Wednesday, November 07, 2007

தீபாவளி தமிழர் திருநாள் அல்ல

ஐரோப்பிய புரட்சிகர பெரியார் கழகம் "தீபாவளி தமிழர் திருநாள் அல்ல" என்ற இறுவட்டை (CD) வெளியிட்டுள்ளது.

இந்த இறுவட்டில் தீபாவளி பற்றிய என்னுடைய 55 நிமிட உரை உள்ளது. சற்றுப் பொறுமையாக கேட்க வேண்டும்.

500 இறுவட்டுக்களாவது வினியோகிக்கும் திட்டத்தில்தான் நாம் இருந்தோம். ஆனால் தமிழ்செல்வன் அவர்களுடைய வீரச்சாவு எம்மை பெரும் பெரும் அதிர்ச்சியிலும் வேதனையிலும் சோர்விலும் ஆழ்த்திவிட்டது.

தற்பொழுது சற்றுத் தேற்றிக்கொண்டு 200 வரையிலான இறுவட்டுக்களை வினியோகித்துள்ளோம்.

அந்த இறுவட்டில் உள்ள உரை இங்கே இணைக்கப்பட்டுள்ளது.

http://www.webeelam.com/deepavali.mp3

7 comments:

Nimal said...

ஆனா நாங்க கொண்டாடிறது... சாப்பிட, உடுப்பு வாங்க, ஊர்சுத்த... மற்றப்படி யாரப்பா இந்த புராணம் எல்லாம் பாக்கிறது, படிக்கிறது... புரட்டி புரட்டி படிச்சாலும் பொய் பொய் தானே...

அதுவும் இந்த முறை...(?)

Anonymous said...

பல புதிய தகவல்கள் உங்கள் பேச்சில் இருக்கின்றன. குறிப்பாக இராமாயணம் சைவர்களுக்கும் எதிரானது என்று நீங்கள் சொல்லிய விதம் சிந்திக்க வைத்தது.

Anonymous said...

ஐயா சபேசன் அவர்களே...நாங்கள் கொண்டாடுற பண்டிகைகள் எல்லாம் எங்கட இல்லை என்றால்....தயவு செய்து தமிழர்கள் கொண்டாடக் கூடிய ஐந்து பண்டிகையின் பெயர்கள் சொல்லுங்கோ

மணிமகன் said...

சபேசனுக்கு பாராட்டுகள்.

ஊதுர சங்க ஊதுவோம்;

விடியும்போது விடியட்டும்.


முகம் மறைத்துக்கொண்டிருக்கும்
அந்த அனானி அவர்களுக்கு,.

தமிழர்கள்
கொண்டாட வேண்டிய விழாக்கள்
பொங்கல்,மாட்டுப்பொங்கல்,
திருவள்ளுவர் தினம்,மேதினம் இப்படி சில உண்டு.
இவையெல்லாம் பொருள் பொதிந்தது;
தேவையானது.

இந்தப்பட்டியலில்
விரைவில் தமிழீழ தினமும் சேரலாம்.

Anonymous said...

புத்திபூர்வமாக தமிழர்கள் கொண்டாடக்கூடிய கொண்டாட்டம் என்ன? சொன்னால் நாங்களும் கொண்டாடலாம். தைப்பொங்கள் என்று சொன்னால், அதுவும் சூரியக் கடவுளூக்கு செய்யும் நன்றி விழாதான் ஐயா!!!. ஏதோ ஒரு காரணம் கொண்டாட வாய்ப்பு கிடைத்திருக்கிறது. தயவுசெய்து மக்களை மகிழ்ச்சியாக இருக்க விடுங்க.
பகுத்தறிவு நல்லதுதான். அதற்காக மக்களை வெறுமையாக்குவது நல்லதா?
பல குடும்பங்கள் புதிய ஆடை, நல்ல உணவு பெற இந்த விழாக்கள்தான் காரணமாகின்றன.

முக்கிய கேள்வி: ஐரோப்பாவில் வாழும் பகுத்தறிவு நண்பர்களே!
நீங்கள் பணிபுரியும் இடங்களில் யேசு கிறிஸ்த்துவின் பிறப்புக் கொண்டாட்டத்திற்காக தரப்படும் கிறிஸ்ம்ஸ் பணத்தை நீங்கள் வாங்க மறுத்ததுண்டா?

புள்ளிராஜா

Anonymous said...

மணிமகன் said... "தமிழர்கள்
கொண்டாட வேண்டிய விழாக்கள்
பொங்கல்,மாட்டுப்பொங்கல்,
திருவள்ளுவர் தினம்,மேதினம் இப்படி சில உண்டு.
இவையெல்லாம் பொருள் பொதிந்தது;
தேவையானது. "



மே தின‌ம் த‌மிழ‌னின் க‌லாச்சார‌ விழாவா? போச்ச‌டா போ!!

திருவ‌ள்ளுவ‌ர் பிற‌ந்த தின‌ம் எ‌த்த‌னையாம் திக‌தி? சொல்லுங்க‌ !ஐயா!!கொண்டாடலாம்!!

ஏன‌ய்யா தொல்லை தாறீங்க‌?


உங்க‌ ஊர் வாத்தியார்விட்ட‌ த‌ப்பு!!!

புள்ளிராஜா

வி.சபேசன் said...

தமிழர் திருநாளாக தைப் பொங்கல் உள்ளது. திருவள்ளுவர் தினம் ஜனவரி 15 கொண்டாடப்படுகிறது.

அத்துடன் தமிழர்கள் உலகில் கொண்டாடப்படும் அனைத்து விழாக்களையும் கொண்டாடலாம்.

ஆனால் அரக்கர்கள் என்ற பெயரில் யாரையும் கொலை செய்வதை நினைவு கூராத விழாவாக அவைகள் இருக்கட்டும்.

யாரோ ஒரு தமிழ் மன்னன் எமக்காக போராடி மரணித்திருக்கிறான். அவனுடைய இறந்த நாளை தமிழர்களே கொண்டாடுவது பெரும் இழுக்கு என்று நான் கருதுகின்றேன்.

எங்கள் தளபதிகள் இறந்த நாளை சிங்களவர்கள் கொண்டாடத்தான் செய்வார்கள். அது அவர்களின் உரிமை. தமிழர்களும் அதில் கலந்து கொள்ளலாமா?

"பயங்கரவாதி" கொல்லப்பட்டுவிட்டான் என்று பட்டாசு வெடிக்கலாமா?

நாம் எதிரிகள் கொல்லப்படுவதையே கொண்டாட விரும்பாத பொழுது, நீங்கள் ஒரு "கொண்டாட்டம்" வேண்டும் என்பதற்காக எம்மவர் கொல்லப்பட்ட நாளை கொண்டாட வேண்டும் என்று அடம்பிடிக்கிறீர்களே?!

சற்றுப் பொறுங்கள்! தமிழீழ சுதந்திர நாள், யாழ் குடா கைப்பற்றிய நாள் என்று நிறையக் கொண்டாடலாம்.