Wednesday, July 11, 2007

கடவுளுக்கு எதிரான வழக்கு தள்ளுபடி!

ருமேனியாவில் கடவுளுக்கு எதிராக தொடரப்பட்டை வழக்கை அந் நாட்டின் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
ருமேனியாவில் உள்ள ரிமிசொவாரா என்னும் இடத்தை சேர்ந்த 40 வயதான "மிர்சியா பவல்" என்பவர் கொலைக் குற்றம் ஒன்றிற்காக 20 வருட சிறைத் தண்டனை அனுபவித்து வருகின்றார். அவர் கடவுளுக்கு எதிராக மோசடி, நம்பிக்கைத்துரோகம், ஊழல் ஆகிய குற்றச்சாட்டுக்களின் அடிப்படையில் வழக்குத் தொடர்ந்திருந்தார்.
தான் ஞானஸ்தானம் எடுத்ததன் மூலம் தன்னை கெட்டவைகளில் இருந்து பாதுகாக்கும் ஒப்பந்தத்தை கடவுளுடன் செய்துகொண்டதாகவும், ஆனால் தன்னிடம் இருந்து பொருட்கள், பிரார்த்தனைகள் போன்றவற்றை பெற்றுக்கொண்ட கடவுள் இதுவரை அந்த ஒப்பந்தத்தை கடைப்பிடிக்கவில்லை என்று பவல் குற்றம் சாட்டி வழக்கை தொடுத்திருந்தார்.
கடவுள் வானத்தை இருப்பிடமாகக் கொண்டவர் என்றும் ருமேனியாவின் தேவாலயத்தினால் பிரதிநிதித்துவப்படுபவர் என்றும் தன்னுடைய குற்றச்சாட்டில் பவல் குறிப்பிட்டிருந்தார்.
ஆனால் கடவுள் சட்டத்திற்கு உட்பட்டவர் அல்ல என்றும், முகவரி அற்றவர் என்றும் கூறி நீதிமன்றம் பவலின் வழக்கை தள்ளுபடி செய்துவிட்டது.

1 comment:

Anonymous said...

எப்படியெல்லாம் கிழம்பியிருக்காங்க பாருயா????