புலம்பெயர்ந்து ஐரோப்பில் வாழும் தமிழ் இளைஞர்களால் ஐரோப்பிய மண்ணில் பகுத்தறிவை வளர்க்கும் நோக்கோடு "ஐரோப்பிய புரட்சிகர பெரியார் கழகம்" உருவாக்கப்பட்டுள்ளது.
ஐரோப்பிய புரட்சிகர பெரியார் கழகம் தன்னுடைய முதலாவது கூட்டத்தில் பின்வரும் தீர்மானங்களை இயற்றியுள்ளது.
- மக்கள் மத்தியில் மூடநம்பிக்கைகளை வளர்க்கும் அனைத்து செயற்பாடுகளையும் கழகம் கண்டிக்கிறது
- மக்கள் மத்தியில் பகுத்தறிவுக் கருத்துக்களை வளர்ப்பதற்கு ஆக்கபூர்வமான செயற்பாடுகளை கழகம் முன்னெடுக்கும்
- ஐரோப்பாவில் தனி மனிதர்களாகவும் அமைப்புக்களாகவும் பகுத்தறிவு பணியில் ஈடுபட்டுள்ளவர்களை கழகம் பாராட்டுகிறது
- தமிழர்கள் பல மொழிகளை கற்பதோடு தமது தாய்மொழியையும் கற்க வேண்டும் என்பதை கழகம் வலியுறுத்துகிறது
- தாய்மொழியை கற்றுக் கொடுக்கும் பிரான்ஸின் தமிழ்சோலை, ஜேர்மனியின் தமிழாலயம் போன்ற நிறுவனங்களை கழகம் பாராட்டுகிறது
- தமிழ்நாட்டின் சேதுசமுத்திரத் திட்டத்திற்கு தடை போடும் மதவாதிகளை கழகம் வன்மையாகக் கண்டிக்கின்றது
- தன்னுடைய முன்னேற்றத்திற்கு தேவையான திட்டங்கைள நடைமுறைப்படுத்துவதற்கு தமிழ்நாட்டிற்கு முழு உரிமையும் உள்ளது என்பதை கழகம் வலியுறுத்துகிறது
- தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் அவசியத்தை கழகம் ஏற்றுக்கொள்கிறது
- தமிழீழத்தில் விடுதலைப் புலிகள் நடத்தும் போராட்டத்தின் நியாயத்தன்மைகளை கழகம் ஏற்றுக்கொள்கிறது
- தமிழீழத்தில் மேற்கொள்ளப்படும் பகுத்தறிவு சார்ந்த பணிகளை கழகம் பாராட்டுகிறது
- இந்தப் பணிகள் புலம்பெயர்ந்த நாடுகளிலும் மேற்கொள்ளப்பட வேண்டியதன் அவசியத்தை கழகம் வலியுறுத்துகிறது
- ஐரோப்பாவில் தலித்தியம் என்ற பெயரில் இனவாத சிறிலங்கா அரசாலும், பார்ப்பனிய வேளாள மேலாதிக்கவாதிகளாலும் மேற்கொள்ளப்படும் குழப்பகர நடவடிக்கைகளை கழகம் வன்மையாகக் கண்டிக்கிறது
- மக்கள் நலனுக்கு விரோதமான இந்த மேலாதிக்கவாதிகள் தமது நலன்களை நிலைநாட்டுவதற்கு தாழ்த்தப்பட்ட மக்களை பயன்படுத்த முனைவதை கழகம் வன்மையாக கண்டிக்கிறது
- மக்கள் விரோத மேலாதிக்கவாதிகளை இனம் காணும்படி அனைவரையும் கழகம் கேட்டுக் கொள்கிறது
ஐரோப்பிய புரட்சிகர பெரியார் கழகத்தின் இணையத்தளம் : http://periyareelam.blogspot.com/
ஐரோப்பிய புரட்சிகர பெரியார் கழகத்தின் மின்னஞ்சல்: periyareelam@gmail.com
6 comments:
test
நான் பெரியார் மீதும் அவருடைய கொள்கைகள் மீதும் பெரும் பற்று வைத்திருப்பவன். அய்ரோப்பிய பெரியார் விழிப்புணர்வு இயக்கம் உருவாக்கப்பட்டதும் மிகவும் மகிழ்ச்சி அடைந்தேன். ஆனால் தமிழின எதிரிகளின் வலைக்குள் அந்த இயக்கம் சிக்குப்பட்டு சின்னாபின்னம் ஆவதை காணும் போது மிகவும் கவலையாக இருக்கிறது.
புரட்சிகர பெரியார் கழகமாவது யாருடைய வலையிலும் சிக்காது தமது பணிகளை திறம்பட செய்ய வேண்டும்
ஓங்குக பெரியார் புகழ்!
- குமரன் (பாரிஸ்)
பெரியாரின்ரை பெயரை சொல்லி இஞ்சை பிரான்சிலை சிபேர் தங்களை பெரியாக்கள் ஆக்க நினைக்கினம் . நினைப்பு பிழைப்பை கெடுக்கிறது எண்டு ஊரிலை சொல்லுவினனம். ஆனால் இவையின்ரை பிழைப்்ப நினைப்பாதான்:கிடக்கு .பாவம் பெரியார். இப்பிடியானதுகளை முதலிலை உங்கடை கழகதத்தாலை திருத்தினால் பெரியாருக்கு புண்ணியமா போகும்.
உங்கள் கழகம் சேது சமுத்திரத் திட்டத்தினை ஆதரிக்கிறதா?
அது தொடர்பான கொள்கை விளக்கமொன்றினை உங்கள் கழகம் வெளியிடுமா?
வாழ்த்துகள் தோழர் சபேசன்....
எங்கு பிறப்பினும் தமிழன் தமிழனே...
இங்கு பிறப்பினும் அயலான் அயலானே...
என்பதைப் போல...
எங்கு செயல்படினும்... பெரியார் இயக்கம் தமிழர்களின் தனிச் சிறப்புக்கும் பகுத்தறிவார்ந்த வாழ்க்கைக்கும் பெரும் பணியாற்ற வேண்டும் என்பதே எம் அவா! தொடரட்டும் பெரியார் பணி!
அழியட்டும் ஆரியப் பிணி!
எனக்கு பெரியார் பற்றி அதிகம் தெரியாது. ஆனால் இந்தப் பெரியார் கழகத்தின் தீர்மானங்கள் துணிவானவையாகவும் சிறப்பானவையாகவும் இருக்கின்றன.
மேலாதிக்கவாதிகளை மக்களை இனம் காணச் சொல்லிக் கேட்டிருக்கிறார்கள். இனம் காட்டுகின்ற வேலையையும் பெரியார் கழகம் செய்தால் நன்றாக இருக்கும்.
ஈழத்தில் யாருக்கும் "தலித்" என்றால் என்னவென்று தெரியாது. இங்கே "தலித் மாநாடு" நடத்தப்படுவதன் நோக்கம் என்ன?
ஈழத்திலே தாழ்த்தப்பட்ட மக்களை மேலாதிக்க சாதியினர் கூலி வேலைக்கு பயன்படுத்தினார்கள். வெளிநாட்டிற்கு வந்த பின்னும் தமிழீழ விடுதலைக்கு எதிரான மேலாதிக்க சாதியினரும் சிங்கள அரசும் தாழ்த்தப்பட்ட மக்களில் சிலரை தொடர்ந்தும் கூலிகளாக பயன்படுத்துகிறார்கள். இந்தக் கூலிகளை கொண்டு "தலித் மாநாடு" என்ற பெயரில் தமிழீழத்திற்கு எதிரான பிரச்சாரத்தை செய்யப் போகிறார்கள்.
அனைத்து மக்களையும் அடிமைத்தனத்தில் இருந்து விடுவிப்பதற்கு விடுதலைப் புலிகள் போராடுகிறார்கள். இவர்கள் "தலித்" என்று சொல்லிக் கொண்டு அடிமைகளாகவே இருக்கிறார்கள்.
- ஒரு தமிழன்
Post a Comment