Friday, November 09, 2007

வைகோவிற்கு "உதயன்" எத்தனை தொகுதிகள் ஒதுக்கும்?

மதிமுக பொதுச் செயலாளர் வைகோ குறித்து யாழ்ப்பாணத்தில் இருந்து வெளிவரும் நாளிதழான "உதயன்" 06.11.07 அன்று வெளியிடப்பட்ட இதழில் ஒரு ஆசிரியர் தலையங்கம் எழுதியுள்ளது. ஈழத் தமிழர் விரோதப் போக்குக் கொண்ட ஜெயலலிதாவிற்கு வால் பிடிப்பதற்கு, உலகத் தமிழர்களுக்கு வைகோ பதில் சொல்ல வேண்டும் என்று உதயன் எழுதியிருக்கிறது.

உதயன் வைகோவிடம் இருந்து என்ன பதிலை எதிர்பார்க்கிறது? அதிமுக கூட்டணியில் இருந்து விலகுவதா? அப்படி விலகினால் விரைவில் வரக்கூடிய நாடாளுமன்றத் தேர்தலில் வைகோவின் கட்சிக்கு உதயன் எத்தனை தொகுதிகளை ஒதுக்கிக் கொடுக்கும்? மதிமுக சார்பில் எத்தனை நாடாளுமன்ற உறுப்பினர்களை வெற்றிபெறச் செய்யும்? இவைகளை உதயன் உலகத் தமிழர்களுக்கு விளக்குமா?

ஜெயலலிதா கலைஞரின் ஆட்சியைக் கலைப்பதற்கு ஏதாவது வழி கிடைக்குமா என்று தூங்கும் போதும் சிந்திக்கின்ற ஒருவர். அவர் கலைஞரின் இரங்கல் கவிதையை வைத்து ஒரு சட்டப் பிரச்சனையை கிளப்ப முனைகிறார். இதை கலைஞர் சரியான முறையில் எதிர்கொள்வார். இதற்குள் வைகோவை இழுக்க வேண்டிய அவசியம் இல்லை.

ஜெயலலிதாவாது சட்டப் பிரச்சனையைத்தான் கிளப்பினார். ஆனால் கலைஞரோடு கூட்டணி அமைத்துள்ள தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியனர் என்ன செய்தனர்?

கலைஞர் இரங்கல் தெரிவித்ததற்கு கண்டனம் தெரிவித்தனர். அத்துடன் விட்டார்களா? மனித குலமே வெட்கப்படக்கூடிய ஒரு ஈனச் செயலைப் புரிந்தனர். தமிழ்நாட்டில் சில இடங்களில் காங்கிரஸ் கட்சியினர் தமிழ்செல்வனின் வீரச்சாவை இனிப்பு வழங்கிக் கொண்டாடினர்.

இவ்வாறான காட்டுமிராண்டிகளோடு கூட்டணி வைத்திருப்பதற்கு கலைஞர் உலகத் தமிழர்களுக்கு பதில் சொல்வாரா?

வேண்டாம். எந்த தமிழ்நாட்டு அரசியல் தலைவரும் தமிழ்நாட்டு அரசியலின் அடிப்படையில் அமைக்கின்ற கூட்டணிகளுக்கு யாருக்கும் பதில் சொல்ல வேண்டாம்.

தமிழ்நாட்டில் இரண்டாவது பலம் வாய்ந்த கூட்டணியில் தமிழீழத்திற்கு ஆதரவான ஒரு கட்சி இருப்பது ஈழத் தமிழர்களுக்கு நன்மையே தவிர, தீமை அல்ல. வைகோ தன்னுடைய தமிழீழ ஆதரவுக் குரலை சற்றும் தொய்வின்றி எழுப்புகின்றார். அவருக்கு ஈழத் தமிழர்கள் நன்றிக் கடன்பட்டுள்ளார்கள்.

கலைஞரை மகிழ்ச்சிப்படுத்தம் நோக்கில் ஈழத் தமிழ் ஊடகங்கள் வைகோவை புண்படுத்த வேண்டாம்.

11 comments:

வசந்தன்(Vasanthan) said...

நானுமோர் இடுகை எழுதியிருந்தேன்.

வை.கோ உலகத்தமிழர்களுக்குப் பதில் சொல்ல வேண்டுமா?

//கலைஞரை மகிழ்ச்சிப்படுத்தம் நோக்கில் ஈழத் தமிழ் ஊடகங்கள் வைகோவை புண்படுத்த வேண்டாம்.//


இதைச்சொல்ல வெளிக்கிட்ட நான் நாசுக்காகத் தவிர்த்துவிட்டேன். எழுதியவற்றில் நிறையப்பகுதிகளை அழித்துவிட்டுத்தான் வலைப்பதிவில் பதிந்தேன்.

இங்கே நேரடியாக உதயனை மட்டும் சாடிப்பயனில்லை. அதையெழுதியதுதான் உதயன். ஆனால் அதைக் கடைவிரித்துப் பரப்பிக் கொண்டிருப்பவர்கள் எங்கள் டமில்டேசிய இணையத்தளங்கள். மக்களிடத்தில் அதிகளவு செல்வாக்கைச் செலுத்துபவையாக இருப்பவை இவைதாம். அவ்வகையில் அதிக ஆபத்தானவையும் இவ்விணையத்தளங்களே. இந்த ஆசிரியர் தலையங்கம் உதயன் வலைப்பக்கத்தினூடாகவா மற்ற ஊடகங்களில் வலைப்பக்கங்களினூடாகவா அதிகம் பேரைச் சென்றடைந்தது என ஆராய்ந்தால் தெரியும்.

இப்போது இத்தலையங்கம் வை.கோ வரை எட்டியிருக்கும். அங்கு தேவையில்லாத மனச்சஞ்சலங்கள் இருக்கக்கூடும்.

இவர்களுக்கான எதிர்ப்பையும் வை.கோவுக்கான ஆதரவையும் குறைந்தபட்சம் வலைப்பதிவுகளிலாவது நாம் பதிய வேண்டும். (வேறு ஊடகங்கள் எங்களுக்கில்லை. எல்லாமே ஒரே குட்டையிலூறுபவைதாம். போகவேணுமெண்டால் ரி.பி.சி, தேனீ க்குத்தான் போகவேணும். ;-))

வி.சபேசன் said...

நான் இதைப் பற்றி எழுதி பதிவேற்றியதன் பின்பு, நீங்களும் ஏற்கனவே இதைப் பற்றி எழுதியிருப்பதைக் கவனித்தேன். இருவரும் ஒரே மாதிரி சிந்தித்திருப்பது மகிழ்ச்சியைக் கொடுத்தது.

எங்களுடைய ஊடங்கள் இப்படி நடந்து கொள்வது இது முதன்முறையல்ல. இவர்கள் சொல்லியும் திருந்த மாட்டார்கள்.

வைகோவின் கவனத்திற்கு உதயன் வெளியிட்ட ஆசிரியர் தலையங்கம் சென்றிருக்கிறது. ஆனால் அவர் அதைப் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை என்று அறிந்தேன்.

Anonymous said...

இது உதயனின் எல்லை கடந்த முட்டாள்தனம். வை கோ அவர்கள் எந்தக் கட்சியில் இருந்தாலும் ஈழத்தமிழருக்காக குரல்கொடுக்கத் தவறியதில்லை. தமிழகத்தில் உள்ள அரசியல் நிலைக்கு ஏற்ப கூட்டணி அமைக்கவேண்டிய தேவையை ஈழத்தமிழர்களாகிய நாம் கூறமுடியாது. அவர்களூடைய உட்கட்சி அரசியலில் ஈழத்தமிழர்கள் தலையிட நினைப்பது மன்னிக்க முடியாதது. பொறுப்பற்றதனம் மட்டும்ல்ல சிந்திக்கத் தெரியாத அவசர எண்ணம்படைத்த கருத்துக்களை அடக்கியுள்ள இந்தக் கட்டுரையை ஒரு ஈழத் தமிழனாக வன்மையாக கண்டிக்கின்றேன்.

ஒரு ஈழத்தமிழன்

Anonymous said...

இது உதயனின் எல்லை கடந்த முட்டாள்தனம். வை கோ அவர்கள் எந்தக் கட்சியில் இருந்தாலும் ஈழத்தமிழருக்காக குரல்கொடுக்கத் தவறியதில்லை. தமிழகத்தில் உள்ள அரசியல் நிலைக்கு ஏற்ப கூட்டணி அமைக்கவேண்டிய தேவையை ஈழத்தமிழர்களாகிய நாம் கூறமுடியாது. அவர்களூடைய உட்கட்சி அரசியலில் ஈழத்தமிழர்கள் தலையிட நினைப்பது மன்னிக்க முடியாதது. பொறுப்பற்றதனம் மட்டும்ல்ல சிந்திக்கத் தெரியாத அவசர எண்ணம்படைத்த கருத்துக்களை அடக்கியுள்ள இந்தக் கட்டுரையை ஒரு ஈழத் தமிழனாக வன்மையாக கண்டிக்கின்றேன்.

ஒரு ஈழத்தமிழன்

Anonymous said...

வித்தியாதரன் என்ற அரைவேக்காடு எழுதிய உளறல் இது. உதயன் பத்திரிகை என்பது ஒரு தரமற்ற பத்திரிகை.

தமிழக நண்பர்களே!! வருந்தவேண்டாம்.

Anonymous said...

//வித்தியாதரன் என்ற அரைவேக்காடு எழுதிய உளறல் இது. உதயன் பத்திரிகை என்பது ஒரு தரமற்ற பத்திரிகை.

தமிழக நண்பர்களே!! வருந்தவேண்டாம்//

தின‌முர‌சுதான் த‌மிழ் கூறும் ந‌ல்லுல‌கின் சிற‌ன்த ப‌த்திரிகை.

திருச‌பேச‌ன் அவ‌ர்க‌ளே இப்ப‌டியான‌ எட்ட‌ப்ப‌ர்க‌ளின் பின்னூட்ட‌ங்க‌ளை ஏன் அனும‌திக்கிறீர்க‌ள்.

Anonymous said...

Vidhyatharan should restrict himself talking about cricket rather than poking nose into Tamilnadu politics. There is no question in whose interest JJ tries tierlessly to promote. No eelam tamilan can appreciate her in any circumstance. However it is not an eelam tamil's interest. Keeping the mouth SHUT in Tamilnadu politics is that best thing an eelam tamil can do in the interest of keeping eelam tamil interest and being as a bridge for all dravidan parties as a common converging point to consent.

An Eelam tamil can not afford to act stupidly in the way தமிழச்சி made stupid comments in French eelam politics. It hurts eelam tamils and strengthens people like JJ and anti-eelam tamil elements in india and on net.

வி.சபேசன் said...

வித்யாதரன் பற்றியோ அல்லது உதயன் பற்றியோ வருகின்ற அநாகரீகமான கருத்துக்களோடு எனக்கு உடன்பாடு இல்லை. வித்யாதரன் வைகோ விடயத்தில் உளறித்தான் இருக்கிறார். அதில் மாற்றுக் கருத்து இல்லை. ஆனால் அவரை அரைவேக்காடு என்று நான் நம்பவில்லை.

உதயன் பத்திரிகை சில நேரங்களில் அவசரக் குடுக்கையாக ஏதாவது உளறி விடுவது உண்டு. இது எல்லா ஊடகங்களிலும் நடக்கின்ற ஒன்றுதான்.

உதயன் இம் முறை உளறியதற்கு நாம் எம்முடைய கண்டனத்தை தெரிவித்து விட்டோம்.

ஆனால் யாரும் ஆநாகரீகமான முறையில் உதயன் மீது வசை பொழிய வேண்டாம். உதயன் பத்திரிகை தமிழ் தேசியத்திற்கு மிகப் பெரிய பணியை ஆற்றியிருக்கிறது. சிறிலங்காப் படைகளின் ஆக்கிரமிப்பின் மத்தியில் இருந்த படி, தமிழ் தேசியத்திற்கு ஆதரவாக எழுதுவது என்பது சாதரண விடயம் இல்லை. இதை நாம் மதிக்க வேண்டும்.

Anonymous said...

அடங்காத்தமிழா!

வை கோ எந்தக் கட்சியுடன் கூட்டணி சேர்ந்தால் உங்களுக்கென்ன?
எத்தனை ஆண்டுகள் எங்கள் ஈழத்தமிழருக்காக சிறையில் வாடியிருப்பார்.

உங்களைப் போன்ற சில அரைவேக்காடுகள் தமிழக் அரசியலைப் புரியாமல் அவரை விமர்சனம் செய்வது கண்டனத்திற்குரியது.

நன்றி கெட்டதனமாக நடந்துகொள்ளாதீர்கள்.

Anonymous said...

frustrated hat gesagt...
Vidhyatharan should restrict himself talking about cricket rather than poking nose into Tamilnadu Politics. Keeping the mouth SHUT in Tamilnadu politics is that best thing an eelam tamil can do in the interest of keeping eelam tamil interest and being as a bridge for all dravidan parties as a common converging point to consent"



100% Right. I Welcome your comments.


A Ceylon tamil Student

Anonymous said...

Dear Sabesan I know Vidhyatharan's family well. Even before Varathasuntharam, previous editor, who happened to be Vidhyatharan's uncle got involved into journalism, I know him as my English teacher. Hence do not worry this as a personal attack. I certainly do not underestimate nor tarnish Uthayan. My oint here is, Vidhaytharan could have spent his valuable time in his passion cricket instead of penning down a criticism on VaikO. We need people in and from all sides, who understand our pain well, and support regardless to to their political beliefs. If it is india, we need vaikO, karuNanithi, Ramadoss, NedumaRan, VeeramaNi, kOLaththUr maNi, thirumAvaLavan and A. P. VEnkatEswaran. They certainly understand the real pain better than JJ, Cho, Jeyakanthan, SSSwamy, Manisankar Iyer, Ram, Vasanthi, Malan and GKVassan. We have to approach conservative party, labour party and liberal democratics in UK. The same should go for US and Canadian counter parts. Whoever comes to power in these countries we NEED our voice heard. Look at Jewish lobby. It is everywhere; from FOX to FAUX. keep them the model. We should win, and we need to play the politics keeping the control in our finger tips. How personally we are inclined to one's political beliefs and philosophies do not matter when it comes to our benifits as a nation in our mental image.