Thursday, July 12, 2007

கிபீர் சுட்டு வீழ்த்தப்பட்டது!

இன்று பிற்பகல் 3.30 மணியளவில் வவுனியா முன்னரங்கப் பகுதியில் சிறிலங்கா வான்படையின் கிபீர் விமானம் ஒன்று விடுதலைப் புலிகளின் விமான எதிர்ப்பு படையணியால் சுட்டு வீழ்த்தப்பட்டது.
நேற்று முல்லைத்தீவு அளம்பிலில் சிறிலங்கா வான்படை நடத்திய குண்டுத் தாக்குதலில் 15 வயது சிறுவன் மற்றும் 51 வயது நபர் ஒருவர் ஆகியோர் கொல்லப்பட்டனர். மேலும் 9 அப்பாவிப் பொதுமக்கள் படுகாயமடைந்தனர். ஆழிப்பேரலையால் பாதிக்கப்பட்டோருக்காக மீள கட்டித்தரப்பட்ட 2 மீன்வாடிகள் சேதமடைந்தன.
இன்று மீண்டு தமிழ் மக்களின் குடியிருப்புக்கள் மீது குண்டு வீசும் நோக்கத்தோடு சிறிலங்கா வான்படையின் கிபீர் விமானம் வன்னிப் பகுதிக்குள் நுளைய முற்பட்ட வேளை வவுனியா முன்னரங்கப் பகுதியில் வைத்து விடுதலைப் புலிகளின் விமான எதிர்ப்பு படையணி விமான எதிர்ப்பு பீரங்கியால் தாக்குதல் நடத்தியது.
இதில் அகப்பட்ட கிபீர் விமானம் வட்டமடித்தபடி சென்று சிறிலங்காப் படையினரின் கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் வீழ்ந்தது. விடுதலைப் புலிகளின் தாக்குதலினால் சேதமுற்ற கிபீர் விமானத்தில் இருந்து சில பாகங்கள் கழன்று விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிக்குள்ளும் விழுந்தன.
சிறிலங்கா வான்படையின் அதிநவீன தாக்குதல் விமானமான கிபீர் விடுதலைப் புலிகளினால் சுட்டு வீழ்த்தப்பட்டிருப்பது சிறிலங்கா அரசுக்கு பேரதிர்ச்சியைக் கொடுத்துள்ளது. சிறிலங்காவின் பல வான்கலகன்களை விடுதலைப் புலிகள் சுட்டு வீழ்த்தியருந்தாலும், ஒரு கிபீர் விமானத்தை விடுதலைப் புலிகள் சுட்டு வீழ்த்தியிருப்பது இதுவே முதற் தடவையாகும்.
கிபீர் சுட்டு வீழ்த்தப்பட்ட செய்தி அறிந்த தமிழ் மக்கள் பெரும் உற்சாகம் அடைந்துள்ளனர்.

6 comments:

வி.சபேசன் said...

"இன்று" என்று தொடங்குகின்ற இந்த செய்தி நேற்றைய செய்தி என்று உங்களுக்கு தெரிந்திருக்கும். நேற்று தமிழ்மணத்தில் எந்தப் பதிவையும் இணைக்க முடியாது புளொக்கர் என்னை பாடாய்படுத்தி விட்டது. பலருக்கு இந்த நிலை ஏற்பட்டது என்று பின்பு கேள்விப்பட்டேன்.

Anonymous said...

ஒரு கிபீர் விமானத்தை விடுதலைப் புலிகள் சுட்டு வீழ்த்தியிருப்பது இதுவே முதற் தடவையாகும்.
கிபீர் சுட்டு வீழ்த்தப்பட்ட செய்தி அறிந்த தமிழ் மக்கள் பெரும் உற்சாகம் அடைந்துள்ளனர்.
/////

உங்களின் தகவல் தவறு. சென்ற மாதமும் ஒரு விமானத்தைச் சுட்டு விழுத்தப்பட்டிருந்தது. அது மன்னார் கடலினுள் விழுந்தது.

வி.சபேசன் said...

அது கிபீர் அல்ல. மிக் 27 விமானமே விடுதலைப் புலிகளால் சுடப்பட்டு மன்னார் கடலில் வீழ்ந்தது.

Anonymous said...

விமானம் சுட்ட செய்தி மகிழ்ச்சி. விமானத்தின் உதிரிப்பாகங்கள் வன்னியில் விழ, விமானம் எப்படி வன்னி எல்லையைக் கடந்தது?
யாரனும் விளக்க வேண்டும்!!

ஒரு ஈழத் தமிழன்

வி.சபேசன் said...

கிபீர் விமானம் மணிக்கு 2440 கிலோமீற்றர் வேகத்தில் பறக்கவல்லது. மிகத் தாழ்வாகப் பறக்கும் போது கூட 1300 கிலோமீற்றர் வேகத்தில் பறக்கும்
விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியில் இருந்த வவுனியா வான்தளத்திற்கு செல்ல ஒரு நிமிடம் கூடத் தேவை இல்லை. இந்த வேகத்தில் பறக்கின்ற ஒரு விமானத்தின் பாகங்கள் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியில் விழுந்ததில் ஆச்சரியம் இல்லை.

தேவன் said...

Anonymous said...
விமானம் சுட்ட செய்தி மகிழ்ச்சி. விமானத்தின் உதிரிப்பாகங்கள் வன்னியில் விழ, விமானம் எப்படி வன்னி எல்லையைக் கடந்தது?
யாரனும் விளக்க வேண்டும்!!

ஒரு ஈழத் தமிழன்


தென்னையின் உயரத்தில் இருக்கிற தேங்காயே அடுத்த வளவுக்குள் விழுவது ஒன்றும் அதிசயம் இல்லாத போது, கிபிர் மட்டும் இரண்டு பகுதியாக விழுவது ஆச்சரியாமாக இருக்கிறதா?