுத்துவர்களும் அதைக் காப்பாற்றவில்லை.

அதன் பிறகு ஆயுதம் தாங்கிய ஈழ விடுதலைப் போராட்டம் ஆரம்பமான பொழுது, தமிழ் - முஸ்லீம் உறவு தழைப்பது போன்ற காட்சிகள் தென்பட்டன. சிங்கள பௌத்தர் அல்லாத அனைவரையும் சிறிலங்காவில் இருந்து இல்லாமல் செய்கின்ற திட்டத்தையே சிங்கள அரசுகள் கொண்டுள்ளன என்கின்ற உண்மையை உணர்ந்த முஸ்லீம் இளைஞர்களும் விடுதலை இயக்கங்களில் இணைந்து தமிழீழத் தாயகம் அமைப்பதற்கு போராடினர்.

விடுதலைப் புலிகள் இயக்கத்தில் இணைந்து போராடி நூற்றுக் கணக்கான முஸ்லீம்கள் மாவீரர் ஆகி உள்ளனர். லெப் கேணல் ஜீனைதீன் என்பவர் விடுதலைப் புலிகள் இயக்கத்தின் முதலாவது முஸ்லீம் மாவீரர் ஆவார்.

இவ்வாறு ஆயுதப் போராட்டத்தின் ஆரம்ப காலங்களில் தமிழர் முஸ்லீம் ஒற்றுமையில் வளர்ச்சி ஏற்பட்டாலும், கடைசியில் இரண்டு சமூகங்களையும் பிளவு படுத்துகின்ற சிங்கள அரசின் முயற்சியே வெற்றி பெற்றது. இதற்கு சில தமிழ் ஆயுதக் குழுக்கள் முஸ்லீம் மக்கள் மீது அடாவடித்தனமான முறையில் நடந்து கொண்டதும் துணை போனது.

முஸ்லீம்கள் மத்தியில் உருவான தனிக் கட்சிகளும் அரசியல் இலாபம் கருதி தமிழர் முஸ்லீம் ஒற்றுமை ஏற்படக் கூடாது என்பதில் கவனமாக இருந்தன. இவை எல்லாவற்றையும் விட 1990ஆம் ஆண்டில் நடந்த படுகொலைகளும், முஸ்லீம்கள் வெளியேற்றமும் இரண்டு சமூகத்தினர் மத்தியிலும் மிகப் பெரிய இடைவெளியை உருவாக்கின. அந்த இடைவெளி குறைந்த விடக் கூடாது என்பதில் இன்றைக்கு வரைக்கும் பல தீய சக்திகள் வெகு கவனமாக செயற்பட்டு வருகின்றன.

1990ஆம் ஆண்டு ஒகஸ்டின் ஆரம்பத்தில் காத்தான்குடி, ஏறாவூர் போன்ற பகுதிகளில் நூற்றுக் கணக்கான முஸ்லீம்கள் படுகொலை செய்யப்பட்டார்கள். முஸ்லீம்கள் மத்தியில் பதட்டத்தையும் தமிழர் மீது வெறுப்பையும் ஏற்படுத்துவதற்கான அனைத்துச் செயற்பாடுகளையும் சிறிலங்காப் புலனாய்வுத்துறை செய்தது. பல கிராமங்களில் முஸ்லீம்கள் படுகொலை செய்யப்படுவதாக பொய்யான செய்திகளையும் பரப்பியது. முஸ்லீம்கள் மீதான படுகொலைகளின் பின்னால் சிறிலங்காவின் புலனாய்வுத்துறை செயற்பட்டது என்று நம்புவதற்கு வலுவான காரணங்கள் உண்டு.

முஸ்லீம்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சில நாட்களில் தமிழர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. சிறிலங்கா இராணுவத்திற்கு அஞ்சி வீரமுனைக் கிராமத்திற்கு இடம் பெயர்ந்திருந்த தமிழ் மக்கள் மீது சிறிலங்கா இராணுவத்தினரும் முஸ்லீம் துணைப் படையினரும் இணைந்த பெரும் படுகொலை ஒன்றை நிகழ்த்தினர். 400இற்கும் மேற்பட்ட தமிழ் மக்கள் கொல்லப்பட்டனர். வேறு பல தமிழ் கிராமங்களும் சிறிலங்கா இராணுவத்தின் முஸ்லீம் துணைப் படையினரால் தாக்குதலுக்கு உள்ளாகின. தமிழ் மக்கள் மீதான தாக்குதலின் பின்னால் முஸ்லீம் ஒட்டுக் குழுவான "ஜிகாத்" செயற்படுவதாக அன்று விடுதலைப் புலிகள் குற்றம் சாட்டியிருந்தனர்.

இவ்வாறு இரு சமூகங்களுக்கும் இடையில் கடும் பகையை உருவாக்கிய சிறிலங்காப் புலனாய்வுத்துறை யாழ் குடாவில் உள்ள முஸ்லீம்களையும் கலவரத்திற்கு தூண்டியது. அவ்வாறான ஒரு கலவரத்தை தடுப்பதற்கு அன்றைய நிலையில் தம்மிடம் பலம் இல்லை என்பதை உணர்ந்த விடுதலைப் புலிகள் முஸ்லீம்களை யாழில் இருந்து வெளியேற்றினர். இது முஸ்லீம்கள் மனதில் மேலும் ஒரு வடுவாகிப் போனது.

தமிழர் முஸ்லீம் உறவின் அவசியத்தினை உணர்ந்த விடுதலைப் புலிகள் முஸ்லீம்கள் வெளியேற்றப்பட்டதற்கு மன்னிப்புக் கோரினர். தமிழ் மக்கள் யாழில் மீண்டும் குடியேறுகின்ற நிலை வருகின்ற போது முஸ்லீம் மக்களும் யாழில் மீண்டும் குடியேற்றப்படுவர் என்று வாக்குறுதியும் வழங்கினர். முஸ்லீம் கட்சிகளோடும், மதத் தலைவர்களோடும் பல பேச்சுவார்த்தைகளை நடத்தி உறவிற்கு வழி வகுத்தனர்.

ஆனால் சிறிலங்காப் புலனாய்வுத்துறை இப்பொழுதும் வேகமாக செயற்பட்டது. ஒட்டுக் குழுக்களான கருணா குழுவையும், ஜிகாத் குழுவையும் பயன்படுத்தி மீண்டும் மாறி மாறி கொலைகளை நிகழ்த்தியது. இன்று வரைக்கும் தமிழினத்தின் மத்தியில் தமிழர் முஸ்லீம் என்ற பிளவை உருவாக்குவதிலும், இரு சமூகங்கள் மத்தியில் பகையை வளர்ப்பதிலும் சிறிலங்கா அரசு வெற்றி பெற்று வருகிறது என்பது வேதனையான உண்மை.

தமிழர்களும் முஸ்லீம்களும் பகையோடு இருப்பதால் பலன் பெறுவது கிழக்கை பிரிக்க விரும்புகின்ற சிங்கள அரசும், ஒட்டுக் குழுக்களுமே ஆகும். முஸ்லீம்களை கொலை செய்வதிலும் கிராமங்களை விட்டு விரட்டி அடிப்பதிலும் சிறிலங்காப் படைகளும் கருணா குழுவும் முன்னிலையில் நின்று செயற்படுகின்றன. விடுதலைப் புலிகள் இயக்கத்தில் இருந்த போதே கருணா முஸ்லீம்களுடன் கடுமையாகச் செயற்பட்டார் என்ற செய்திகள் பல உண்டு. இதற்காக அவர் வடக்கிற்கு அழைக்கப்பட்டு கண்டிக்கப்பட்ட சம்பவங்களும் உண்டு.

அன்றைக்கே முஸ்லீம்களுக்கும் தமிழர்களுக்கும் பகைமையை வளர்க்கின்ற முயற்சிகளில் கருணா ஈடுபட்டதானது கருணாவிற்கு நீண்ட காலத்திட்டம் இருந்ததா என்ற கேள்வியை எழுப்புகின்றது. அதே போன்று யாழ்ப்பாணத்தில் இருந்து முஸ்லீம்களை வெளியேற்றுவதில் முன்னின்று ஆர்வமாக செயற்பட்டவர் யார் என்று பார்த்தால் அங்கும் ஒரு ஆச்சியமான பதில் இருக்கிறது. விடுதலைப் புலிகளின் அன்றைய பிரதித் தலைவர் மாத்தையாவே அவர்.

இவ்வாறு விடுதலைப் புலிகள் இயக்கத்தில் முஸ்லீம்களுக்கு எதிரான செயற்பாடுகளில் ஈடுபட்டவர்கள் பின்பு துரோகிகளாக இனம் காணப்பட்டார்கள். இது இவர்கள் அந்நிய சக்திகளிடம் பல ஆண்டுகளுக்கு முன்பே விலை போய்விட்டார்களா என்ற கேள்வியை எழுப்புகிறது.

இந்த இடத்தில் விடுதலைப் புலிகளின் உயர்ந்த பண்பு வெளிப்படுகிறது. மாத்தையா, கருணா போன்றவர்கள் விடுதலைப் புலிகளைக் காட்டிக் கொடுத்தாலும், அவர்களை விடுதலைப் புலிகள் காட்டிக் கொடுப்பதில்லை. தமது இயக்கத்தில் இருந்த பொழுது அவர்கள் செய்த செயற்பாடுகளுக்கு தாமே பொறுப்பேற்றுக் கொள்ளும் சிறந்த பண்பை விடுதலைப் புலிகளிடம் காணக் கூடியதாக உள்ளது.

தமிழினத்தை வடக்கு கிழக்கு என்றும் தமிழர் முஸ்லீம் என்று பிளவு படுத்துகின்ற தீய சக்திகளுக்கும் கறுப்பு ஆடுகளுக்கும் மத்தியில் இரண்டு சமூகங்களும் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்பதில் விடுதலைப் புலிகள் உறுதியாகவே இருக்கிறார்கள். முஸ்லீம் சமூகத்தை தனிக் கலாச்சாரம் உள்ள ஒரு தனித்துவமான சமூகமாக அங்கீகரித்திருக்கும் விடுதலைப் புலிகள் தமிழீழத்தில் முஸ்லீம்களுக்கு தனி அலகு வழங்கவும் தயாராக இருக்கிறார்கள்.

ஆனால் முஸ்லீம்கள் மீது வெறுப்புக்களை வளர்த்து வைத்திருக்கும் தமிழர்களும், தமிழர்கள் மீது வெறுப்புக்களை வளர்த்து வைத்திருக்கும் முஸ்லீம்களும் குறிப்பிட்டளவு இருக்கிறார்கள். உண்மையான ஒற்றுமை ஏற்படுவதற்கு இவர்களே தடையாக இருக்கிறார்கள்.

விடுதலைப் புலிகளை ஆதரிக்கின்ற தமிழர்களில் கூட பலர் முஸ்லீம்கள் விடயத்தில் மாத்தையாக்களாகவும், கருணாக்களாகவும் சிந்திப்பதை பல இடங்களில் காணக்கூடியதாக இருக்கின்றது.

ஒற்றுமை ஏற்படுவதற்கு மனம் திறந்த பேச்சு அவசியம். தமிழர் தரப்பில் உள்ள தலைவர்களும் அறிஞர்களும் முதலில் தமிழர்களுடன் பேச வேண்டும். முஸ்லீம்கள் பற்றி தமிழர்கள் மத்தியில் உள்ள அச்சங்களையும் சந்தேகங்களையும் களைய வேண்டும். இதையே முஸ்லீம் தலைவர்களும் தமது மக்கள் மத்தியில் செய்ய வேண்டும். அரசியல் இலாபத்திற்காக சில முஸ்லீம் கட்சிகளும், தமிழ் ஒட்டுக் குழுக்களும் இதற்கு தடையாக இருந்தாலும், இதை செய்துதான் தீர வேண்டும்.

ஒற்றுமை ஏற்படவில்லை என்றால் கிழக்கு விடுவிக்கப்படாதவரை அங்கு நடைபெறும் தேர்தல்களில் ஒட்டுக் குழுக்கள் மக்கள் வாக்குகளைப் பெற்று ஊராட்சி, மகாணசபை, நாடாளுமன்றம் என்று வளர்ச்சி அடைவது நடந்துதான் தீரும்.

Sunday, August 12, 2007

லலிதாவின் கதை!

எமது தளத்தில் வெளிவந்த "ஏமாற்றுக்காரர்களின் ஊர்வலம்" என்ற கட்டுரை குறித்து பல தரப்பிடம் இருந்து நேரடியாகவும், தொலைபேசியிலும், மின்னஞ்சலிலும் பலவிதமான கருத்துக்கள் வந்தன. அதில் பெரும்பாலான கருத்துக்கள் டென்மார்க்கில் தன்னை அம்மன் என்று சொல்லி பக்தர்களை ஏமாற்றி வரும் அபிராமியை பற்றியதாக இருந்தது.

அபிராமியைப் போன்ற ஏமாற்றுப் பேர்வழிகளை தொடர்ந்தும் தோலுரித்துக் காட்ட வேண்டும் என்று பாராட்டுக்களும் வந்தன. நடமாடும் தெய்வத்தை தவறாகப் பேசாதீர்கள் என்று கண்டனங்களும் வந்தன. அத்துடன் அபிராமி பற்றி மேலும் அறிந்து கொள்கின்ற ஆவலும் பலரிடம் இருந்ததைக் காணக்கூடியதாக இருந்தது.

அவர்களுடைய ஆவலை ஓரளவு பூர்த்தி செய்யும் விதமாக டென்மார்க் அபிராமி பற்றிய மேலும் சில விபரங்களை சேகரிக்க முனைந்தோம். அப்படிச் சேகரித்ததில் டென்மார்க் அபிராமி பற்றி சில ஆச்சரியமான தகவல்களும் கிடைத்தன.

டென்மார்க் அபிராமியின் உண்மையான பெயர் லலிதா என்பது பலருக்கு தெரியாத செய்தி. இந்த லலிதா ஈழத்திலே ஒரு இளம் பெண்ணாக இருந்த காலத்திலேயே உரு ஆடி குறி சொல்கின்ற தொழிலை செய்து வந்திருக்கின்றார். லலிதா தன்னுடைய ஊராகிய ஏழாலையில் ஒரு சிறு குடிலை அமைத்து, அதில் ஒரு அம்மன் சிலையை வைத்து உரு ஆடி வந்திருக்கிறார்.

ஏழாலையில் வேறு பலரும் உரு ஆடுகின்று வேலையை செய்து வந்தார்கள். அதில் சிலர் மனம் பேதலித்து உரு ஆடுபவர்களாகவும், சிலர் அதை தொழிலாகவும் செய்பவர்களாகவும் இருந்தார்கள்.

ஏழாலையில் பலர் உரு ஆடுவதால் லலிதா பற்றிய தகவல்களை பெறுவது மிகவும் கடினமாகப் போய்விட்டது. பலர் ஏழாலையில் உரு ஆடிய மற்றைய பெண்களை லலிதாவோடு போட்டு ஒன்றாக குழப்பினார்கள். லலிதாவின் தந்தை உரு ஆடிக் குறி சொல்பவர் என்று சிலர் உறுதியாகச் சொன்னார்கள். கடைசியில் அது லலிதாவின் தந்தை அல்ல என்று தெரிய வந்தது. ஏழாலையில் உரு ஆடிய வேறொரு பெண்ணின் தந்தையை லலிதாவின் தந்தை என்று மாற்றி நினைத்து தகவல் சொல்லி விட்டார்கள். இப்படி பல குழப்பங்களோடுதான் லலிதா பற்றி அறிய முடிந்தது.

இப்படி பல குழப்பங்களுக்கு மத்தியில் சேகரித்த உண்மையான தகவல்கள்தான் இனி வருபவை.

ஏழாலையில் லலிதாவின் தாயின் சகோதரியும் உரு ஆடுதல், பேயோட்டுதல் போன்ற தொழில்களை செய்கின்ற ஒருவராக இருந்தார். (பேயாட்டுகின்ற போது லலிதாவின் பெரியம்மா முழிக்கின்ற முழியைப் பார்த்ததன் பாதிப்புத்தான் இப்பொழுது டென்மார்க்கில் லலிதா அடிக்கடி கண்களை உருட்டி உருட்டி முழித்துப்பார்ப்பது.) பெண்கள் உரு ஆடி குறி சொல்கின்ற பொழுது அதிக வசூல் வருவதைக் கண்ட லலிதா தானும் உரு ஆடும் தொழிலில் களம் இறக்க முடிவு செய்தார்.

ஏழாலையில் பல சைவ ஆலயங்கள் உண்டு. அவற்றில் ஒரு அம்மன் கோவில் சற்றுப் பெரியது. அதை ஏழாலை மக்கள் "பெரிய அம்மன் கோவில்" என்று சொல்லி வணங்குவார்கள். அந்தக் கோவிலில் உள்ள அம்மனையும் "பெரிய அம்மன்" என்றுதான் சொல்வார்கள்.

இந்த இடத்தில்தான் லலிதாவின் மூளை வேலை செய்தது. கோயில் என்ற பெயரில் ஒரு சிறிய குடிலைப் போட்டுக் கொண்டு லலிதா தன்னை "சின்ன அம்மன்" என்று சொல்லிக் கொண்டு உரு ஆடத் தொடங்கினார். ஏழாலையில் உள்ள பெரும்பாலான மக்கள் லலிதாவை கண்டுகொள்ளவில்லை. ஆனாலும் அயலூர்களில் இருந்து சிலர் "சின்ன அம்மனிடம்" குறி கேட்கச் சென்றனர்.

இன்றைக்கும் டென்மார்க்கில் உள்ளவர்களில் பெரும்பாலானவர்கள் லலிதாவிடம் செல்வதில்லை. அயல் நாடுகளில் உள்ளவர்கள்தான் செல்கின்றனர். சொந்த நாடான ஈழத்தில் பிரேமானந்தாவை யாரும் திரும்பிப் பார்க்கவில்லை. ஆனால் தமிழ்நாட்டில் அவரை கடவுள் என்று நம்பி பலர் ஏமாந்து போகவில்லையா? அப்படித்தான் இதையும் பார்க்க வேண்டும்.

டென்மார்க்கிற்கு வந்த லலிதா உடனடியாக அபிராமி அவதாரம் எடுத்துவிடவில்லை. சிறிது காலம் மக்களை ஏமாற்றாமல் நல்ல ஒரு பெண்ணாக வாழ்ந்து வந்தார். ஆனால் பேராசை அவரை நீண்ட காலம் அப்படி இருக்க விடவில்லை. கிறிண்ட்ஸ்ரெட் என்ற நகரில் வாழ்ந்த லலிதாவும் அவருடைய கணவராகிய சிறிபாலனும் பிரண்டா என்ற நகருக்கு மாறி அங்கே ஒரு கோயிலை உருவாக்கினார்கள்.

இப்படித்தான் தாயகத்தில் சின்ன அம்மனாக இருந்த லலிதா டென்மார்க்கில் அபிராமியாக மாறினார்.

கிறிண்ட்ஸ்ரெட்டில் இருந்து பிரண்டாவிற்கு மாறியது பற்றி லலிதா பொய்யான கதை ஒன்றை பரப்பி வைத்திருக்கிறார். லலிதாவிற்கு திடீரென்று நோய் வந்து விட்டதாம். அம்மன் கனவில் வந்து தன்னை மறந்து போனதால்தான் இந்த நோய் வந்ததாக சொன்னாராம். அதன்பிறகு லலிதா ஊரில் வைத்து வழிபட்ட அம்மன் சிலையை தருவித்து பிரண்டாவில் தற்பொழுதுள்ள ஆலயத்தை உருவாக்கினாராம். இதுதான் லலிதா பரப்பியிருக்கின்ற கதை.

ஆனால் கிறிண்ட்ஸ்ரெட்டில் உள்ள மக்கள் உண்மையைப் போட்டு உடைத்தார்கள். டென்மார்க்கில் இருக்கின்ற மக்களில் அதிகமானவர்கள் லலிதாவின் கோவிலுக்குப் போவதில்லை. அதிலும் கிறிண்ட்ஸ்ரெட்டில் உள்ள மக்களில் ஒரிருவரைத் தவிர மற்றவர்கள் யாரும் லலிதாவின் கோயிலுக்கு செல்வதேயில்லை. அது ஏன் என்ற கேள்விக்கான பதிலில்தான் லலிதாவும் சிறிபாலனும் பிரண்டாவிற்கு ஓடிய காரணமும் இருக்கிறது.

லலிதாவின் கணவர் சிறிபாலன் கிறிண்ட்ஸ்ரெட்டில் செய்த அட்டாகசமே லலிதாவும் சிறிபாலனும் பிரண்டாவிற்கு ஓடியதன் காரணம். சிறிபாலன் அந்த நகரத்தில் கொண்டிருந்த தகாத உறவுகள் காரணமாக அங்குள்ள இளைஞர்களால் எச்சரித்து விரட்டப்பட்டார். (கண்ணியம் கருதி இது பற்றி விரிவாக எழுதுவதை தவிர்த்துக் கொள்கிறோம்) லலிதாவும் சிறிபாலனும் இளைஞர்களின் எச்சரிக்கைக்கு அஞ்சி பிரண்டாவிற்கு ஓடினார்களே தவிர, அம்மன் கனவில் வந்ததால் அல்ல.

பிரண்டாவிலே அமைக்கப்பட்ட ஆலயம் மக்கள் பணத்தில்தான் அமைக்கப்பட்டது. ஆனால் அதை தனது சொந்தப் பணத்தில் அமைத்ததாகத்தன் டென்மார்க்கின் ஊடகங்களுக்கு சொல்லி வருகிறார். மக்கள் தந்த பணத்தினால் அபிராமி என்கின்ற லலிதா பெரும் பணக்காரி ஆகிவிட்டார். ஒரு தொலைக்காட்சியில் குறிப்பிட்ட நேரத்தை விலை கொடுத்து வாங்குகின்ற அளவிற்கு, ஐரோப்பாவில் இருக்கும் வருமானம் குறைந்த கோவில்களிற்கு சில அன்பளிப்புக்களை வழங்குகின்ற அளவிற்கு லலிதாவிடம் பணம் புரள்கின்றது.

லலிதாவின் ஆலயத்திலே நடக்கின்ற திருமணங்கள் பற்றியும் ஒரு தகவல் கிடைத்தது. லலிதாவின் ஆலயத்திலே திருமணம் செய்பவர்கள் சம அந்தஸ்திலே இருக்க வேண்டுமாம். பொருளாதாரரீதியாகவும் அதை விட முக்கியமாக சாதிரீதியாகவும் சமமானவர்களாக இருக்க வேண்டுமாம். இதை லலிதா தரப்பினரே டென்மார்க் தொலைக்காட்சி ஒன்றிற்கு பேட்டி வழங்குகின்ற போது சொல்லியிருக்கிறார்கள். இப்படிப்பட்ட சாதி வெறி பிடித்த ஒரு பெண்ணை கடவுள் என்று எம்மவர்கள் சிலர் நம்புவது வெட்கப்பட வேண்டிய விடயம்.

ஆனால் ஐரோப்பாவில் வாழ்கின்ற குறிப்பிட்ட எண்ணிக்கையுள்ள சில தமிழர்கள் லலிதாவை அம்மன் என்று நம்புகின்றார்கள். லலிதா தங்களுடைய நோய்களை தீர்த்து வைத்ததாக சொல்கின்றனர். இவைகள் உண்மையா? இது பற்றிய மேலதிக விபரங்களோடு அடுத்த வாரம் உங்களைச் சந்திக்கின்றோம்.

Wednesday, August 08, 2007

மீண்டும் படகேறும் பழ.நெடுமாறன்!

தமிழீழ மக்களின் போராட்டத்திற்காக உணர்வோடு குரல் கொடுக்கின்ற அமைப்புக்கள் பழ.நெடுமாறன் அவர்களின் தலைமையில் அதிரடியான தீர்மானம் ஒன்றை நிறைவேற்றி இருக்கிறார்கள்.

யாழ் குடாவிற்கான பாதை நீண்ட காலமாக மூடப்பட்டுள்ள நிலையில் தேவையான அளவு உணவுப் பொருட்கள் இன்றி யாழ்ப்பாண மக்கள் தவித்து வருகிறார்கள். இந்த மக்களிற்காக தமிழ்நாட்டு தமிழர்கள் அன்போடு கொடுத்த உணவுப் பொருட்களை யாழ்ப்பாணத்திற்கு அனுப்புவதற்கு இந்திய அரசு அனுமதி மறுத்து வருகிறது. கலைஞர் கருணாநிதி தலைமையிலான தமிழ்நாடு அரசும் இப் பிரச்சனையில் அக்கறை இன்றிக் காணப்படுகிறது.

யாழ்ப்பாணத்திற்கு உணவுப் பொருட்களை அனுப்புவதற்கு அனுமதி வழங்குமாறு வைகோ, ராமதாஸ் போன்ற தலைவர்கள் மத்திய அரசிடம் கோரிக்கை விடுத்தும் எவ்வித பலனும் இதுவரை ஏற்படவில்லை. ஏறக்குறைய 6 மாதங்களாக ஒரு கோடி ருபாய்கள் பெறுமதிமிக்க உணவுப் பொருட்கள் தேங்கிப்போய் கிடக்கின்றன.

தமிழர்களை கொலை செய்கின்ற சிங்கள அரசுக்கு ஆயுத உதவிகளும், ராடர்களும் வழங்கி வரும் இந்திய அரசு தமிழ் மக்களுக்கு உணவுப் பொருட்களை அனுப்புவதை தடுத்து வரும் நிலையில் கடந்த 04.08.07 அன்று விழுப்புரத்தில் ஒன்று கூடிய தமிழீழ ஆதரவு அமைப்புக்கள் யாழ்பாணத்திற்கு நேரடியாக படகில் சென்று பொருட்களை கொடுப்பது என்று அதிரடியாக தீர்மானம் நிறைவேற்றி உள்ளன.

தமிழர் தேசிய இயக்கத்தின் தலைவர் பழ. நெடுமாறன் அவர்களுடைய தலைமையில் நடந்த இந்த மாநாட்டில், தமிழ் தேசிய பொதுவுடமைக் கட்சி, பெரியார் திராவிடர் கழகம் ஆகிய கட்சிகள் உட்பட பல அமைப்புக்கள் கலந்து கொண்டன.

தீர்மானத்தின்படி வருகின்ற செப்ரம்பர் 11ஆம் நாள் தமிழின உணர்வாளர்கள் இரண்டு பிரிவுகளாக தங்களுடைய பயணத்தை ஆரம்பிக்கின்றார்கள். ஒரு பிரிவினர் மதுரையில் இருந்து ராமேஸ்வரம் நோக்கிப் புறப்படுகின்றனர். மற்றப் பிரிவினர் திருச்சியில் இருந்து நாகை நோக்கிப் புறப்படுகின்றனர். இந்தப் பயணத்தின் போது இந்தப் போராட்டத்தின் நியாயத்தன்மையையும், மத்திய மாநில அரசுகளின் பாராமுகத்தையும் மக்களிடம் எடுத்துக்கூறி பரப்புரை மேற்கொண்டபடி வருவார்கள்.

இவ்வாறு ராமேஸ்வரத்திலும், நாகையிலும் உள்ள துறைமுகங்களுக்கு வந்தடையும் இவர்கள் அடுத்த நாள் செப்ரெம்பர் 12 அன்று படகுகளில் ஏறி யாழ்ப்பாணத்தை நோக்கிப் புறப்படுகிறார்கள்.

இந்தப் போராட்டத்திற்கு தலைமை தாங்கும் பழ நெடுமாறன் அவர்கள் இது குறித்து கூறிய பொழுது "பசியால் வாடும் இலங்கை தமிழர்களுக்கு உதவவே இப்பயணத்தை மேற் கொள்கிறோம், எனவே எங்களை கைது செய்தாலும் சுட்டுக் கொன்றாலும் நாங்கள் கவலைப்படபோவது இல்லை" என்றார்.

பழ நெடுமாறன் அவர்கள் தமிழீழம் நோக்கிப் புறப்படுவது இது முதற் தடவை அல்ல. போர் குறைவாக இருந்த 1982இலும், தற்காலிக சமாதானம் நிலவிய காலங்களிலும் (1987, 1990) தமிழீழம் வந்து சென்று இருக்கிறார்.

ஆனால் தற்பொழுது போன்று ஒரு 1983ஆம் ஆண்டு ஓகஸ்ட 15 அன்று நெடுமாறன் அவர்கள் படகு மூலம் ஒரு பயணத்தை ஆரம்பித்தார். 1983 ஜுலையில் நடந்த பெரும் இனப் படுகொலையை தொடர்ந்து ஈழத் தமிழர்களைக் காப்பதற்கு ஒரு தியாகப் பயணத்தை மேற்கொள்ள பழ. நெடுமாறன் அவர்கள் முடிவெடுத்து, அதை அறிவித்தார்.

அப்பொழுது சிறிலங்காவின் பாதுகாப்பு அமைச்சராக இருந்த லலித் அத்துலத் முதலி பழ.நெடுமாறன் அவர்களை கிண்டல் செய்து ஒரு அறிக்கையை வெளியிட்டார். "இந்தியர்கள் இலங்கைக்கு வருவது தீர்வையற்ற பொருட்களை வாங்கத்தான், நீங்களும் வாருங்கள், வந்து பொருட்களை வாங்கிச் செல்லுங்கள்" என்று பழ. நெடுமாறன் அவர்களுக்கு தான் கடிதம் எழுதியுள்ளதாக லலித் அத்துலத் முதலி தன்னுடைய அறிக்கையில் தெரிவித்திருந்தார்.

உண்மையில் லலித் அத்துலத் முதலி அவ்வாறான கடிதம் எதையும் எழுதவில்லை. ஆனால் பழ. நெடுமாறன் அவர்கள் வந்தால் சுட்டுக் கொன்றுவிட வேண்டும் என்ற திட்டத்தோடு மன்னார் கடற்பகுதியில் சிறிலங்கா கடற்படை நிறுத்தப்பட்டடிருந்தது.

இந்த நிலையில் படகுகளில் பயணத்தை ஆரம்பித்த பழ. நெடுமாறன் மற்றும் தொண்டர்களை நடுக்கடலில் வைத்து இந்தியக் கடற்படை தடுத்து நிறுத்திக் கைது செய்தது.

அதன் பிறகு 1985ஆம் ஆண்டு ஓகஸ்ட் 15 அன்று ரகசியமாக படகில் தமிழீழம் வந்து மக்களை சந்தித்தார். இது சிறிலங்கா அரசுக்கு பெருத்த அவமானமாகப் போய்விட்டது. கிண்டல் செய்த லலித் அத்துலத் முதலிக்கு மூக்கறுந்தது போலானது. விடுதலைப் புலிகள் பாதுகாப்பு அளிக்க பழ.நெடுமாறன் அவர்கள் தமிழீழத்தின் பல மாவட்டங்களுக்கு சென்று மக்களை சந்தித்தார்.

தற்பொழுது மீண்டும் ஒரு முறை படகேறி அல்லலுறும் தமிழ் மக்களுக்கு உதவவென பழ.நெடுமாறன் அவர்கள் தயாராகி வருகின்றார். 1983ஆண்டு போன்று இம் முறையும் இந்திய அரசு அவரை இடையிலேயே தடுத்து நிறுத்தும். சில வேளைகளில் செப்ரெம்பர் 11ஆம் நாள் போரட்டம் ஆரம்பமாகும் இடங்களிலேயே பழ. நெடுமாறன் அவர்களும் மற்றைய தலைவர்களும் கைது செய்யப்படவும் கூடும்.

ஆயினும் இவ்வாறான ஒரு போராட்டத்தை நடத்த முன்வந்திருப்பது போற்றத்தக்கதாகும். தமிழ்நாட்டுத் தமிழர்கள் ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக இதுவரை நடத்தி வந்த மென்மையான போரட்டங்களோடு இது போன்ற ஓரளவு கடுமையை வெளிப்படுத்துகின்ற போராட்டங்களையும் நடத்த முனைவது ஒரு நல்ல திருப்பமாகும்.

இதுவரை ஈழத் தமிழர்களுக்காக பட்டினிப் போர், பொதுக்கூட்டம் போன்ற போராட்டங்களை நடத்தியவர்கள், படகுகளில் ஏறி நேரடியாக ஈழத்திற்கு புறப்படுகின்ற போராட்டத்தை நடத்த முனைவது தமிழ்நாட்டில் உள்ள தமிழுணர்வாளர்கள் அடங்க மறுத்து போராடத் தயாராகி வருவதைக் காட்டுகிறது.

ஈழத் தமிழர் விடயத்தில் பட்டும் படாமலும் நடந்து கொள்ளும் தமிழ்நாட்டு அரசையும் இது போன்ற போராட்டங்களே தட்டி எழுப்பும்.

1983ஆண்டில் பழ.நெடுமாறன் அவர்கள் ஈழத் தமிழர்களை காப்பாற்ற படகில் வர முயன்ற போது, அந்தப் போராட்டத்திற்கு அன்றைய எதிர்க் கட்சித் தலைவர் கலைஞர் கருணாநிதி வாழ்த்துத் தெரிவித்திருந்தார். 1985ஆம் ஆண்டு இந்திய அரசுக்கு தெரியாமல் இரகசியமாக தமிழீழப் பயணம் மேற்கொண்ட போதும் கலைஞர் கருணாநிதி பெருமிதமாக பழ.நெடுமாறனை பாராட்டி, அவரை மாவீரன் என்று போற்றி அறிக்கை வெளியிட்டிருந்தார்.

தமிழீழ மக்களுக்கு உணவுப் பொருட்களை அனுப்புகின்ற முயற்சிகளுக்கு கலைஞர் மட்டும் ஆதரவாக இருக்கவில்லை. இந்திய அரசு கூட 1987ஆம் ஆண்டில் நேரடியாக கப்பல்கள் மூலம் யாழ்ப்பாணத்திற்கு உணவுப் பொருட்களை அனுப்ப முயற்சித்தது. உணவுப் பொருட்களை ஏற்றி வந்த இந்தியக் கப்பல்களை சிறிலங்கா கடற்படை நடுக் கடலில் வைத்து திருப்பி அனுப்பியது. அதன் பிறகு சில நாட்கள் கழித்து இந்திய வான்படையின் விமானங்கள் யாழ்ப்பாணத்தில் உணவுப் பொருட்களை பரசூட் உதவியுடன் வீசிச் சென்றன.

இன்றைக்கு தமிழ்நாட்டு அரசும் இந்திய அரசும் யாழ்ப்பாணத்திற்கு உணவுப் பொருட்களை அனுப்புவதற்கு தடையாக நிற்கின்றன. முதல்வராக இருக்கின்ற கலைஞர் அன்று போன்று வாழ்த்து தெரிவிக்காது விட்டாலும் கூட, இது போன்ற போராட்டம் நடத்த வேண்டிய அவசியம் ஏற்பட்ட காரணத்தையும், போராட்டம் நடத்துபவர்களின் பக்கம் உள்ள நியாயத் தன்மையையும் உணர்ந்து ஆவன செய்ய வேண்டும் என்பதே உலகத் தமிழர்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.

எதுவாயிருப்பினும் தமிழ்நாட்டு அரசுக்கும், இந்திய அரசுக்கும் தமிழ்நாட்டு மக்களின் உணர்வினை இறுக்கமாகவும் உறுதியாகவும் சொல்வதாக இந்தப் போராட்டம் அமைந்தால், அதுவே ஒரு பெரும் வெற்றியாக இருக்கும்.

Friday, August 03, 2007

மகிந்த ராஜபக்ஸவை பலவீனப்படுத்தும் மேற்குலகம் - தமிழர் தரப்பை குறிவைத்து நடவடிக்கை!

சிறிலங்காவின் அரசியல் நிலை கடந்த சில வாரங்களாக மிகப் பரபரப்பாகக் காணப்படுகிறது. சிறிலங்காவின் ஜனாதிபதிக்கு எதிராக எதிர்கட்சிகள் தமது நடவடிக்கைகளை முடுக்கிவிட்டுள்ளன. மகிந்தவின் அரசை கவிழ்க்கின்ற வேலைகள் திடீரென்று வேகம் எடுத்துள்ளன.

சில மாதங்களுக்கு முன்பு மகிந்த ராஜபக்ஸ எதிர்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியில் இருந்து பல உறுப்பினர்களை தன்னுடைய கட்சிக்குள் இழுத்தார். அவர்கள் அனைவருக்கும் அமைச்சர் மற்றும் பிரதி அமைச்சர் பதவிகளை வழங்கினார். 107 அமைச்சர்களோடு உலகின் மிகப் பெரிய அமைச்சரவையை மகிந்த ராஜபக்ஸ அமைத்தார்.

இந்த நேரத்தில் மகிந்தவின் நடவடிக்கைகளால் அதிருப்தியில் இருந்த மங்கள சமரவீர போன்றோர் அரசில் இருந்த விலகினர் அல்லது விலக்கப்பட்டனர். விலகிச் சென்றவர்கள் மங்களவின் தலைமையில் "சிறிலங்கா சுதந்திரக் கட்சி மக்கள் பிரிவு" என்னும் கட்சியை தொடங்கினர்.

மங்களவின் கட்சி ஐக்கிய தேசியக் கட்சியுடன் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தையும் செய்து கொண்டது. மகிந்தவிற்கு எதிரான கட்சிகள் எல்லாம் ஒன்று சேர்ந்த கொழும்பில் ஒரு ஆர்ப்பாட்ட பேரணியையும் நடத்தின. மகிந்தவிற்கு ஆதரவான பேரணியும் நடைபெற்றது. ஆனால் எதிர்கட்சிகள் நடத்திய பேரணியிலேயே அதிகளவு மக்கள் திரண்டனர்.

விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரில் வெற்றி பெறுவதாக மகிந்தவின் அரசு சிங்கள மக்களை நம்ப வைத்தாலும், அதிகரித்து செல்லும் வாழ்க்கை செலவு சிங்கள மக்கள் மத்தியில் மகிந்தவிற்கு எதிரான உணர்வலைகளை தோற்றுவித்துள்ளது.

மகிந்தவின் அரசுக்கு எதிரான செயற்பாடுகள் வேகமடைந்து வரும் நிலையில், தற்பொழுது இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் கட்சியும் அரசில் இருந்து வெளியேறியுள்ளது. தான் வகித்த அமைச்சர் பதவிகளில் இருந்தும் விலகியுள்ளது. இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் கட்சியை தொடர்ந்து முஸ்லிம் காங்கிரஸ{ம் அரசில் இருந்து வெளியேறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சிறிலங்காவின் நாடாளுமன்றம் 225 உறுப்பினர்களைக் கொண்டது. அரசு அமைப்பதற்கு 113 உறுப்பினர்களின் ஆதரவு அவசியமானது. சிறிலங்கா சுதந்திரக் கட்சி தற்பொழுது ஏறக்குறைய 70 உறுப்பினர்களையே நாடாளுமன்றத்தில் கொண்டுள்ளது. சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களில் பலர் ஈடாட்டத்தில் இருப்பதால், உண்மையான உறுப்பினர்களின் எண்ணிக்கையை சரியான முறையில் கூறமுடியாது உள்ளது.

மங்கள சமரவீரவால் மேலும் சில உறுப்பினர்களை சிறிலங்கா சுதந்திரக் கட்சியில் இருந்து தன்னுடைய கட்சிக்குள் இழுக்க முடிந்தால் மகிந்தவின் அரசு கவிழ்ந்து விடும். ஜேவிபி (39 உறுப்பினர்கள்), ஜாதிக ஹெல உறுமய (7 உறுப்பினர்கள்) போன்ற கட்சிகள் ஆதரவு வழங்கினாலும் மகிந்தவின் அரசால் பெரும்பான்மை பலத்தை பெற முடியாது போய்விடும்.

மகிந்தவினுடைய அரசை கவிழ்க்கும் நடவடிக்கைகளுக்கு மேற்குலகின் ஆசிர்வாதம் இருப்பதாக நம்பப்படுகிறது.

மகிந்த ராஜபக்ஸ மீது கடும் அதிருப்தியில் மேற்குலகம் இருக்கிறது. மகிந்தவின் அடாவடித்தனமான நடவடிக்கைகள் மேற்குலகின் நிகழ்ச்சி நிரலை குழப்புகின்றன. மகிந்தவின் போர்முனைப்பு நடவடிக்கைகளால் விடுதலைப் புலிகள் மீது ஒரு அளவிற்கு மேல் அழுத்தங்களை செலுத்துவதில் தர்மசங்கடமான நிலையை மேற்குலம் எதிர்நோக்கியுள்ளது. மேற்குலகின் நிகழ்ச்சி நிரலுக்கு ஏற்றபடி நடக்கக்கூடியவராக ரணில் விக்கிரமசிங்கவே இருக்கிறார்.

ஆகவே மேற்குலகின் ஆசீர்வாதத்தோடு மகிந்த ராஜபக்ஸவின் அரசைக் கவிழக்கும் நடவடிக்கைகள் மேலும் வேகம் பெறும். சில வேளைகளில் மகிந்தவின் அரசைக் கவிழ்க்கும் முயற்சி வெற்றி பெறவும் கூடும்.

ஆனால் அவ்வாறான ஒரு நிலை உருவாவது தமிழர் தரப்புக்கு நல்லது அல்ல. மேற்குலகின் ஆதரவோடு அமைகின்ற ரணிலின் அரசு தமிழர் தரப்பை சர்வதேசரீதியில் மேலும் பலவீனப்படுத்திவிடும். ரணிலின் புதிய அரசோடு தற்பொழுது உள்ள நிலையிலேயே பேசும்படி விடுதலைப் புலிகளுக்கு மேற்குலகம் கடும் அழுத்தங்களையும் கொடுக்கும்.

அதே போன்று மகிந்த ராஜபக்ஸ நாடாளுமன்றத்தை கலைத்து புதிய தேர்தலை நடத்துவராக இருந்தால், அதுவும் தமிழர் தரப்பிற்கு பாதகமாகவே அமையும். தற்போது உள்ள நிலையில் கிழக்கில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு எவ்வித செயற்பாட்டையும் மேற்கொள்ள முடியாத நிலையிலேயே உள்ளது. பொது தேர்தல் ஒன்று நடந்தால், கள்ளவாக்குகள் மூலம் ஒட்டுக் குழுக்கள் நாடாளுமன்றத்திற்குள் நுளையும் வாய்ப்பு ஏற்படும்.

ஆகவே மகிந்தவின் அரசில் அங்கம் வகிக்கும் கட்சிகள் வெளியேறுவது குறித்து உண்மையில் தமிழர்கள் மகிழ்ச்சி அடைய முடியாது. தமிழ் மக்களுக்கு மகிந்த ராஜபக்ஸ மிகப் பெரும் அவலங்களைக் கொடுத்தாலும், அவருடைய போர்முனைப்பான அடவாடித்தனமான நடவடிக்கைகளே தமிழர்களுக்கு சாதகமான பலன்களையும் கொடுக்கப் போகின்றன.

மகிந்தவினுடைய நடவடிக்கைகளே சர்வதேச வலைப்பின்னலில் இருந்து தமிழர் தரப்பை ஓரளவு விடுவித்தது என்பது இங்கு சுட்டிக்காட்டத் தக்கது.

விடுதலைப் புலிகள் பெரும் போருக்கு தயாராகி வரும் நிலையில், மேற்குலகம் அவசரம் அவசரமாக இலங்கை அரசியலை தலைகீழாக மாற்ற முயற்சிக்கிறது. விடுதலைப் புலிகளின் ஆளுகைக்குள் முக்கிய நிலப் பரப்புக்கள் வரும் முன்னர், விடுதலைப் புலிகளை பேச்சுவார்த்தை மேசைக்கு கொண்டுவர மேற்குலகம் முனைந்து நிற்கிறது. அதற்காக இலங்கையில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த நினைக்கிறது.

ஆனால் விடுதலைப் புலிகள் வேகமாகவும் விவேகமாகவும் செயற்படுபவர்கள் என்பதையே உலகம் மீண்டும் உணர்ந்து கொள்ளும் நிலை ஏற்படும்.

Wednesday, August 01, 2007

ஏமாற்றுக்காரர்களின் ஊர்வலம்!

தமிழர் புலம்பெயர்ந்த வாழுகின்ற நாடுகளில் கோடை காலம் வந்துவிட்டது. வழமை போன்று இந்த ஆண்டும் தமிழர்களை முட்டாளாக்கிப் பிழைப்பவர்கள் பவனி வரத் தொடங்கி விட்டார்கள்.
யேசுவை அழைத்து, அவரோடு தேனீர் அருந்தி, வியாபார ஒப்பந்தங்கள் செய்து, தொலைக்காட்சி தொடங்குவது குறித்து ஆலோசித்து.... இப்படி நிறைய விடயங்கள் செய்வதற்கு பரம்பரை பரம்பரையாக உரிமை பெற்றுள்ள பால் தினகரன் குடும்பம் தற்பொழுது ஐரோப்பாவில் தங்களின் அலட்டல்களையும், கூச்சல்களையும் நடத்துவதற்கு வந்திருக்கிறார்கள்.
தினகரன் குடும்பமே மக்களை ஏமாற்றிப் பிழைப்பவர்கள். பணமே அவர்களுடைய குறியாக இருக்கிறது. இவர்கள் எவ்வளவு தூரம் மக்களை முட்டாள்கள் ஆக்கி பணம் பறிப்பார்கள் என்பதற்கு, அவர்கள் செய்த "தங்கச் சாவி வியாபாரம்" ஒரு உதாரணம்.
2006ஆம் ஆண்டு தினகரன் ஒரு அறிக்கையை வெளியிட்டார். தங்க முலாம் பூசிய ஒரு சாவியைக் காட்டி, அதை தம்முடைய வீட்டிலோ வியாபார நிறுவனத்திலோ தொங்க விடுபவர்களுக்கு கர்த்தர் பணமும் தங்கமும் அள்ளி வழங்குவார் என்று தினகரன் அறிவித்தார். அந்தத் "தங்கச் சாவியின்" விலை ஒன்று அதிகமில்லை. வெறும் 3 இலட்சம் இந்திய ருபாய்கள்தான் (ஏறக்குறைய ஐந்தாயிரம் யூரோக்கள்).
அதே போன்று "தங்கப் பெட்டி" என்று இன்னும் ஒரு திட்டத்தையும் கொண்டு வந்தார். ஒரு தொழில் நிறுவனத்தை நடத்துபவர்கள் தமது பத்திரங்கள், கோப்புக்களை தினகரன் வழங்குகின்ற "தங்கப் பெட்டிக்குள்" வைத்துப் பூட்டி வைத்தால், அவைகளை கர்த்தர் படித்துப் பார்த்துவிட்டு, குறிப்பிட்ட தொழில் நிறுவனம் வழங்குவதற்கு அனைத்து உதவிகளும் செய்வாராம். அந்தத் தங்கப் பெட்டியின் விலையும் 3 இலட்சம்தான்.
இந்தத் தங்கச் சாவியையும் பெட்டியையும் வாங்கி தொழிலதிபர்கள் என்று சொல்லிக்கொள்கிற பல வெங்காயங்கள் ஏமாந்தார்கள்.
தினகரனும் பால்.தினகரனும் 2006 ஏப்ரலில் சிறிலங்கா சென்று மகிந்த ராஜபக்ஸவுடன் கைகுலுக்கி, சிறிலங்காவின் வெற்றிக்காக ஜெபம் செய்து விட்டும் வந்தார்கள். சிறிலங்காவின் பொருளாதாரம் உயரும் என்றும், பாதுகாப்புச் செலவீனம் குறையும் என்றும், பல வெளிநாட்டு நிறுவனங்கள் சிறிலங்காவில் முதலீடு செய்யும் என்றும் கர்த்தர் தன்னிடம் சொன்னதாக "தீர்க்கதரிசனங்கள்" என்ற பெயரில் புளுகுமூட்டையை வேறு அவிழ்த்துவிட்டார்.
இப்படி "தங்கச் சாவி", "தங்கப் பெட்டி" என்று விற்றுக்கொண்டு திரிகின்றவர்களும், மகிந்தவின் நல்ல நண்பர்களும் ஆகிய தினகரன் குடும்பத்தினர், அந்த மகிந்தவினால் அல்லல்பட்டு நசிபடும் மக்களிடமே பணம் புடுங்க வந்திருக்கின்றார்கள்.
ஐரோப்பா வந்த தினகரன் கும்பல் முதலில் பிரான்சில் ஆடி முடித்து அப்படியே டென்மார்க் சென்று தங்களுடைய கூத்தை நடத்திக் கொண்டிருந்த அதே நேரம் சில நூறு மீற்றர்கள் தள்ளி இன்னும் ஒரு கூத்தும் அரங்கேறிக்கொண்டிருந்தது. டென்மார்க்கின் அபிராமி அம்மா தீர்த்தமாடிக் கொண்டிருந்தார்.
டென்மார்க்கிலே தன்னை "அம்மன்" என்று சொல்லிக்கொண்டு வித்தை காட்டிக் கொண்டு திரிகின்ற அபிராமி என்கின்ற மோசடிப் பேர்வழியின் ஆலயத்தின் விழாவும் அப்பொழுதுதான் நடந்து கொண்டிருந்தது. இந்த அபிராமி தன்னுடைய வாயிலே இருந்து சிறிய கற்களையும், சில திரவ வகைகளையும் வரவழைத்துக் காட்டுவார். தன்னை அம்மன் என்று சொல்லி கையிலே சூலாயுதயுமும், தலையிலே கிரீடமுமாக காட்சி அளிப்பார். அவரைத்தான் பக்தர்கள் தேரிலே வைத்து இழுப்பார்கள். அவருக்குத்தான் பூசை செய்து அபிசேகமும் செய்வார்கள்.
அம்மன் மாதிரி மேக்கப் போடுவதால் கேஆர் விஜயா மாதிரியோ, ரம்யா கிருஸ்ணன் மாதிரியோ இருப்பார் என்று யாரும் நினைக்க வேண்டாம். "தூள்" படத்தில் வருகின்ற சொர்ணாக்கா மாதிரி இருப்பார்.
இன்றைக்கு டென்மார்க்கின் மிகப் பெரிய பணக்காரிகளில் ஒருவராக இந்த அபிராமி திகழ்வதாக நம்பப்படுகிறது.
தற்பொழுது டென்மார்க்கில் இன்னும் ஒரு பெண்மணியும் வெளிக்கிளம்பி உள்ளதாக செய்திகள் வருகின்றன. குழந்தைகளுக்கு சைவ சமயப் பாடம் சொல்லிக் கொடுப்பதாக தன்னுடைய விளையாட்டை ஆரம்பித்த அந்தப் பெண்மணி தற்பொழுது சாத்திரம் சொல்வதில் வந்து நிற்கின்றார். அவர் குறித்துக் கொடுத்த நேரத்தில் கணவனும் மனைவியும் கூடினால், விரும்பியபடி குழந்தை பிறக்குமாம். ஆண் குழந்தை வேண்டும் என்று சொல்பவர்களுக்கு ஒரு நேரமும், பெண் குழந்தை வேண்டும் என்று சொல்பவர்களுக்கு ஒரு நேரமும் குறித்துக் கொடுக்கிறாராம்.
எங்கள் தமிழர்கள் அறிவுக்கொழுந்துகளாக இருப்பதால், அவரும் விரைவில் அபிராமி போன்று பணக்காரி ஆகிவிடுவார் என்று உறுதியாக நம்பலாம்.
இந்த நேரத்தில் பிரான்ஸ் பக்கம் பார்வையை செலுத்தினால் அங்கே தன்னை ஆஞ்சசேயர் என்று சொல்லிக்கொண்டு ஒருவர் வந்து நிற்கிறார்.
மனிதர்கள் குரங்கில் இருந்து வந்தவர்கள். அதனால் மனிதர்களிடம் இயல்பாகவே குரங்கின் சாயல் கொஞ்சம் இருக்கும். ஆனால் சிலரிடம் குரங்கின் சாயல் அதிகமாக அமைந்துவிடுவது உண்டு. அதனால் அவர்கள் கேலிக்கும் ஆளாகின்ற சம்பவங்களும் நடப்பது உண்டு.
அப்படி குரங்கின் சாயலைக் கொண்ட இவர், அதையே தன்னுடைய பிழைப்புக்கு மூலதனம் ஆக்கிவிட்டார். கேலிக்கு ஆளாகாமல் தப்பித்ததோடு ஒரு பணக்காரரும் ஆகி விட்டார். கொழும்பில் உள்ள குரங்குக் கோயில் ஒன்றில் இருந்தபடி, அங்கு வரும் குரங்கின் சந்ததியினருக்கு அருள்வாக்கு சொல்வதாக பொய்வாக்கு சொல்லி சம்பாதித்து வருகிறார்.
இந்தக் குரங்கார் முன்பு அடிக்கடி ஜேர்மனியில் உள்ள ஒரு குரங்குக் கோயிலுக்கு வந்து செல்வார். பின்பு பணம் சம்பந்தமாக ஏற்பட்ட ஒரு பிரச்சனையால் ஜேர்மனியில் உள்ள குரங்கின் பக்தர்கள் குரங்காரை விரட்டி விட்டார்கள். ஜேர்மனி வர முடியாத நிலையில், தற்பொழுது பிரான்ஸில் உள்ள தமிழர்களை ஏமாற்றுகின்ற வேலையை செய்து வருகிறார்.
பிரான்ஸ் நிலமை இப்படி இருக்க லண்டனிலோ தமிழர்கள் மிகவும் சோகமயமாக காட்சி தருகிறார்கள். நேரிலும், தொலைபேசியிலும் துக்கம் விசாரிக்கிறார்கள். சம்போவின் மரணம் அவர்களை கடுமையாக பாதித்துவிட்டது.
"சம்போ" என்பவர் மக்களுக்காக பாடுபட்ட ஒரு தலைவரா என்று கேட்டு விடாதீர்கள். வேளாவேளைக்கு சாப்பிட்டு விட்டு சாணம் போடும் மாடு அது. "சம்போ" என்கின்ற இந்த மாடு வேல்ஸில் உள்ள முருகன் கோயிலிற்கு சொந்தமானது. அதற்கு காச நோய் கண்டு விட்டது. மற்றையவர்களுக்கும் நோய் தொற்றிவிடக் கூடாது என்பதற்காக அந்த மாட்டை கொல்வதற்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.
பலத்த இழுபறிகளுக்கு பின்பு மாடு ஊசி போட்டு கொல்லப்பட்டு விட்டது. செஞ்சோலைச் சிறுவர்களுக்கு கண்ணீர் விடாத தமிழர்களும் சம்போவை நினைத்து கண்ணீர் சிந்துகிறார்களாம்.
இப்படி ஐரோப்பாவில் எங்கு திரும்பினாலும் மதத்தின் பெயராலும், கடவுளின் பெயராலும் தமிழர்கள் முட்டாள்கள் ஆகின்ற காட்சியே தெரிகிறது. இந்த நேரத்தில் சனி மாற்றமும் வேறு வருகிறதாம். கோயில்களின் வருமானம் மேலும் உயரப் போகிறது. தமிழர்களின் நிலைதான் தாழ்ந்து கொண்டே போகிறது.