Wednesday, October 17, 2007

"போஸ்" கொடுக்கும் தமிழச்சிகள்!

சென்ற ஆண்டு கேரளாவைச் சேர்ந்த இந்தியாவின் பிரபல பெண்ணிய எழுத்தாளரான கமலாதாஸிடம் ஆனந்த விகடன் பேட்டி கண்டது. அப்பொழுது அவரிடம் "உங்களுக்கு பிடித்த தலைவர் யார்" என்று கேட்கப்பட்டது.

கமலாதாஸ் எவ்வித தயக்கமும் இன்றி பளிச் என்று சொன்னார், "புலிகளின் தலைவர் பிரபாகரன்". அத்துடன் புலிகளை இந்தியா தீவிரவாதியாக சித்தரிப்பது தவறு என்றும் சொன்னார்.

இத்தனைக்கும் கமலாதாஸ் ஒரு தமிழ் பெண்மணி அல்ல. ஆனால் தமிழ் மக்களின் தலைவரையும், விடுதலைப் புலிகளின் போராட்டத்தின் நியாயத்தன்மையையும் உணர்ந்தவராக இருந்தார்.

இப்படி வேற்று இனத்தை சேர்ந்த பலரே தமிழீழ மக்களின் போராட்டம் சரியானது என்று ஏற்றுக் கொள்கின்ற போது, கூலிக்கு மாரடிக்கும் தமிழர்கள் சிலர் தமிழீழ போராட்டத்தை கொச்சைப் படுத்தி துரோகம் புரிந்து வருகின்றார்கள். இந்த இழிவான செயலில் ஆண்களுக்குப் போட்டியாக சில பெண்களும் ஈடுபடுவதுதான் வேதனையானது.

சம உரிமை என்பதை தவறாகவே புரிந்து வைத்திருக்கும் இந்தப் பெண்கள் துரோகம் செய்வதிலும் சம உரிமை வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்களோ தெரியவில்லை.

தமிழீழத்திற்கு எதிராக பிரச்சாரம் செய்யும் ஒரு பெண்கள் குழு ஆண்டு தோறும் சந்தித்துக் கலந்துரையாடுவது வழக்கம். இந்த ஆண்டும் "பெண்கள் மாநாடு" என்று பெயரில் இருபதிற்கும் குறைவானவர்கள் கூடினார்கள். இவர்களின் உள்நோக்கம் புரியாத சிலரையும் பெண்ணுரிமை என்று சொல்லி சந்திப்பிற்கு அழைத்திருந்தார்கள்.

வழமை போன்று இந்த ஆண்டும் தமிழீழப் போராட்டத்தை வேறவேறு வடிவங்களில் கொச்சைப்படுத்தினார்கள். இந்த பெண்கள் சந்திப்பை ஒழுங்கு செய்வதில் முன்னணியில் நின்று வேலை செய்யும் இராஜேஸ்வரி பாலசுப்ரமணியம் "இலங்கையில் தமிழ் பெண் தற்கொலைதாரிகள்" என்று ஒரு கட்டுரையை வாசித்தார்.

அந்தக் கட்டுரையின் மூலம் தமிழீழப் போராட்டம், தமிழீழ விடுதலைப் புலிகள், பெண் போராளிகள் என்று அனைத்தையுமே இழித்துரைத்தார். ஈழப் பிரச்சனை பற்றி மற்றவர்களும் இதையொத்த செயலைத்தான் இந்தச் சந்திப்பில் செய்தனர். இவர்கள் சென்ற ஆண்டும் இதைத்தான் செய்தார்கள். இந்த ஆண்டும் செய்தார்கள். இனிமேலும் செய்வார்கள்.

தமிழீழ மக்களின் மிகப் பலமான ஆயுதமாக உயிராயுதம் இருக்கிறது. இந்த உயிராயுதமாகிய கரும்புலிகளை கலைக்கச் சொல்லி ஏகாதிபத்திய அமெரிக்காவும் சொல்கிறது. பார்ப்பனிய இந்தியாவும் சொல்கிறது. இனவாத சிங்கள அரசும் சொல்கிறது. இந்தப் பெண்கள் சந்திப்பும் சொல்கிறது.

இதில் இருந்தே இவர்களின் நோக்கத்தை புரிந்து கொள்ளலாம்.

பெண் விடுதலை என்பதில் பல புரட்சிகளை தமிழீழ தேசம் செய்து காட்டியிருக்கிறது. பல நாடுகளில் நடந்த விடுதலைப் போராட்டங்களில் பெண்கள் பங்கு பற்றியிருக்கிறார்கள். சண்டைகளுக்கு மட்டும் பயன்படுத்தப்பட்ட பெண்கள், சண்டை முடிந்ததும் மீண்டும் அடுக்களைக்கு அனுப்பப்பட்டார்கள். குழந்தை பெறுவதற்கு அனுப்பப்பட்டார்கள்.

ஆனால் தமிழீழத்தில் மட்டும்தான் பெண்களும் நிர்வாகத்தில் சம அளவு பங்கேற்கிறார்கள். தமிழீழத்தில் நடைபெறும் நீதித்துறை, காவல்துறை, அரசியல்துறை, நிதித்துறை மற்றும் பல நிறுவனங்களில் பெண்கள் பெரும் பங்கு வகிக்கிறார்கள்.

யுத்த களங்களில் கூட பெண்களுக்கு பின்தள வேலைகள் மட்டுமே மற்றைய நாடுகள் வழங்குகின்றன. தமிழீழத்தில் பெண்களே பல சண்டைகளை முன்னின்று நடத்தி சிங்களப் படைகளை விரட்டி அடித்து சாதனை புரிந்திருக்கிறார்கள்.

இப்படி போர் என்றாலும் சரி, நிர்வாகம் என்றாலும் சரி, பெண்களுக்கு சம உரிமையை தமிழீழ தேசம் வழங்கி இருக்கிறது. பழமைவாத மரபுகளுக்கு பல நூற்றாண்டுகளாக சிக்குப்பட்டிருந்த தமிழர் தேசம் கண்டுள்ள மாற்றங்கள் வியக்கத்தக்கன. மிகப் பெரும் புரட்சிகள் இவைகள். வீடுகளிலும் வீதிகளிலும் இருந்த பெண்ணடிமைத்தனத்தில், இன்றைக்கு வீதிகளில் இருந்த பெண்ணடிமைத்தனம் பெருமளவு ஒழிக்கப்பட்டுள்ளது.

ஆனால் தமிழ் பெண்கள் வீதிகளுக்கு வந்து இனவாத அடக்குமுறைக்கு எதிராக போராடுவதற்கு எதிராக பிரச்சாரம் செய்வதை தமது தொழிலாக சில பெண்கள் கொண்டுள்ளார்கள். தங்களை தமிழச்சிகள் என்று சொல்லிக் கொள்ளும் இவர்கள், அப்படிச் சொல்வதற்கு வெட்கப்பட வேண்டும்.

பெரும் வல்லரசுகளை எதிர்த்து புரட்சி செய்கின்ற பெண்கள் தமிழீழத்தில்தான் இருக்கின்றார்கள் என்பதை காகிதத்தில் கலகம் புரிவதாக சொல்பவர்கள் உணர்ந்து கொள்ள வேண்டும். இந்தப் பெண்களின் எழுச்சிக்கு எதிராக பிரச்சாரம் செய்பவர்களிடம் போய் தங்கள் கலகத்தை காட்ட வேண்டும்.

ஆனால் காகிதக் கலகக்காரர்களும் தமிழீழ பெண்களின் எழுச்சிக்கு எதிரானவர்களுடன் கைகோர்த்து புகைப்படத்திற்கு "போஸ்" கொடுக்கிறார்கள். இவர்களால் புகைப்படத்திற்கு "போஸ்" கொடுக்க மட்டும்தான் முடியும். இதைவிட பெண்களுக்கான விடுதலையில் ஒரு மாற்றத்தையும் செய்ய முடியாது.

ஆனால் ஒரு காலத்தில் முகத்திற்கு பவுடர் பூசி நகை அணிந்து புகைப்படத்திற்கு "போஸ்" கொடுத்துக் கொண்டிருந்த தமிழீழத்தின் பெண்கள் கூட்டம், இன்றைக்கு வேர்த்து வடிகின்ற முகத்தோடு உச்சி வெய்யிலில் மக்களின் விடுதலைக்காக பணி செய்து கொண்டிருக்கிறார்கள். புரட்சி செய்கின்ற இந்தப் பெண்கள் தமிழீழத்தில் இருந்து பெண்ணடிமைத்தனத்தை முற்றிலுமாக இல்லாது ஒழிப்பார்கள்.

http://www.webeelam.com

25 comments:

Anonymous said...

தலித்துகளைப் பற்றி பேசுபவர்கள், முதலில் தலித்துகள் படும் கொடுமைகளை உணர்ந்தவராக இருக்கவேண்டும். பாரிஸ்ல இருந்துகொண்டு கோட்சூட் போட்டுகிட்டு போட்டோவுக்கு போஸ் கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை. உண்மையான ஏழை இருக்கிற இடத்தில் வரும் வாசமாவது இவங்களுக்கு தெரியுமா?

Anonymous said...

தோழர் தமிழச்சி இதுவரை சொந்தமாக எழுதின கட்டுரை 1/1000 தான் இருக்கும். மத்த எல்லாம் பெரியாருடையவை(1973-க்கு முந்தியவை). இதுவேபோதும், இவங்களுக்கு ஒண்னும் தெரியாதுனு சொல்ல?

அழுக்கு சட்டைய பத்தி கூட கவலைபடாமல் போராட்ட வேட்கையோட அலைந்த ஈரோட்டுசிங்கம் பத்தி பேசுரவங்க, உபயோகிக்கும் கோட் முடி அலங்காரத்திற்கு எவ்வளவு செலவழித்து கொண்டு இருக்கிறார்கள்?

Anonymous said...

நான் முதன்முதலில் பதிவு படிக்க வந்தபோது, தோழர் தமிழச்சியோட பெரியார் எழுதிய கட்டுரைகளை விரும்பி படிப்பேன். பிறகு வெறும் வெளிப்பூச்சுக்குத்தான் இப்படி வெட்டியாக கட் அண்ட் பேஸ்ட் செய்துகொண்டு இருக்கிறார் என்பது தெரிந்தது.

Anonymous said...

ஈழத்தமிழனை பற்றியும், தலித்தை பற்றியும் பேச, முதல்ல அவர்களுடைய பிரச்சனையைப் உணர்ந்தவராகவும் புரிந்துகொண்டவராகவும் இருக்கவேண்டும்.அப்படி புரியாதவர்கள் பேசாமல் இருப்பது சாலச்சிறந்தது.

Anonymous said...

//தலித்துகளைப் பற்றி பேசுபவர்கள், முதலில் தலித்துகள் படும் கொடுமைகளை உணர்ந்தவராக இருக்கவேண்டும். பாரிஸ்ல இருந்துகொண்டு கோட்சூட் போட்டுகிட்டு போட்டோவுக்கு போஸ் கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை. உண்மையான ஏழை இருக்கிற இடத்தில் வரும் வாசமாவது இவங்களுக்கு தெரியுமா?//

ஆஹா, எப்படிய்யா இவ்ளோ புத்திசாலித்தனமா யோசிக்கிறீங்க? அபாரம், அற்புதம் போங்கய்யா உங்க ஆராய்ச்சிகளெல்லாம்! உங்க தலைவரு இதுக்கு உங்களை மிகவும் மெச்சிக்குவார்!
:-(

Anonymous said...

//தமிழீழ மக்களின் மிகப் பலமான ஆயுதமாக உயிராயுதம் இருக்கிறது. இந்த உயிராயுதமாகிய கரும்புலிகளை கலைக்கச் சொல்லி ஏகாதிபத்திய அமெரிக்காவும் சொல்கிறது. பார்ப்பனிய இந்தியாவும் சொல்கிறது. இனவாத சிங்கள அரசும் சொல்கிறது. இந்தப் பெண்கள் சந்திப்பும் சொல்கிறது.//

மிகச் சரியாகச் சொல்லி இருக்கிறீர்கள். இவர்கள் எல்லோரும் வேறுவேறு பெயர்களில் வந்தாலும் சிந்தனை என்பது தமிழர்கள் விடுதலை பெற்றுவிடக் கூடாது என்பதுதான்.

Anonymous said...

தமிழச்சி எந்த தமிழருக்கும் எதிர்ப்பானவர் அல்ல. அவரது உடை தோற்றத்தையோ, முடி அலங்காரத்தையோ வைத்து எதையும் எடை போடக்கூடாது.

Anonymous said...

குமரன் (பாரீஸ்) //மிகச் சரியாகச் சொல்லி இருக்கிறீர்கள். இவர்கள் எல்லோரும் வேறுவேறு பெயர்களில் வந்தாலும் சிந்தனை என்பது தமிழர்கள் விடுதலை பெற்றுவிடக் கூடாது என்பதுதான்.//

அடப்பாவிகளா!
இதைவிட கேவலமாக யாராலும் எழுத முடியாது போங்க‌!
:-(

Anonymous said...

பெண்கள் சந்திப்பு என்ற பெயரில் பெண் போராளிகளையே கொச்சைப்படுத்தி இருக்கிறார்கள். நீங்கள் ஆரம்பத்தில் "பெண்கள் மாநாடு, தலித் மாநாடு" என்று பல பெயர்களை வைத்துக் கொண்டு, தமிழின எதிரிகள் தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்கு எதிராக பரப்புரை செய்யப் போகிறார்கள் என்று சொன்னீhகள். பெண் போராளிகளை கொச்சைப் படுத்தி பேசுவார்கள் என்று சொன்னீhகள். அப்பொழுது தமிழ்நாட்டு உறவுகள் சிலர் அதை நம்பவில்லை.

தற்பொழுது துரோகிகள் நடத்துகின்ற ஊடகங்களில் பெண்கள் மாநாட்டில் பேசப்பட்டவைகள் பற்றிய செய்திகள் வரத் தொடங்கி உள்ளன. நீங்கள் ஆரம்பத்தில் சொன்னதன் படியே பெண்கள் மாநாடு நடந்துள்ளது என்பதற்கு இதுவே சான்று. தலித் மாநாடும் இப்படித்தான் நடக்கப் போகிறது என்பதை இனியாவது அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும்.

Anonymous said...

தமிழச்சிக்கு உங்களுடைய அமைப்புகளை பற்றிய எந்த ஒரு விசயமும் தெரியாது, அதை பற்றிய கவலை எதுவும் அவருக்கு கிடையாது. அவர் எடுத்துக்கொண்ட துறையே வேறு. வீணாக ஏன் அவரை உங்கள் வம்புக்கு இழுக்குறீங்க்?

Anonymous said...

சபேசன் மற்றும் அவர் சார்ந்த அன்பர்களே, நீங்கள் நல்லது செய்வதாக நினைத்துக்கொண்டு, உங்கள் சமூகத்தை பிளவு படுத்தி வருகிறீர்கள். இது கொஞ்சமும் சரியல்ல. ஒற்றுமைக்கு வழி தேடுங்கள்.

Anonymous said...

//""போஸ்" கொடுக்கும் தமிழச்சிகள்!"//

வேண்டுமென்றால், நீங்களும் போஸ் கொடுத்துவிட்டு போங்களேன் அய்யா. ஏன் இந்த பொறாமையும் காழ்ப்புணர்ச்சியும்? அவ‌ரால் முடிகிற‌து, செய்கிறார். அவ்வ‌ள‌வுதான். இதில் விவாத‌ம் செய்ய‌ என்ன‌ இருக்கிறது?
;-(

ரவி said...

லக்கிலூக்கின் மடிப்பாக்கம் பதிவில் தமிழச்சி தன்னுடைய விளக்கத்தை தந்திருக்கிறார்...

போகாதே....என்றார்கள்...போவேன் என்றேன்...

என்று சொல்கிறார்...

இந்த மாநாடு மீது இயக்கத்துக்கு வெறுப்பு இருந்தால் இந்த மாநாட்டை தடைசெய்யவேண்டியதுதானே ?

சென்ற ஆண்டும் நடந்தது...அதற்கு முந்தைய ஆண்டும் நடந்தது....(தமிழச்சியின் கூற்று படி 26 ஆண்டுகள்)

போக வேண்டாம் என்று சொல்லியதால் வம்படியாக சென்றுள்ளார்...

அவரது சுயத்தில் தலையிட யாருக்கும் உரிமை கிடையாது என்று நினைக்கிறேன்...

மேலும் வளர்க்காமல் விட்டுவிடுவது நல்லது...!!!

வி.சபேசன் said...

ஈழத் தமிழினம் பிளவுபட்டு இருக்கவில்லை. சிலர் பிளவுபடுத்த முயற்சிக்கிறார்கள். அதற்கு புதுப் புதுப் பெயர்களை சூட்டுகிறார்கள். இதைத்தான் நான் சுட்டிக்காட்டுகிறேன்.

பெண்கள் சந்திப்பிலே பெண் போராளிகளுக்கு எதிரான கருத்துக்கள் வைக்கப்பட்ட போது, அதை எதிர்த்து அங்கிருந்த யாரும் கலகம் செய்ய முன்வரவில்லை. அப்படிச் செய்திருந்தால், அது உண்மையான கலகமாக இருந்திருக்கும். பெண் விடுதலையை நேசிப்பவர்கள் என்பதும் உண்மையாக இருந்திருக்கும்.

ஆனால் வாயை மூடிக் கொண்டு இருந்து விட்டு வந்திருக்கிறார்கள் என்றால், இவர்களும் அதற்கு ஒத்துப் போகிறார்கள் என்றுதான் அர்த்தம்.

பெண்கள் சந்திப்பு, தலித் மாநாடு போன்ற நடவடிக்கைகளின் நோக்கம் எதுவென்பது ஈழத் தமிழர்கள் அறிந்த ஒன்று. ஆனால் தமிழ்நாட்டுத் தமிழர்களை சிலர் ஏமாற்றப் பார்க்கிறார்கள். விடுதலைக்கு எதிரான நடவடிக்கைகளை பெண்களுக்கானது, தலித்துக்களுக்கானது என்று திரிக்கிறார்கள்.

இந்த மாநாட்டில் என்ன பேசப்பட்டது என்பதை நான் இங்கே கூறியிருக்கிறேன். நான் சொன்ன விடயங்கள் வெகு குறைவு. அதை விட அதிகமாக அங்கு பேசப்பட்டது.

தமிழர்களை பிளவுபடுத்த முனையும் தீய சக்திகள் குறித்து அனைவரும் விழிப்பாக இருக்க வேண்டும்

Anonymous said...

வி.சபேசன் : //தமிழர்களை பிளவுபடுத்த முனையும் தீய சக்திகள் குறித்து அனைவரும் விழிப்பாக இருக்க வேண்டும்//

இதையே நீங்கள் ஒரு கண்ணாடி முன் தனியாக நின்று உங்களுக்காக உரக்கச் சொல்லி கொள்ளுங்கள் சபேசன் அய்யா!

வி.சபேசன் said...

செந்தழல் ரவி!

தமிழச்சி என்ன குழந்தையா நாம் செய்யாதே என்றால் அடம்பிடித்துக் கொண்டு செய்வதற்கு?

அதை விட நாம் யாரும் எதற்கும் தடை போடவில்லை. தடை போடும் அதிகாரமும் எம்மிடம் இல்லை. நான் ஒன்றைப் பற்றிச் சொல்லத்தான் முடியும். முடிவு செய்வது அவர்களுடை கையில்தான் இருக்கிறது.

நாம் தெளிவாக பெண்கள் சந்திப்பு, தலித் மாநாடு போன்றவைகள் குறித்து சொல்லியுள்ளோம். இந்த மாநாடுகளை நடத்துபவர்கள் யார் என்பது எமக்குத் தெரியும்.

நாம் "எம்மவர்கள்" என்று கருதுபவர்களை "அங்கே போக வேண்டாம்" என்று அன்பாகக் கேட்டுக் கொண்டோம். ஆனால் அவர்கள் போய்த்தான் தீருவோம் என்று அடம்பிடித்து அங்கே போய் அவர்கள் "எம்மவர்கள்" அல்ல என்பதை காட்டி விட்டார்கள். நாமும் அவர்களின் உண்மையான முகத்தை கண்டு விட்டோம்.

தெளிவாகச் சொல்கிறேன். நாம் எதற்கும் தடை போடவில்லை. ஆனால் தமிழினத்தை அழித்துவிடத் துடிப்பவர்களோடு கூட்டுச் சேர்ந்து கொண்டு "தலித், பெண் விடுதலை" என்று பேசி ஊரை ஏமாற்ற வேண்டாம். இதுவே எம் வேண்டுகோள்.

நான் முன்பே சொல்லி இருக்கிறேன். இந்த மாநாடுகள் நடப்பதைத்தான் நான் விரும்புகிறேன். அப்பொழுதுதான் சிலரை இனம் காட்ட சுலபமாக இருக்கும். சிலர் தெளிவு பெறுவும் வாய்ப்பாக அமையும்.

வி.சபேசன் said...

ஆனானிகளாக இருவர் தொடர்ந்து இங்கே பின்னூட்டம் எழுதிக் கொண்டிருக்கிறார்கள். பல பின்னூட்டங்களை எழுதினாலும், எழுதுவதைக் கொண்டு அது இருவர்தான் என்பது புரிகிறது.

ஆதரவாக எழுதுபவரும் சரி, எதிராக எழுதுபவரும் சரி, தெளிவான கருத்துக்களை வைக்காமல், அரட்டை வடிவிலேயே எழுதிக் கொண்டிருக்கிறார்கள்.
ஆகவே கடைசியாக வந்த ஆதரவானதுமான, எதிரானதுமான இரண்டு பின்னூட்டங்களை நிராகரித்துள்ளேன். அதில் தமிழச்சிக்கு ஆதரவாக வந்த ஒரு பின்னூட்டம் உண்மையேலேயே ஆதரவானதா, அல்லது அவரை கிண்டல் செய்யும் நோக்கம் கொண்டதா என்பதும் எனக்கு புரியவில்லை.

தொடர்ந்து பெண்கள் மாநாடு, பெண் விடுதலை போன்றவற்றைப் பற்றி கருத்துக்கள் வந்தால் மகிழ்ச்சி அடைவேன்.

-/பெயரிலி. said...

சபேசன், மாயாவின் பதிவிலே போட்ட அதே பின்னூட்டத்தினையே உங்களுக்கும் இங்கே போடுகிறேன். இங்கும் அது பொருந்துமெனத் தோன்றுகிறது.
=====================

இவ்விடுகையின் உள்ளடக்கத்துக்கான பின்னூட்டமல்ல இது.

இப்படியான பதிவுகளுக்கு அநாமதேயங்கள் உங்களுக்கு யார் யாரெனத் தெரியாதவிடத்து, அநாமதேயப்பின்னூட்டங்களைத் தவிர்ப்பது நல்லது. ஏனென்றால், இலங்கை வலைப்பதிவர்களைத் தாக்குவேதே தொழிலாகக் கொள்கின்ற அன்பர்கள் குழம்பிய குட்டையிலே மீன் பிடிக்க அநாமதேய நண்பர்களாகப் பதில்களையிடலாம். இதுதான் மேலே சில பின்னூட்டங்களைப் பார்க்கும்போது தெரிகிறது.

நன்றி.

வந்தியத்தேவன் said...

தமிழச்சி ஒரு சுய விளம்பரப் பிரியை அவரை மீண்டும் மீண்டும் தூக்கி பெரியாளாக்கிவிடாதீர்கள்.
மாயாவின் பதிவில் என் பதில் விரிவாக இருக்கின்றது சென்றுபாருங்கள்

http://palipedam.blogspot.com/2007/10/blog-post_17.html

வி.சபேசன் said...

நான் இந்தக் கட்டுரையில் தமிழச்சியை ஒரு முக்கிய பாத்திரமாக கருதி எழுதவில்லை. என்னுடைய கட்டுரையில் சில தமிழ் பெண்கள் (அதாவது தமிழச்சிகள்) விடுதலைக்கு எதிராக செயற்படுகிறார்கள் என்பதை மையமாக வைத்துத்தான் எழுதினேன்.

உண்மையான பெண் விடுதலைக்கு தமிழீழம் சரியான அடித்தளம் இட்டுக் கொடுத்திருக்கிறது. ஆனால் இவர்களோ பெண்ணுரிமை என்று சொல்லிக் கொண்டு, பெண் போராளிகளை கொச்சைப்படுத்துகிறார்கள்.

பெண் போராளிகள் வெறும் சண்டைகளில் மட்டும் ஈடுபடாது, ஒரு தேசத்தை நிர்மாணிக்கின்ற வேலையோடு, அதை நிர்வாகிக்கின்ற வேலையையும் தமிழீழத்தில் செய்து வருகிறார்கள். ஒரு பெண்ணுரிமைவாதி இவைகளை பாராட்டவே செய்வார்.

ஆனால் இவர்கள் தமிழீழப் போராட்டத்தையும், தமிழீழப் பெண்களையும் இழிவுபடுத்துகிறார்கள். அதற்கு சிலர் நற்சான்றிதழ் வழங்க முயற்சிக்கிறார்கள்.

இவைகளைப் பற்றித்தான் எழுதியிருக்கிறேன். நான் சில பின்னூட்டங்களை அனுமதித்து வி;ட்டதால், விவாதம் திசைமாறிப் போய்விட்டது. (அதற்காக அனானிகளை இனிமேல் அனுமதிக்க மாட்டேன் என்று அர்த்தம் இல்லை. அனானிகளை விட்டால் எனக்கு யார் பின்னூட்டம் இடுவார்கள்?)

தமிழச்சியை இந்தக் கட்டுரையில் நான் குறிப்பிடவே இல்லை என்றும் பொய் சொல்ல மாட்டேன். அவரும் இருக்கிறார். பெண்கள் சந்திப்பு பற்றி எழுதுகின்ற போது அவரும் வரத்தான் செய்வார். அது தவிர்க்க முடியாதது.

ஆயினும் தமிழச்சியை நோக்கி மட்டும் கருத்துக்களை வைக்காது, இந்த சந்திப்பில் கலந்து கொண்டு பெண் போராளிகளை இழித்துரைத்த தமிழச்சிகளைப் பற்றியும், இந்த செயற்பாட்டுக்கு துணை போன தமிழச்சிகளைப் பற்றியும், தவறை தட்டிக் கேட்காது அமைதியாக இருந்த தமிழச்சிகளைப் பற்றியும் பொதுவாக நாம் பேசலாம் என்று நினைக்கிறேன்.

அற்புதன் said...

வந்தியத் தேவன்

தமிழச்சி ஒரு விளம்பரப் பிரியர் என்பதுவும் அவரின் புகைப்படைத்தைப் பார்த்து ஜொள்ளு விட ஒரு ஜொள்ளுக் கூட்டம் தமிழ் மணத்தில் இருக்கிறது என்பதுவும் உண்மை.ஆனால் சுகுணா திவாகர் போன்ற ஓரளவாவது விசயம் புரிந்தவர்கள் என்று நான் நம்பியவர்கள் தமிழச்சியின் செயற்பாடுகளுக்கு ஆதரவு தருவது தான் கவலை அழிக்கும் விடயம்.

கிந்தி எதிர்ப்புப் போரில் பெரியார் உயர் சாதியத்தை வலியுறுத்தும் தமிழப் பண்டிதர்களுடன் கூட்டணி அமைத்தார், அவர்களையும் ஒன்றாக இணைத்து ஒருங்கு பட்ட போராட்டத்தை நடாத்தினார்.பொது எதிரிக்கு எதிராக ஒன்று படுவது என்பது போராட்ட நடைமுறை சார்ந்த விடயம்.எந்த வித அரசியல் அடிப்படைகளோ போராட்ட அனுபவமோ இல்லா
லதவர்கள் இப்படித்தான் ஒன்றும் விளங்காமல் கொச்சைத் தனமான போக்குகளுக்கு ஆளாவார்கள் என்பதுவும் அடக்குபவர்களின் சதிகளுக்கு தம்மை அறியாமால் பலியாவார்கள் என்பதுவும் நாங்கள் எமது போராட்டத்தில் நன்றாகக் கற்று உணர்ந்த பாடங்கள்.

இவற்றை அம்பலப்படுத்த சபேசனின் இவ்வாறான பதிவுகள் அவசியம்.இவை தனி மனிதர்களை நோக்கி அல்லாமல்,அவர்களின் கருத்தியலையும் செயற்பாட்டையும் அம்பலப்படுத்துவதாகவும் இருக்கட்டும்.தனிமனித தாக்குதல்கள் அவர்கள் மேல் அனுதாப அலையையே உண்டு பண்ணும்.இதன் மூலம் இந்த வேடதாரிகளே பயனடைவார்கள்.

பெண்கள் சந்திப்பைச் செய்பவர்கள் தமிழீழ பெண்களின் விடுதலைக்கு என்ன தீர்வை முன் வைக்கிறார்கள்? சிங்களப்பேரினவாத்தின் அடக்குமுறைக்கு எதிராக என்ன தீர்வை முன் வைக்கிறார்கள்.அன்றாடம் கொல்லப்பட்டும்,வன் புணர்வுக்கு ஆட்பட்டும் இருக்கும் தமிழீழப் பெண்களூக்கு என்ன தீர்வை முன்வைக்கிறார்கள்?

பெண் விடுதலையை முன் நிறுத்திய பெரியார் இவ்வாறு போராடும் தமிழீழ பெண்களைக் கொச்சைப்படுத்தும் ஒரு கூட்டத்தில் தனது பெயரைச் சொல்லி ஒருவர் கலந்து கொள்கிறார் என்று அறிந்தால் என்ன செய்திருப்பார்?

தனக்குத் தட்டச்சு செய்ய மட்டும் தான் தெரியும் என்று கூறியவர் தனக்குத் தெரிந்த விடயத்தோடு மட்டுமே தனது வேலையை மட்டுப்படுத்தி இருக்கலாம்.பெரியாரின் கோட்பாடுகளைச் சரியாக உள் வாங்கிக் கொள்பவர்களால் மட்டுமே அந்தக் கோட்பாடுகளுக்கு அமைவாக இயங்க முடியும்.

அய்யனார் முதலானோர் சுட்டிக் காட்டிய படி இவர்களால் இதுதான் முடியும்.இவர்கள் இன்னும் இன்னும் தங்களை முற்று முழுதாக அம்பலப்படுதிக் கொள்ள வேண்டும்.பெரியாரின் படத்தைப் போட்டு வெட்டி ஒட்டுவதற்கு மேல் வேறு ஒன்றும் இல்லை என்பது இப்போது அனைவருக்கும் தெளிவான விடயமாகி விட்டது.

Osai Chella said...

நண்பரே, நீங்கள் மிகவும் வருந்தவேண்டியதில்லை. நான் பெண்ணிய தலித் முயற்சிகளுக்கு ஆதரவாளன் தான். ஆனால் பிரான்சில் தலித் விடுதலைக்காக போராடுவதெல்லாம் இங்கே என்ன புரட்சியை ஆற்றிவிடும் என்று தலித் பார்வையாளன் என்ற முறையில் நானும் நம்பிக்கையின்றித்தான் பார்த்துக்கொண்டுவருகிறேன். ஆனாலும் இந்திய விடுதலை முயற்சிகள் ஐரோப்பாவில் தானே நடந்தன என்ற முறையில் தலித் மற்றும் பெண்ணிய விடுதலைக் குரல்கள் அயலகங்களில் ஒலிப்பதை நானும் விரும்புகிறேன்.

மற்றபடி பெண்புலிகள் விசயத்தில் எல்லாம் இந்த பெண்ணியவாதிகள் மூக்கை நுழைப்பது ... ஒரு உயிர்காப்பு போராட்டத்தை கொச்சைப்படுத்துவது எனபதெல்லாம் இந்த மைக் போராளிகளுக்கு தேவையில்லாத செயல்! இயக்கம் மீது எனக்கும் பல விமர்சனங்கள் உண்டு.. ஆனால் சிறு நோக்கங்கள்/பிரச்சினைகள் பெரும் நோக்கத்திற்கு இடையூராக இருந்துவிடக்கூடாது என்பதில் கவனமாக இருப்பதால் பொறுப்புணர்ச்சியோடு ஈழவிசயங்களில் சிலசமயம் அமைதியாக இருந்துவிடுகிறேன்.. (இத்தனைக்கும் எனக்கு செல்வா முந்தைய காலச்சூழலிருந்து டாய்லட் குண்டு வெடிப்பு, பஸ் மீது நடத்தப்பட்ட முதல் தாக்குதல், முதல் துப்பாக்கி வாங்கியது... என்று பல கதைகள் பக்கம்பக்கமாக உறங்கிக் கொண்டிருக்கின்றன! ;-)!)

அன்புடன்
ஓசை செல்லா

Mayooran said...

அற்புதன் உங்கள் கருத்துக்களுடன் நான் ஒத்துப்போகின்றேன்.
அதே நேரம் இந்த பதிவில் தமிழச்சிகள் என சபேசன் கொடுத்த குறீயீடு லிப்ஸ்டிக் பூசி மேனாமினுக்கியாக சபைகளில் ஏறும் அனைத்து தமிழச்சிகளையும் சாரும். இவர்களுக்கு என்ன உரிமை இருக்கின்றது பெண் போராளிகளை கொச்சைப் படுத்த? என்றாவது ஒரு நாள் இவர்கள் பெண் போராளிகளை நேரில் கண்டிருப்பார்களா? அவர்களின் துன்பங்கள் இன்பங்கள் தெரியுமா?
பெண் போராளிகளின் துணிச்சலையும் மன ஓர்மத்தையும் நேரில் பார்த்தவர்கள் நாம். இந்த மேனாமினுக்கிகளோ அவற்றை பார்த்தே இருக்கமாட்டார்கள். குளிரூட்டப்பட்ட அறையினுள் இருந்து எதனையும் பேசலாம் எழுதலாம் ஆனால் கடும் குளிருலும் மழையிலும் வெயிலிலும் தம்மை வருத்தி தமிழன் மன்னிக்கவும் ஈழத்தமிழன் விடுதலையடையவேண்டும் எனப் போராடும் அவர்களை குறைசொல்ல இந்த தெரு ****(தணிக்கை) என்ன துணிவு.

வி.சபேசன் said...

பெண்ணுரிமை என்று கோசம் போடும் பெண்கள் சிலர் நடந்து கொள்கின்ற விதம் எனக்கும் ஆச்சரியமானதாக இருக்கும்.

ஆண்கள் சிகரெட் பிடிக்கிறார்கள், நாமும் பிடிப்போம் என்பார்கள். சம உரிமை என்று சொல்லி மது அருந்துவார்கள். நிறைய ஆண் துணை வைத்திருப்பார்கள்.

அதே போன்று இங்கே சில பெண்கள் துரோகம் செய்வதிலும் ஆண்களுக்குப் போட்டியாக புறப்பட்டிருக்கிறார்கள்.

ஆண்கள் செய்கின்ற அதே தவறுகளை பெண்களும் செய்வதுதான் சம உரிமையா?

pulliraja said...

தமிழச்சிகள் போன்ற சுய விளம்பரப் பிரியைகளுக்காக காலத்தை ஒதுக்காதீர்கள். வெல்லுங்கள். ஈழத்தை உருவாக்குங்கள்.