Friday, September 28, 2007

மகாத்மா காந்திக்கும் ராகுல் காந்திக்கும் என்ன சம்பந்தம்?

இன்றைக்கு அரசியலில் கொள்கைகளை மாற்றிக் கொள்வது என்பது ஒரு சாதரண விடயம். மக்களின் ஆதரவை பெறுவதற்காகவும் தக்கவைப்பதற்காகவும் கொள்கையை மட்டும்தான் அரசியல்வாதிகள் மாற்றுவர்கள் என்று அல்ல. மதத்தை மாற்றிய தலைவர்கள் இருக்கிறார்கள். பெயரை மாற்றிய தலைவர்கள் இருக்கிறார்கள். இனத்தை மாற்றிய தலைவர்கள் இருக்கிறார்கள்.

ஆனால் கொள்கை, மதம், பெயர், இனம் என்று அனைத்தையுமே மாற்றிய அரசியல் குடும்பம் எதுவென்று பார்த்தால், அது இந்தியாவின் நேரு குடும்பமாக மட்டுமே இருக்கிறது.

இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி, சோனியா காந்தி என்பவை அனைவரும் அறிந்த பெயர்கள். ஆனால் காந்தி என்பது மகாத்மா காந்தி என்று அழைக்கப்படும் மோகன்தாஸ் கரம்சந்த் காந்தியைத்தான் குறிக்கும். காந்தியோடு குடும்பரீதியாக எந்த ஒரு சம்பந்தமும் இல்லாத நேரு குடும்பத்தில் இருந்து இத்தனை காந்திகள் எப்படி வந்தனர்? இந்தக் கேள்விக்கான பதிலை தேடினால் பல சுவாரஸ்யமான செய்திகள் காணக் கிடைக்கும். பெயர்களை சுற்றி இந்திய அரசியல் சுழல்வது புரியும்.

ஜவகர்லால் நேருவுக்கம் அவருடைய மனைவியான கமலா நேருவுக்கும் பிறந்த ஒரே மகள்தான் இந்திரா பிரியதர்சினி. இவர் இலண்டனில் கல்வி கற்கின்ற போது ஒருவரைக் காதலித்தார். இந்தக் காதலுக்கு இந்திரா பிரயதர்சினியின் தாய் கமலா நேரு கடும் எதிர்ப்பை தெரிவித்தார். நேருவும் இந்தக் காதலை அவ்வளவாக ரசிக்கவில்லை.

அதற்குக் காரணம் இந்திரா பிரியதர்சினி காதலித்த பெரொஸ் ஒரு முஸ்லீம். பெரொஸின் உண்மையான பெயர் பெரொஸ்கான். அவருடைய தந்தையின் பெயர் நவாப்கான். பெரொஸ்கான் மீதான காதலில் உறுதியாக நின்ற இந்திரா பிரியதர்சினி முஸ்லீமாக மதம் மாறினார். பெரொஸ்கானை லண்டனில் உள்ள ஒரு மசூதியில் வைத்து நிக்கா செய்து கொண்டார்.

இந்தியா திரும்பிய இந்திரா பிரியர்தனியையும் பெரொஸ்கானையும் வேறு வழியின்றி ஏற்றுக்கொண்ட நேரு அவர்களுக்கு மீண்டும் வேத முறைப்படி திருமணம் செய்து வைத்தார். இதன் பிறகுதான் இந்தப் பெயர் மாற்றங்கள் ஆரம்பமானது.

பெரொஸ்கான் ஒரு முஸ்லீம் என்றும் அவருடைய தந்தையின் பெயர் நவாப்கான் என்றும் பார்த்தோம். பெரொஸ்கானின் தயார் நவாப்கானை திருமணம் செய்வதற்கு முன்பு பர்ஸி மதத்தை சேர்ந்தவராக இருந்தார். பர்சிகளின் ஒரு சாதிப் பிரிவினருக்கு "கண்டி" என்று பெயர். இந்த "கண்டி" பிரிவைச் சேர்ந்தவராக பெரொஸ்கானின் தாயார் இருந்தார்.

இந்தக் "கண்டி" என்பதைத்தான் நேரு குடும்பத்தினர் "காந்தி" என்று மாற்றினார்கள்.

முதலில் பெரொஸ்கான் என்ற பெயர் பெரொஸ் காந்தி என்று மாறியது. உண்மையில் அது பெரொஸ் கண்டி என்று மாறியிருக்க வேண்டும். ஆனால் பெரொஸ் காந்தி என்று மாற்றப்பட்டு அப்படியே இந்திரா பிரியதர்சினியின் பெயரும் இந்திரா காந்தி என்று மாற்றப்பட்டது.

இந்த இருவருக்கும் பிறந்தவர் ராஜீவ். இந்த நேரத்தில் பெரொஸ் காந்திக்கும் இந்திரா காந்திக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்து போய்விட்டார்கள். பெரொஸ் காந்தி பிரிந்து போனதன் பிற்பாடு இன்னும் ஒரு குழந்தை பிறந்தது. அந்தக் குழந்தையின் பெயர் சஞ்சீவ். கவனியுங்கள்! சஞ்சய் அல்ல, சஞ்சீவ்.

சஞ்சீவ் பெரொஸ் காந்திக்குப் பிறந்தவர் அல்ல, அவர் முகமது யூனுஸ் என்ற இன்னொரு முஸ்லீமுக்கு பிறந்தவர் என்ற பலமான ஒரு "கிசுகிசு" இந்திய அரசியல் உயர்மட்டங்களில் உண்டு. இதை அறிந்து கொண்ட சஞ்சீவ் தனது தயாரான இந்திரா காந்தியை மிரட்டியதாலேயே, விமான விபத்தில் அவர் இறந்து போக நேரிட்டது என்று சிலர் சொல்வார்கள். பெரொஸ் காந்தியின் மரணம் குறித்தும் சந்தேகம் கிளப்புபவர்கள் இருக்கிறார்கள். இவைகள் ஊகம் கலந்த தனிக் கதைகள்.

இப்பொழுது சஞ்சீவ் எப்படி சஞ்சய் காந்தியாக மாறினார் என்பதை பார்ப்போம். சஞ்சீவ் லண்டனில் தங்கியிருந்த போது காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார். சஞ்சீவ் ஒரு காரை திருடியதாக குற்றம் சாட்டப்பட்டே காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார். அவருடய கடவுச் சீட்டும் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த நிலையில் லண்டனில் இருந்த இந்தியத் தூதரகம் சஞ்சீவிற்கு புதிய கடவுச்சீட்டு வழங்கியது. அதில் அவருடைய பெயர் சஞ்சய் என்று மாற்றப்பட்டிருந்தது. இப்படித்தான் சஞ்சீவ் காந்தியாக இருந்திருக்க வேண்டியவர் சஞ்சய் காந்தியாக மாறினார்.

இந்தப் பெயர் மாற்றம் ராஜீவ் காந்தியிடமும் தொடர்ந்தது. ராஜீவ் காந்தி இத்தாலியை சேர்ந்த சானியா மைனோ என்ற பெண்ணை காதலித்தார். சானியா மைனோவை திருமணம் செய்வதற்காக ராஜீவ் கிறிஸ்தவ மதத்திற்கு மாறினார். தன்னுடைய பெயரையும் "ரொபோர்டோ" என்று மாற்றிக் கொண்டார். ரொபோர்டோவிற்கும் சானியா மைனோவிற்கும் இரண்டு குழந்தைகள் பிறந்தன. பெண் குழந்தைக்கு "பியங்கா" என்று பெயரிட்டார்கள். ஆண் குழந்தைக்கு "ராவுல்" என்று பெயரிட்டார்கள். இரண்டுமே இத்தாலியிலும் வைக்கப்படுகின்ற ஐரோப்பிய பெயர்கள். இன்றைக்கு இவர்களுடைய பெயர்களும் வழமை போன்று மாறிவிட்டது.

இந்திரா பெரொஸ்கான் அரசியல் நலன்களுக்காக இந்திரா கண்டியாக மாறி அப்படியே இந்திரா காந்தியாக மாறினார். சஞ்சீவ் காந்தி லண்டனில் காவல்துறையால் கைது செய்யப்பட்டதனால் சஞ்சய் காந்தியாக மாறினார். இந்திய அரசியலில் ஈடுபட வேண்டிய தேவை ரொபோர்டோவிற்கு வந்த பொழுது, ரொபோர்டோ மீண்டும் ராஜீவ் காந்தியாக மாறினார். அதே தேவை சானியா மைனோவிற்கு வந்த போது, அவர் சோனியா காந்தியாக மாறினார். அப்படியே பியங்கா பிரியங்கா காந்தியாகவும், ராவுல் ராகுல் காந்தியாகவும் மாறி விட்டார்கள்.

தற்பொழுது ராகுல் காந்தி காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளராக முடி சூட்டப்பட்டுள்ளார். நேரு குடும்பம் காங்கிரஸ் கட்சியின் அதிகார பீடத்திலிருந்து மாறாது தொடர்ந்து இருப்பதற்கு அவர்களின் இந்த "பெயர் மாற்றும் அரசியலும்" ஒரு காரணம்.

14 comments:

மாசிலா said...

//பல சுவாரஸ்யமான செய்திகள்...//

இதுதான் சுவாரஸ்யமானதா?
அசிங்கமா இல்ல இருக்குது!

வீரத்திருமகன் பகத்சிங் பிறந்த இந்த நினைவு நாளுல பாத்து இவ்ளோ பெரிய குண்டை தூக்கி போட்டிருக்கீங்களே! இது நியாயமா சார்?

உங்களுக்கு எங்கிருந்து இவ்ளோ சேதியும் கெடைச்சுது?

மானங் கப்பல் ஏறுதுங்கடோய்!!!

பகிர்ந்தமைக்கு ரொம்ப நன்றி.

வி.சபேசன் said...

மாசிலா,
உங்கள் கருத்துக்கு நன்றி
"The Nehru Dynasty" என்ற ஒரு புத்தகத்தில் இது பற்றிய தகவல்கள் இருக்கிறது. இணையங்களிலும் இது குறித்து பலர் எழுதியுள்ளார்கள். நேரு குடும்பம் பற்றி எழுதியிருக்கின்ற அனைத்து விடயங்களையும் நான் குறிப்பிடவில்லை. பொதுவாக தலைவர்களின் தனிப்பட்ட வாழ்க்கைகளை கிளறுவதில் எனக்கு உடன்பாடு இல்லை. அதனால் பல விடயங்களை நான் இங்கே குறிப்பிடவில்லை. பெயர் மாற்றுகின்ற அரசியலோடு நின்று விட்டேன்.

Anonymous said...

மிகவும் தவறான தகவல்
காந்தி அவர்கள் பெரோஸ்கானை தத்து எடுத்து கொண்டபின் தான் அவர் இந்திராவை திருமணம் செய்து கொண்டார்.
மகாத்மா தத்து எடுத்து கொண்டதால் அவரின் sir name காந்தி என்பது பெரோஸ்கானுக்கு சேர்ந்தது
பெரோஸ்கான் பெரோஸ்கான்காந்தி ஆனார்
இந்திரா இந்திரா காந்தி ஆனார்.

பின் இவர்களின் சந்ததியும் இதே காந்தி பேரை சார்ந்து வருகிறது

அரைகுறையாக கண்ட புத்தகத்தை படித்து விட்டு ஏதாவது எழுத வேண்டாம்.

இதை போல எங்கள் நாட்டு தலைவர்களை தரக்குறைவாக எழுதும் நீங்கள் ஒரு தளம் வேறு நடத்துகிறீர்களா?? படிப்பவர்பாடு தான் திண்டாட்டம் :)))))))

வி.சபேசன் said...

வணக்கம் நண்பரே,
உங்களுடைய நாட்டுத் தலைவர்களை தரக்குறைவாக எழுத வேண்டும் என்பது என்னுடைய நோக்கம் அல்ல. பொதுவாகவே நான் பல நாட்டுத் தலைவர்கள் பற்றி எழுதுவது உண்டு. எமது அண்டை நாடான சிறிலங்கா, இந்தியா போன்ற நாடுகளின் தலைவர்கள் குறித்தும், அமெரிக்கா, ஈராக் போன்ற தூர தேசத்து தலைவர்கள் குறித்தும் எழுதியிருக்கிறேன்.

அத்துடன் சிலர் மிக உறுதியாக நம்புகின்ற, உண்மை என்று வாதிடுகின்ற செய்திகளையும், நான் "ஊகம் கலந்த கதைகள்" என்றே குறிப்பிட்டு உங்கள் நாட்டு தலைவர்களின் பெயருக்கு களங்கம் வராது எழுதியிருக்கிறேன்.

அதை விட முக்கியமானது. பெயர் மாற்றம் சம்பந்தமான செய்திகளை உங்கள் நாட்டவர்கள் எழுதிய புத்தகங்களில் இருந்துதான் அறிந்து கொண்டேன்.

வி.சபேசன் said...

எல்லாவற்றையும் விட ஒரு முக்கியமான கேள்வி!

தனக்கு பெரொஸ்கான் என்று ஒரு தத்துப்பிள்ளை இருப்பது குறித்து காந்தி அவர்கள் தன்னுடைய "சத்திய சோதனையில்" எழுதியிருக்கிறாரா?

எழுதியிருக்கிறார் என்றால், அதைப் பற்றிய விபரங்களை தருவீர்களா?

இல்லை என்றால், ஏன் இல்லை?

Anonymous said...

//வி.சபேசன் said...

எல்லாவற்றையும் விட ஒரு முக்கியமான கேள்வி!

தனக்கு பெரொஸ்கான் என்று ஒரு தத்துப்பிள்ளை இருப்பது குறித்து காந்தி அவர்கள் தன்னுடைய "சத்திய சோதனையில்" எழுதியிருக்கிறாரா?

எழுதியிருக்கிறார் என்றால், அதைப் பற்றிய விபரங்களை தருவீர்களா?

இல்லை என்றால், ஏன் இல்லை?//

காந்தி சத்திய சோதனை எழுதியது எந்த வருடத்தில் என்பதையும் பேரோஸ்கான் இந்திரா திருமணம் நடந்தது எந்த வருடம் என்பதையும் தெரிந்து கொண்டாலாலே உங்கள் குழப்பம் தீர்ந்து விடும் :)))

சத்திய சோதனையை முதல் பக்கத்தில் இருந்து படிக்கவும்.

ஏன் ராஜாஜி பொண்ணை காந்தி பையன் திருமணம் செய்தது எல்லாம் சத்திய சோதனையில் வருகிறதா?

சுத்த தமாசான ஆளுங்க நீங்க

வி.சபேசன் said...

ஆண்டை கவனத்தில் எடுக்காது சத்திய சோதனை பற்றி கேட்டது என்னுடைய தவறுதான். மன்னித்துக் கொள்ளுங்கள்.
அதே வேளை "காந்தி" பெயர் மாற்றம் பற்றி நான் கூறியது போல் நிறையப் பேர் எழுதியிருக்கிறார்கள்
இணையத்தில் இப்பொழுது வாசித்தது இது:
Indira Nehru married Feroze (Khan) Gandhi in 1942 and became Indira Gandhi, which helped her politically as daughter of Nehru (the first Prime Minister of the Indian Union) and daughter–in-law of Gandhi (the father of the nation) securing her place in the future Nehru-Gandhi dynasty (based on swordoftruth.com). is that Feroz had a Parsi father whose surname was "GHANDI" not "GANDHI". That was made clear by an advertisement in a major English newspaper of Allahabad. It was Mahatma Gandhi who suggested to Nehru that Feroze's surname be spelt as "GANDHI" instead of the original "GHANDI". An RSS columnist wrote that "Ghandi's" mother was a Muslim, and since an offspring takes on the religion of its mother, Feroz ought to be considered a Muslim.

Anonymous said...

நண்பரே நீங்கள் இணைத்த இணைய இணைப்பின் லிங்க் தரமுடியுமா?

ஏன் என்றால் ஆர் எஸ் எஸ் முதல் முஸ்லீம் லீக் வரை மகாத்மாவின் பேரை களங்கபடுத்த பலர் இருக்கின்றனர்

இணையத்தில் நான் கூட 4 + 4 = 9 என்று எழுதி விட்டு இது தான் சரி என்று சொல்லி விட முடியும்

அதனால் இணையத்தில் கிடைக்கும் தகவல்களை அதன் இணைப்பு முகவரி கொண்டு பேசுவது தான் சிறப்பு

- அதே அனானி

Anonymous said...

சரி உங்களின் நோக்கம் புரிந்து விட்டது

நான் என் பின்னோட்டங்களை பதிவு செய்து வைத்து இருக்கிறேன்

இனையத்தில் பிரபலமான ஒருவரின் முகவரியில் என் பின்னோட்டங்களையும்
பிரசுக்கிறேன்.

வி.சபேசன் said...

உங்களுடைய ஒரு கருத்து விவாதத்தை திசை திருப்பி விடும் என்பதால்தான் உங்களுடைய ஒரு கருத்தை நீக்கினேன்.
googleஎன்று feroze kahn இல் என்று கொடுத்துப் பார்த்தீர்கள் என்றால், நீங்கள் கூறிய தகவலும் வருகிறது (அதாவது காந்தி தத்தெடுத்த கதை). ஆனால் அங்கும் நான் வாசித்த புத்தகத்தில் உள்ள தகவல்கள் போன்றுதான் அதிகம் வருகின்றன. அத்துடன் இது பற்றிய விவாதம் பல இடங்களில் நடந்துள்ளது. உங்களுடைய கவனத்திற்கு வராதது ஆச்சரியம்தான். நான் "காந்தி" என்ற பெயர் மாற்றங்கள் குறித்து பல வருடங்களுக்கு முன்பே வாசித்திருக்கிறேன்.

நீங்கள் சொல்வது போன்று, இந்தத் தகவல்கள் எதிரிகளால் நடத்தப்படுகின்ற பிரச்சாரமாகக் கூட இருக்கலாம். ஆனால் ஆட்சியாளர்கள் தருகின்ற தகவல்களும் உண்மையானவையாக இருக்க வேண்டும் என்று இல்லை. இந்திய சுதந்திரப் போரட்டத்தை காங்கிரஸின் போராட்டமாகத்தானே எல்லோரும் படிக்கிறோம்.
நான் ஆட்சியில் உள்ளவர்கள் தருகின்ற பாடங்கள் குறித்து வெகு கவனமாக இருப்பவன்.

மகாத்மா காந்தி தரப்பில் இருந்து பெரொஸ்கானை தத்தெடுத்தது குறித்து தகவல்கள் இருக்கிறதா என்று அறிவதற்கு ஆர்வமாக இருக்கிறேன்.

Anonymous said...

அதான் சொல்லிவிட்டேனே
உங்கள் நோக்கம் வேறு என்று

எல்லாரும் தெரிந்த விழயம்..
உங்களோடு பேசி பயன் இல்லை

வழக்கம் போல் சேவையை தொடரவும்
வாழ்த்துக்கள்

ஆனால் உங்களை போன்ற ஆட்களின் முகமூடியை கிழிக்க வேண்டும்

அதை செவ்வேனே விரைவில் செய்வேன் தகுந்த இடத்தில்

நன்றி வணக்கம்

வி.சபேசன் said...

உங்களுடைய சில கருத்துக்களை நான் பிரசுரிக்க முடியாததையிட்டு உண்மையிலேயே நான் மனம் வருந்துகிறேன். எனக்கு வருகின்ற பாராட்டுக்களை விட என்னுடைய கருத்துக்கு மாற்றான கருத்து வருவதே எனக்கும் மிகவும் பிடிக்கும். அப்படியான கருத்துக்களை உற்சாகத்தோடு நான் பிரசுரிப்பது உண்டு.
ஆனால் நீங்கள் எழுதிய கருத்து விவாதத்தை எங்கோ கொண்டு போய்விடும். அதனால் நிறைய பின்னூட்டங்கள் வருமே தவிர நேரு குடும்பத்தின் பெயர் மாற்றங்கள் பற்றிய இந்தக் கட்டுரையில் இருந்து நாம் விலகி விடுவோம்.
நீங்கள் கூறிய விடயங்களை பிறிதொரு நேரத்தில் நாம் அதற்கேற்ற தலைப்பு வருகின்ற போது நிச்சயமாக விவாதிப்போம்

Anonymous said...

விழயம்?

சபேசன் அய்யா கொண்டையைப் பாத்தேளா?

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

வி.சபேசன்!
இந்தக் காந்தி பெயர் மாற்றம் கண்டியில் இருந்து வந்ததே!!நேருவின் சூக்குமமான,எதிர்காலத்தைத் தீர்மானித்த புத்திக்கூர்மையும், நம் மக்களின் 'ஆராதிக்கும்' போக்குமே அதற்கு வழி செய்தது.
இது பற்றி மிக விபரமான விவரணச்சித்திரம் பிரன்ஸ்+ஜேர்மன் கூட்டுத் தொலைக் காட்சி ARTE ல் பார்த்துள்ளேன்.அதில் நேருவுக்கும்,மவுண்பேட்டன் பிரபுவின் மனைவிக்குமிருந்த நெருக்கமான உறவுகள் பற்றியும் படமாக விபரித்தார்கள்.பார்க்கக் கூச்சமாகத் தான் இருந்தது...நேரு மாமாவின் வாலிப லீலை)
இதை விட இந்தியச் சஞ்சிகையொன்றிலும் படித்துள்ளேன்.

//மானங் கப்பல் ஏறுதுங்கடோய்!!!//
மாசிலா!
இவை பெரிய இடங்களிலும் தவிர்க்கமுடியாதவை...பெரிது படுத்தக் கூடாது..

//மிகவும் தவறான தகவல்
காந்தி அவர்கள் பெரோஸ்கானை தத்து எடுத்து கொண்டபின் தான் அவர் இந்திராவை திருமணம் செய்து கொண்டார்.
மகாத்மா தத்து எடுத்து கொண்டதால் அவரின் sir name காந்தி என்பது பெரோஸ்கானுக்கு சேர்ந்தது
பெரோஸ்கான் பெரோஸ்கான்காந்தி ஆனார்
இந்திரா இந்திரா காந்தி ஆனார்.//

இதுவே மிகத் தவறான தகவல்...நாட்டுத் தலைவர்கள் மேல் உள்ள அதீத அன்பால் உண்மையை ஒழிக்க முயல்கிறார்.

காந்தி, தத்தெடுத்த பிள்ளையை தன் மகளுக்குக் கட்டிக் கொடுக்க நேரு ஏன்
தயங்கினார். இருவரும் ஒருவரை ஒருவர் விரும்பிய நிலையில்..
பின் மகாத்மா காந்தியின் சொல்லுக்கு
மதிப்பளித்தே இத் திருமணம் நடந்ததாகப் படித்தேன்.