Saturday, July 05, 2008

கமலின் பார்ப்பனிய முகம் (2)

கமல்ஹாசன் தன்னை திராவிட கழகத்தை சேர்ந்த ஒருவராக பிரகடனப்படுத்தியிருப்பவர். அதனாலேயே அவரால் பல விமர்சனங்களில் இருந்து தன்னை காத்துக் கொள்ள முடிகிறது. பகுத்தறிவுவாதிகளும் “எம்மவர்” என்ற பாசத்தோடு கமல் என்ன செய்தாலும் அதற்கு அவர்களே ஒரு சமாதானத்தையும் சொல்லி விட்டு போய் விடுகிறார்கள்.

பார்ப்பனர் அல்லாத இயக்குனரான சங்கரை ஒரு பார்ப்பனியவாதியாக இனங்காண முடிந்த இவர்களுக்கு கமலைப் பற்றி ஒரு சிறு சந்தேகம் கூட வரவில்லை என்பது ஆச்சரியமான விடயம்தான்.

தமிழ் சினிமாவில் பார்ப்பனர்களை மிகவும் அப்பாவிகளாக காட்டுகின்ற ஒரு வழக்கம் பல ஆண்டுகளாகவே நிலவி வருகின்றது. பார்ப்பன சமூகத்தை சேர்ந்த தயாரிப்பாளர்களும் இயக்குனர்களும் தொடக்கி வைத்த பழக்கம் இன்று வரை தொடர்கிறது.

பார்ப்பனர்கள் ஆயிரம் ஆண்டுகளாக தமிழர்களை அடிமைப்படுத்தி வைத்திருக்கின்ற வரலாற்று உண்மையை உணர்ந்து தமிழ்நாட்டில் உருவான விழிப்புணர்ச்சி பெரும் திருப்பங்களை உருவாக்கியது. இந்த விழிப்புணர்ச்சியில் ஏற்பட்ட மாற்றங்கள் தமிழ்நாட்டின் அரசியலையே மாற்றியது. இந்த வரலாற்று உண்மைக்கு எதிரான முறையில் பார்ப்பனர்கள் உருவாக்க முனையும் மாய விம்பத்தின் ஒரு பகுதிதான் சினிமாக்களில் பார்ப்பனர்களை அப்பாவியாகக் காட்டுவது என்பது.

ஆதாவது ஒரு மக்கள் கூட்டத்தை கேவலப்படுத்தி அடக்கி வைத்திருந்த அடக்குமுறையாளர்களை “தனி மனித அப்பாவிகள்” என்று காட்டுகின்ற ஒரு அரசியல் இங்கே ஒளிந்திருக்கிறது.

சில ஆண்டுகளுக்கு முன்பு வரை பார்ப்பனர்களை “சூழ்ச்சி மிக்கவர்களாகவும்”, “சமூக அக்கறை அற்றவர்களாகவும்” சித்தரித்த கமல் தற்பொழுது பார்ப்பனர்களை தொடர்ந்து அப்பாவிகளாகவே சித்தரித்து வருகின்றார். இதனுடைய உச்சக்கட்டமாக வசூல்ராஜா திரைப்படத்தில் வந்த காட்சி அமைந்தது.

கமல் படிக்கும் மருத்துவக் கல்லூரியில் ஒரு அப்பாவி இளைஞனை மூத்த மாணவர்கள் “ராக்கிங்” (பகிடிவதை) செய்ய முனைவார்கள். அந்த அப்பாவி இளைஞனின் சட்டையைக் கழற்றி விட்டு அவனை நடனம் ஆடச் சொல்வார்கள். சட்டை கழற்றப்பட்ட அந்தப் அப்பாவி இளைஞனின் மேனியை பூணூல் அலங்கரித்திருக்கும்.

உண்மையில் அந்தக் காட்சியில் பூணூல் வர வேண்டிய எந்த அவசியமும் இல்லை. பூணூல் அணியாமல் கூட ஒரு அப்பாவி இளைஞனை சித்தரித்திருக்க முடியும். உண்மையான அப்பாவிகள் பூணூல் அணியாதவர்கள்தான். ஆனால் கமல் அங்கே பூணூலை திணிக்கிறார். கமல் வந்து தன்னையும் “ராக்கிங்” செய்யச் சொல்வார். மாணவர்கள் அமைதியாக இருப்பார்கள். “உருத்திராட்சக் கொட்டை அணிந்தவனை மட்டும்தான் ராக்கிங் செய்வீர்களா” என்று ஒரு கேள்வியைக் கேட்பார். பின்பு தன்னுடைய புஜபலத்தைக் காட்டி ராக்கிங் செய்த மாணவர்களையே ராக்கிங் செய்து விட்டு, பூணூல் அணிந்த அப்பாவியிடம் கமல் சொல்வார் “கவலைப்படாதே! நான் இருக்கிறேன்”.

வசூல்ராஜா திரைப்படத்தின் இயக்குனர் சங்கரோ, மணிரத்தினமோ இல்லை என்பதாலோ, இந்தப் படத்தில் கமல்தான் கதாநாயகன் என்பதாலோ இந்தக் காட்சி சொல்கின்ற செய்தியின் அர்த்தம் மாறிவிடப் போவதில்லை.

கமல் தயாரித்த நளதமயந்தியிலும் மாதவன் ஒரு அப்பாவிப் பார்ப்பனர்தான் என்பதையும் இங்கே கருத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும். கமல் கடவுளை நம்பாதவராக இருக்கலாம். ஆனால் பார்ப்பனியம் கொண்டிருக்கும் முகங்களில் பலவற்றை கமலும் கொண்டிருக்கிறார் என்பதுதான் இங்கு பிரச்சனை. கமலை ஒரு முற்போக்குவாதி என்று உறுதியாகச் சொல்பவர்கள் இதை மறுத்து பல உதாரணங்களைக் காட்டக் கூடும். கமல் பெண்கள், பாலியல் போன்ற விடயங்களில் முற்போக்காகச் சிந்திப்பவர் என்று பலர் கருதுகிறார்கள். “நாயகன்” திரைப்படத்தில் கமல் பாலியல் தொழில் செய்கின்ற ஒரு பெண்ணை திருமணம் செய்வதாக வருகின்ற காட்சியை உதாரணமாகச் சொல்பவர்கள் இருக்கின்றார்கள். “மும்பை எஸ்பிரஸ்” திரைப்படத்தில் வேறொருவருக்கு ஆசைநாயகியாக இருந்த ஒரு பெண்ணை கமல் திருமணம் செய்வது போன்று வரும்.

இப்படியான காட்சிகளின் மூலம் தமிழ் சினிமா கொண்டிருக்கும் உழுத்துப்போன பாரம்பரியங்களை உடைப்பதற்கு கமல் முயல்கின்றார் என்கின்ற கருத்து பலரிடம் உண்டு. ஆனால் இந்தக் காட்சிகளை நாம் சற்று ஆழமாகப் பார்க்க வேண்டும். இந்தக் காட்சிகள் பார்வையாளர்களின் மனதில் எவ்வித அதிர்வுகளையோ நெருடல்களையோ ஏற்படுத்தவில்லை. வெகு இயல்பாக பார்வையாளர்கள் இந்தக் காட்சிகளை ஏற்றுக் கொள்கிறார்கள். அதற்குக் காரணம் இருக்கிறது.

நாயகன் திரைப்படத்தில் பாலியல் தொழில் செய்யும் பெண்ணை திருமணம் செய்பவன் ஒரு தாதா. கடத்தல்களையும் கொலைகளையும் செய்கின்ற ஒருவன், அதாவது சட்டவிரோத தொழில் செய்கின்ற ஒருவன் சட்டவிரோத தொழில் செய்கின்ற ஒரு பெண்ணை திருமணம் செய்கின்றான். சோடிப் பொருத்தம் சரியாக இருக்கின்றது. பார்வையாளனும் இயல்பாக அதை ஏற்றுக்கொள்கிறான்.

மும்பை எஸ்பிரஸ் திரைப்படத்தில் கதாநாயகன் ஒரு திருடன். ஒரு திருடன் வேறொருவருக்கு ஆசைநாயகியாக இருக்கின்ற ஒரு நடனப் பெண்மணியை திருமணம் செய்வது பற்றியும் எந்தப் பார்வையாளனும் ஆட்சேபிக்கப் போவது இல்லை. கமல் தன்னை ஒரு “ஹீரோ” என்கின்ற வட்டத்தைத் தாண்டி படத்தில் வரும் பாத்திரமாக பார்வையாளர்களை ஏற்றுக் கொள்ளச் செய்ய வைப்பதில் வெற்றி பெற்று பல வருடங்கள் ஆகி விட்டது. ஆகவே ஒரு ஹீரோ பாலியல் தொழிலாளியை திருமணம் செய்கின்றான் என்ற காட்சியை விட, ஒரு கடத்தல்காரன் ; ஒரு பாலியல் தொழிலாளியை திருமணம் செய்கின்ற காட்சியே அங்கே முன்னிற்கிறது. இதில் எங்கே இருக்கிறது புரட்சி… இன்ன பிற?

கமல் தன்னை வித்தியாசமானவராகக் காட்டிக் கொள்ள முயன்றாலும், கடைசியில் பொதுமைப்படுத்தப்பட்ட சிந்தனையோடு சமரசம் செய்து கொள்கிறார். கமல் பலரால் போற்றப்படுவதற்கு காரணமான எத்தனையோ விடயங்கள் உண்மையில் அப்படி அல்ல என்பதை சுட்டிக் காட்டவே “நாயகன்”, “மும்பை எக்ஸ்பிரஸ்” போன்ற உதாரணங்களை கூறினேன். இப்பொழுது மீண்டும் பார்ப்பனியம் சார்ந்த விடயத்திற்கு வருவோம்.

தசாவதாரம் படத்தின் மூலம் பார்ப்பனிய நலன் சார்ந்த ஒரு அரசியலுக்கு கமல் துணை போகின்றார். பாபர் மசூதி இடிப்பிற்கு பின்பு திரைப்படத் துறையில் பார்ப்பனிய சக்திகள் அதிகரித்த வகையில் செய்து வருகின்ற இந்த அரசியலை கமலும் செய்கிறார். அது என்ன?

தொடரும்….

- வி.சபேசன்

8 comments:

Ravi said...

Whoever gives comment on first need to understand he is an actor and needs to portray different things in different perspective under differnet situations. He tries to weave different stories and act on it.. Ultimately he is an actor. It's in the minds of the people at fault to see him and identify him with his roles in real-life. CINEMA IS AN ENTERTAINMENT and criticise him on whatever he speaks in open forums. Every one will get fed up of seeing un-constructive criticisms aired on him..unnecessarily identifying with his roles on films..

puduvaisiva said...

வி.சபேசன் sir please check any good mental Doctor your health because your article say like this

When kamal face problem this film by the group Bhramin such a time kamal easy to use his Bhraminsim
and released that film. but what happen he face the case and win the case.

And any time Kamal not Give any Voice in Election Time or say his fan do work this party or that party.

Only he do his fan good social work he is right model in south cine actor use fan in social work all the actor accept it.

Try to understnad kamal Huminity and he is Tamilan. not form other state.

puduvai siva

Anonymous said...

முன்னுரைக்கே இரண்டு பதிவு... ம்ம்... பொறுத்திருந்து பார்ப்போம்.

TBCD said...

உங்கள் கருத்தில் உடன்படுகிறேன்.

.ஆனால், வசூல் ராஜாவின் இந்தி மூலத்தில் இருந்ததை அப்படியே மாற்றியிருக்கிறார்கள்...எனவே, அதில் கமலின் தாக்கம் எவ்வளவு, என்று சொல்ல முடியாது...

Anonymous said...

கமல் எதற்காக சைவத்தை தாக்கி வைஸ்ணவத்தை உயர்த்தி காட்டினார் ?????

எதற்காக முதலிருந்து கடைசி வரை விஸ்ணு சிலையை விடவில்லை தாண்டது மீண்டு வருவது பொல் ஏன் காட்டினார்

Nair said...

வசூல் ராஜாவை விட்டு விடுவோம், டிபிசிடி. நம்மவர் படத்திலும் இதே காட்சி வரும். கமல் ஆசிரியர். மாணவர்கள் ஒரு பையனை மிரட்டுவார்கள். அவன் மிகவும் அப்பாவியாக காட்டப்படுவான். பார்ப்பனப் பையன்கள் அப்பாவிகள். கடவுள் பயம் மிக்கவர்கள். என்று நினைக்கும்படி செய்வார் கமல் அங்கே.

'மகளிர் மட்டும்'. கமல் தயாரித்தது. அதில் ஊர்வசி ஒரு பார்ப்பனப்பெண். பாவத்திற்கு பயந்தவராக காட்டப்படுவார். மற்ற இருபெண்கள் (ரேவதியும், ரேணுகாவும்) எதற்கும் துணிந்தவர்களாக காட்டப்படுவார்கள். ஊர்வசி வீட்டில் வேலையில்லாத கணவனை வைத்து காப்பாற்றுவார். மிகவும் ஏழை. ஐயோ பாவம் என்ற நினைப்பு வரும்.

மீண்டும் இவ்விரண்டு படங்களையும் பார்க்கவும்.

கமல், தன் இனமான பார்ப்பனர்கள் அநியாயமாத பிற தமிழரால் வஞ்சிக்கப்படுகிறார்கள் என்ற கொள்கையை உடையவர். வளையதலந்க்ந்கலில் பலபார்ப்பனர்கள் அப்படித்தான் எழுதி வருகிறார்கள். அவர்களால் நேரடியாக
சொல்லமுடிகிறது. இவரால் முடியவில்லை. அதற்காக தன் திரைப்படங்களில் நைசாக இப்படி சொல்லித் திருப்திப்பட்டுக்கொள்கிறார்.

கமல் ஆழ்மனத்தில் ஒரு பார்ப்பன பற்றாளர். இதை ஏற்றுக்கொள்ள நமக்கு மனம் வரவில்லை. ஏனெனின், அவரின் பகுத்தறிவு முகத்தை நாம் முழுவதும் நம்புகிறோம்.

Anonymous said...

கசப்பாண உண்மை

சி தயாளன் said...

ஆளுக்காள் இப்படிக்கிளம்பிட்டாங்கையா
சும்மா எதுக்கெடுத்தாலும் பார்ப்பான் பார்ப்பான் எண்டு ஓலமிட்டுக்கொண்டு.. அதுவும் பகுத்தறிவுவாதிகள் எண்டு வேஷம் போட்டுக்கொண்டு...ஜாதிஅமைப்பை வளர்ப்பதில் உங்களைப் போன்ற சில சிலர்தான் நீங்கள் குறிப்பிடுற பார்ப்பானர்களை விட அக்கறையா இருக்கிறியள்