தமிழக மீனவர்களை மேலும் அதிகமாக சுட்டுக் கொல்வதற்கு சிறிலங்கா அரசு சதித் திட்டம் தீட்டியுள்ளது. தமிழக மீனவர்கள் விடுதலைப் புலிகளுக்கு ஆயுதங்களை கடத்துகிறார்கள் என்று குற்றம் சாட்டி, நடுக்கடலில் வைத்து அப்பாவித் தமிழ் மீனவர்களை கொன்று குவிப்பதே சிறிலங்கா அரசின் சதித் திட்டமாக உள்ளது.
அண்மையில் சிறிலங்கா கடற்படை அதிகாரிகளுக்கும், இந்தியக் கடற்படை அதிகாரிகளுக்கும் இடையில் சந்திப்பு ஒன்று நிகழ்ந்தது. இந்திய அரசால் சிறிலங்கா கடற்படைக்கு வழங்கப்பட்ட "சராயு" என்ற போர்க்கப்பலில் இந்த சந்திப்பு நிகழ்ந்தது.
தமிழக மீனவர்கள் விடுதலைப் புலிகளுக்கு ஆயுதம் கடத்துவது தொடர்பாக ஆராய்வதற்காகவே இச் சந்திப்பு நடைபெற்றது.
இச் சந்திப்பின் போது தமிழக மீனவர்கள் விடுதலைப் புலிகளுக்காக ஆயுதங்கள் கடத்துவதாகவும், தமது கலங்களை ஆயுதக் கடத்தலிற்காக விடுதலைப் புலிகளுக்கு வழங்குவதாகவும் சிறிலங்கா கடற்படை அதிகாரிகள் இந்தியக் கடற்படை அதிகாரிகளிடம் கூறினர். தமிழக மீனவர்களின் படகுகளை இந்தியக் கடற்படை கண்காணித்து சோதனையிடும் என்று அப்பொழுது இந்தியக் கடற்படை சிறிலங்கா கடற்படையிடம் தெரிவித்தது.
சந்திப்பின் போது சிறிலங்கா கடற்படை அதிகாரிகள் தமிழக மீனவர்கள் மீது கூறிய குற்றச்சாட்டை ஏற்றுக்கொள்வது போன்று இந்தியக் கடற்படை அதிகாரிகளின் கருத்துக்கள் அமைந்திருந்தாக தெரிய வருகின்றது.
இதையடுத்து தமிழக மீனவர்கள் சிறிலங்கா கடற்படையால் தாக்கப்படுகின்ற நிகழ்வுகள் மேலும் அதிகரிக்கலாம் என்று அஞ்சப்படுகின்றது.
இது நாள்வரை காரணம் இன்றி தமிழக மீனவர்களை கொலை செய்து வந்த சிறிலங்கா கடற்படையினர், இனிமேல் தமிழக மீனவர்களை கொலை செய்து விட்டு "விடுதலைப் புலிகளுக்கு ஆயதம் கடத்திய படகை மூழ்கடித்தோம்" என்று ஒரு காரணத்தை கூறப் போகின்றது.
சிறிலங்கா கடற்படை சொல்வது உண்டை "இந்து" போன்ற ஊடகங்களும் எழுதும். தன்னுடைய நாட்டு மீனவர்கள் மீதுதான் குற்றம் என்று சொல்லி "தேவையற்ற" சங்கடங்களில் இருந்து இந்திய அரசும் தப்பிக் கொள்ளும்.
தமிழக மீனவர்கள்தான் பாவம்!
2 comments:
appo ltte thamilaga meenavarkalai use pannamal irukkalam allava...
விடுதலைப் புலிகளுக்கு தமிழக மீனவர்களின் படகுகளையோ, மீனவர்களையோ பயன்படுத்த வேண்டிய தேவை இல்லை. இது தமிழக மீனவர்களை சட்டரீதியாக கொலை செய்யும் ஒரு திட்டம்தான்
Post a Comment