Thursday, October 11, 2007

நான் நடத்திய கருவறை நுழைவுப் போராட்டம்!

பிரான்ஸில் இருக்கும் தோழர் தமிழச்சி அவர்கள் கருவறை நுழைவுப் போராட்டம் நடத்தப் போவதாக அறிவித்திருக்கிறார். இந்த நேரத்தில் என்னுடைய 12 வயதில் நான் நடத்திய கருவறை நுழைவுப் போராட்டம் நினைவுக்கு வருகிறது.

அப்பொழுது யாழ் குடாவில் இந்திய ஆக்கிரமிப்புப் படைகளுக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் கடும் போர் நடந்து கொண்டிருந்தது. அந்த நேரத்தில் யாழ் குடாவில் உள்ள கொக்குவில் என்று இடத்தில் நான் இருந்தேன்.

சில தினங்களுக்கு முன்புதான் கொக்குவிலுக்கு அருகாமையில் உள்ள பிரம்படி என்னும் இடத்தில் விடுதலைப் புலிகளிடம் பலத்த அடி வாங்கிய இந்தியப் படை ஆத்திரத்தில் முப்பதுக்கும் மேற்பட்ட அப்பாவி மக்களை டாங்கிகளால் ஏற்றிக் கொன்றிருந்தது.

பலாலியில் இருந்து மெதுமெதுவாக இந்தியப் படைகள் முன்னேறிக் கொண்டு வந்தன. நானும் வேறு பலரும் அச்சத்தின் காரணாமாக கொக்குவிலில் இருந்த பாடசாலைகள், கோயில்கள் போன்றவற்றில் போய் தங்குவது உண்டு. பாடசாலைகள், கோயில்களை இந்தியப் படைகள் தாக்காது என்ற நம்பிக்கையில் அவ்வாறு செய்தோம்

ஒரு நாள் நானும் வேறு பலரும் கொக்குவில் சந்தியில் உள்ள கோயிலில் இரவில் போய் தங்கியிருந்தோம். தூரத்தில் துப்பாக்கிச் சன்னங்களின் சத்தமும், செல் வீச்சுக்களின் சத்தமும் கேட்டுக் கொண்டிருந்தன.

திடீரென்று சத்தங்கள் அதிகரித்தன. எமக்கு அருகாமையில் செல்கள் வந்து விழுவது போல் இருந்தது. எல்லோரும் கலக்க முற்றனர்.

கோயில் சாதரண ஓடுகளைக் கொண்டிருந்தது. செல்களில் இருந்து இந்த ஓடுகள் எம்மைப் பாதுகாக்காது. எல்லோருடைய கண்களும் பாதுகாப்பான இடங்களை தேடின.

அப்பொழுது கோயிலின் மத்தியில் முற்றுமுழுதாக கற்களால் கட்டப்பட்டிருந்த கருவறை என் கண்ணில் பட்டது. அந்தக் கருவறைக்குள் நான் ஓடினேன். ஓடிப் போய் கருவறைக்குள் கடவுள் சிலை அமைக்கப்பட்டிருந்த கல்லின் நுனியில் அமரவும் செய்தேன்.

என்னோடு பலரும் கருவறைக்குள் ஓடி வந்தனர். எம்மைப் பார்த்து மற்றவர்களும் கோயிலில் இருந்த ஒவ்வொரு கடவுள் சிலைகளின் அறைகளுக்குள்ளும் ஓடினர்.

இப்படி அன்றைக்கு பலர் கருவறை நுழைவுப் போராட்டத்தை நடத்தினோம். ஈழத்தில் இருப்பவர்கள் என்றாலும் சரி, புலம்பெயர்ந்து வாழ்பவர்கள் என்றாலும் சரி, எம்மில் பலர் கருவறை நுழைவுப் போராட்டம் நடத்திவிட்டுத்தான் இருக்கிறோம்.

இப்பொழுது பிரான்ஸில் தமிழச்சியும் கருவறைப் போராட்டம் நடத்தப் போகிறார் என்று அறிகிறோம். நல்ல விடயம். ஆனால் என்னுடைய கவலை எல்லாம், தமிழச்சி கருவறைக்குள் நுழையும் போது, "மீண்டும் ஆமிக்காரன் வந்துவிட்டானோ" என்ற அச்சத்தில், எல்லோரும் கருவறைக்குள் நுழைந்து விட்டால், அனைவருக்கும் அந்தச் சிறிய இடம் போதுமா என்பதுதான்.

14 comments:

Anonymous said...

உங்களுடைய கருவறை நுழைவுப் போராட்டம் சூப்பர்!!!!!

Anonymous said...

You are from கொக்குவில்... me too but from different decade...

Anonymous said...

கருவறைக்குள் பிரசவங்கள் நடைபெற்ற கதைகளோ அல்லது ஒரு வருடத்துக்கு மேலாக ஐரோப்பிய வானொலியொன்றில் பெரியாரின் கருத்துக்களை நிகழ்ச்சியாக நீங்கள் செய்து வருவதோ அவர்கள் அறியாதது( அவங்க நாட்டில நடந்தவையே அறியாத சின்னப்பிள்ளையது). பாவம் விட்டிடுங்க

வி.சபேசன் said...

என்னுடைய சொந்த ஊர் கொக்குவில் இல்லை. சிறிலங்கா இராணுவத்தாலும், இந்திய இராணுவத்தாலும் பல ஊர்களுக்கு இடம்பெயர வேண்டி ஏற்பட்டது. அப்படி கொக்குவிலிலும் (கொக்குவில் சந்திக்கு அருகாமை) ஒன்றரை வருடங்கள் இருந்திருக்கிறேன்.
அந்தக் காலத்தில் நீங்களும் கொக்குவிலில் இருந்திருந்தால், என்னுடைய கருவறை நுழைவுப் போராட்டத்தை பார்த்திருக்கிலாம். யார் கண்டார்? சிலவேளை நீங்களும் அந்தப் போராட்டத்தில் பங்குபற்றியிருக்கலாம்

லக்கிலுக் said...

நையாண்டி கூட உங்களுக்கு வருமா? :-)))))

Anonymous said...

No... I was too little (i was born in mid 80s)... but i heard lot of similar stories.... even brahmins hiding LTTE soliders with arms inside the karuvarai...

வி.சபேசன் said...

லக்கிலூக்!
நான் என்னுடைய மாபெரும் போராட்டத்தைப் பற்றி உணர்ச்சி பொங்க எழுதியிருக்கிறேன். நீங்கள் நையாண்டி என்கிறீர்களே???!!!

Anonymous said...

சபேசன்
புலம்பெயர் நாடுகளில் பெருகிவரும் சிலசமயங்களில் காட்டுமிராண்டித் தனத்துடனான மூட நட்பிக்கைகள் குறித்து மக்கள் மத்தியில் அறிவூட்டவேண்டியது அவசியம்.

ஆனா எனக்கிருக்கும் கேள்வி என்னவெனில் புலத்தின் சில கோயில்கள் ஏதோ ஒருவகையில் புலிகளுடனோ அல்லது புலிகளின் முகவர்களுடனனோ பொருளாதார நோக்கில் தொடர்பு பட்டிருக்கும் வேளையில் கோவில்களுக்கெதிரான போராட்டம் புலிகளோடு சில முரண்பாடுகளைக் கொண்டுவராதா ?

வி.சபேசன் said...

பகுத்தறிவுள்ளவர்கள் போராட்டம் நடத்துகின்ற போது, விடுதலைப் புலிகளுடன் பிரச்சனைகள் வருவதற்கு வாய்ப்பே இல்லை.

காரணம் பகுத்தறிவுள்ளவர்கள் மக்களுக்கு உண்மை தெரிய வேண்டும், மக்களிடம் பகுத்தறிவுச் சிந்தனை வரவேண்டும் என்ற நோக்கத்தில்தான் போராடுவார்கள்.
நாம் அப்படித்தான் போராடுகின்றோம்.

இந்து மதம் தமிழர்களுக்கு பொருந்தாத மதம் என்பதை விளக்கி, வீணாக கோயில்களுக்கு செலவழிக்கும் பணத்தை ஈழ விடுதலைக்கு வழங்குங்கள் என்று பிரச்சாரம் செய்கின்றோம்.

சாதியத்திற்கு இந்து மதம்தான் காரணம் என்று தெரியாத ஒரு மக்கள் கூட்டத்திடம், இந்து மதப் பார்ப்பனர்கள் ஆதிக்கத்தில் இல்லாத ஒரு மக்கள் கூட்டத்திடம் பெரியாரின் சிந்தனைகளை பரப்ப முனைகின்ற போது, பெரியார் கையாண்ட அதே வழிகளையும், அதே வார்த்தைகளையும் கையாள்வது பொருத்தமான செயலாக இருக்காது.

தனித்துவமான பண்புகள் உள்ள ஈழத் தமிழர்களிடம் பகுத்தறிவை பரப்பு விரும்புகிறவர்கள் தனித்துவமான முறைகளையும் கையாள வேண்டும். தந்தை பெரியாரின் சிந்தனைகளை பரப்புவதற்கு அதுதான் சிறந்த வழி.

இதை சிந்திக்க தவறுபவர்கள் தோல்வியை தழுவுவதோடு, பெரியாரின் பெயருக்கும் களங்கம் விளைவித்துவிடுகின்ற ஆபாயம் இருக்கிறது.

Anonymous said...

நீங்கள் அனைவருக்கும் இடம் போதாது என்று கவலைப் படுகிறீர்கள்.
ஆனால் முக்கியமான பிரச்சனையை மறந்துவிட்டீர்கள்.
தமிழச்சியும் மாசிலாவும் கருவறைக்குள் ஓட...
அதைப் பார்த்து சனங்களும் ஆமிக்காரன் செல்லடிக்கிறான் என்று கருவறைக்குள் ஓட...
எல்லோரும் கருவறைக்குள் தள்ளுமுள்ளுப் பட, ஒருவரை ஒருவர் இடிக்க....
ராஜகரண் "பாசிசப் புலிகள் தமிழச்சி மீது தாக்குதல்" என்று நீளமாய் எழுத.....
சிறிரங்கன் பொதுப்பிரச்சனை என்று ரிபிசியிடம் முறையிடச் சொல்ல.....
தமிழச்சி கனிமொழியக்காவிடம் தொலைபேசி எடுத்து அழ....
மாசிலா ஈழத் தமிழ் பொறுக்கிகளை ஒழிக்க புதுவைத் தமிழர்களை ஒன்றுபடச் சொல்லிக் கேட்க.....
.....
......
இவ்வளவு பிரச்சனை இருக்கிறதே, இதை எல்லாம் விட்டுவிட்டு இடம் போதாது என்று கவலைப்படுகிறீர்களே!!

Anonymous said...

உங்கள் கழகம் நல்லமுறையில் மக்களுக்கு கருத்துக்களை எடுத்துச்சொல்ல எனது வாழ்த்துக்கள்.

புலம் பெயர் தேசங்களில் உள்ள நாடுகளின் சட்ட திட்டங்களை அனுசரித்து செய்வதே மேலானது.

கருவறை நுளைவுப்போராட்டத்தையும் சாமிக்கு செருப்பால் அடிப்பதும் புலம்பெயர் தேசத்தில் தேவையில்லாத ஒன்று காரணம் இங்க உள்ள சட்டங்களை வைத்தே சில உரிமைகளை பல காரியங்களை செய்ய முடியும்

இங்தே தமிழச்சி பெரியார் சொன்ன கருத்துக்களை மீள் பதிவு செய்கின்றார் என்பதை கவனத்தில் கொள்ளவும் தவிர அவவுக்கென்று சொந்த கருத்தில்லை

அவர் ஈழத்துப் பெண் இல்லை என்பது உங்களுக்கு ஏற்கனவே தெரிந்திருக்கும்

தொலைபேசியில் ஆபாச உரையாடல் என்பது விளம்பர நோக்கம் கொண்டதாகவே உள்ளது என்பதையும் அறிக.

அவர் பதிந்த தொலைபேசி உரையாடல் என்னுமொருவருக்கு முதன்நாள் ஆபாசமாக ஒருவான் பேசினான் என்று விளங்கப்படுத்தி பதிவு செய்திருக்கின்றார்.

அவரின் வேண்டுகோளை பாருங்கள்.

///தோழருக்கு வணக்கம் வாழ்த்துக்கள்.

நீங்கள் கழகம் கண்ட பிறகு ஏதோ பெரியதாக ஒரு துணை கிடைத்து விட்ட சந்தோஷம் எனக்கு. நாம் இருவரும் இணைந்து "களம்" இறங்க குறிப்பாக கோயில், மண்ணாங்கட்டி, சாதி ஒழிப்பு, சாமிக்கு செருப்படி கொடுப்பது, அய்ரோப்பாவில் இருக்கும் கோவில்களை ஒழித்துகட்ட போராட்டம் நடத்துவது, கோயிலுக்குள் புகுந்து கருவரை போராட்டம் செய்வது, பெரியாரின் பெண்ணூரிமைச் சிந்தனைகளை தமிழ் பெண்களுக்கு எடுத்துச் சொல்லவும், ஜோசியம் பார்க்க வருகின்றேன் என்று சொல்லிக் கொண்டு அய்ரோப்பிய நாடுகளுக்கு வரும் சோதிடர்களையும், தமிழ் மொழிக்கு முக்கியத்துவம் தராமல் நம் உயிருக்கு உயிரான தாய் மொழி தமிழை அவமதித்து விட்டு சமஸ்கிருதத்தில் அர்ச்சனை செய்துக் கொண்டிருக்கும் பார்ப்பான்களை பெரியார் தொண்டர்கள் தமிழ்நாட்டில் செய்வது போல் செருப்படி கொடுத்து அய்ரோப்பாவை விட்டே (கவனிக்க "உலகத்தை விட்டு அல்ல" அய்ரோப்பாவை விட்டு) புறம் ஓடச் செய்யவும் நாம் ஒன்று கூடுவோம்.அய்ரோப்பா முழுவதும் எல்லா நாட்டுக்கும் சென்று கலகம் செய்வோம் ஏனெனில் நீங்கள் அய்ரோப்பா கழகம்! நான் அய்ரோப்பா இயக்கம்! நம் கொள்கைகள் எட்டு திக்கும் பரவ வேண்டும் செயல் வடிவம் கொடுக்க வேண்டும். சும்மா அறிக்கை மட்டும் விட்டுக் கொண்டிருக்கலாமா? ஏதாவது பிரச்சனை என்றால் சொல்லுங்கள்.

அய்யா பழ.நெடுமாறன் இருக்காக........
தமிழர் தலைவர் கி.வீரமணி அய்யா இருக்காக.....
தோழர் கொளத்தூர் மணி இருக்காக........
கனிமொழி அம்மா இருக்காக........

நம்ப பக்கம் பலம் கூட. சும்மா பிச்சி பிண்ணிடனும் தோழரே!
எப்ப கலகம் செய்யலாம் ?///




இந்த தமிழச்சியின் உள்நோக்கத்தை புரிந்து கொள்ள ஈழத்தமிழருக்கு அதிக நேரம் பிடிக்காது

மக்கள் மத்தியில் குழப்பத்தையும் பிரிவினை முரண்பாடுகளை தோற்றுவித்து அதற்கு புலிச்சாயம் பூசுவதே குறிக்கோள்

இவர் தலித் மாநாட்டில் காட்டும் ஈடுபாடு யாவரும் அறிவார்

தமிழ் நாட்டில திக வினருக்கும் தலித் மக்களுக்கும் புலிகளுக்குமிடையில் முரண்பாட்டை ஏற்படுத்துவதே பிரதான குறிக்கோள் என்பதாகும்.

தமிழச்சி யார் என்பது உங்களுக்கு புரியாமல் இருக்க ஒரு நியாயமும் இல்லை

அவரின் கேள்விகளுக்கு பதில் அளிப்பது நல்ல விசயமும் இல்லை.

ஈழத்தமிழன் எல்லம் கேணயன் என்று பொறிவைக்கும் இவரிடம் அனைவரும் கவனமாக இருப்பது அவசியம்

Anonymous said...

இங்கே ஒரு நண்பர் சொன்னது போன்று எங்கள் நாட்டில் பிரசவங்களே கருவறைக்குள் நடந்திருக்கின்றன. பொதுவாக பிரசவத்தின் போது கருவறையில் இருந்து வெளியே வருவார்கள். எங்கள் நாட்டில் கருவறைக்குள்ளேயே பிரசவங்கள் நடந்தன.

அப்படி கருவறைக்குள் பிறந்த ஒரு குழந்தை தோழர் தமிழச்சி கருவறைக்குள் நுழைந்து கூத்தடிப்பதைப் பார்த்தால் என்ன நினைக்கும்? இந்த அக்காவுக்கு பைத்தியம் பிடித்து விட்டது என்று நினைக்காதா?

வி.சபேசன் said...

பைத்தியம் என்று நினைப்பதில் பிரச்சனை இல்லை. போராட்டம் ஒன்றில் ஈடுபடும் போது மக்கள் அப்படித்தான் நினைப்பார்கள். உலகின் அனைத்துப் போராட்டங்களும் ஆரம்பிக்கப்பட்ட போது, மக்கள் போராட்டத்தில் ஈடுபடுபவர்களை பார்த்து "பைத்தியக்காரத்தனம்" என்று எள்ளிநகையாடியது உண்டு.
ஆனால் சில போராட்டங்கள் உண்மையிலேயே பைத்தியக்காரத்தனமாக அமைந்துவிடுவதும் உண்டு.
நாம் சற்றுப் பொறுத்திருந்து பார்ப்போம்...

மாயா said...

/// உங்களுடைய கருவறை நுழைவுப் போராட்டம் சூப்பர்!!!!! ///

பகிடி போல தெரியுதோ ? எல்லாம் அனுபவிச்சாதான் தெரியும்