Thursday, June 28, 2007

புலிகள் எங்கள் தொப்புள்கொடி உறவு! தமிழீழ போராட்டம் வெற்றி பெற வேண்டும்!

இந்திய மீனவ சங்கத் தலைவர் திரு ஆண்டினி கோமஸ் அவர்களை "அவுஸ்திரேலிய தமிழ் ஒலிபரப்பு கூட்டுத்தாபனம்" அண்மையில் செவ்வி கண்டது. அதன்போது ஆண்டனி கோமஸ் அவர்கள் தமிழக மீனவர்கள் படுகொலை மற்றும் கடத்தல், இந்திய மற்றும் தமிழ்நாட்டு அரசின் பாராமுகம், தமிழீழப் போராட்டம் போன்ற விடயங்கள் பற்றி மனம் திறந்து பேசினார். அவருடைய பரபரப்பான செவ்வியில் இருந்து சில பகுதிகள்:

கடந்த ஜூன் மாதம் அல்ல, ஏப்ரல் மாதம் நடந்த நிகழ்சி. கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த மீனவர்கள் கொல்லப்பட்டார்கள். எங்களை பொறுத்தவரையில் இலங்கை கடற்படை தாக்குதலாகவே நாங்கள் நினைகின்றோம். இந்த நிகழ்சி தொடர்பாக இலங்கை அரசு அவர்களின் தந்திர புத்தியால் இந்தியாவில் இருக்கும் அதிகாரிகளை புலிகள்தான் தாக்கியதாக சொல்ல வைத்திருகிறார்கள்.

தமிழக முதல்வர் கலைஞர் கருணாநிதி அவர்கள் ஆரம்பம் முதலே தமிழக மீனவர்களை தமது எதிரியாகவே பார்கின்றார். தமது குடும்பப் பிரச்சினை வரும்போது மத்திய அரசின் ஆதரவை வாபஸ் வாங்கிவிடுவோம் என மிரட்டுபவர்கள், இந்திய அரசை ஆட்டுவிக்கும் பலம் இருக்குது என இருக்கும் இவர்கள், மத்திய அரசை வலியுறுத்தி இனியும் இப்படியான சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். வங்கக்கடலில் தமிழக மீனவர்கள் இரத்தம் சிந்துவதை இனியும் பார்த்து கொண்டிருக்க முடியாது என்ற ஒரு அறிக்கை கொடுத்தால் கூட போதும். அந்த அறிக்கையை கூட வெளியிட இவர்கள் தயாராக இருக்கவில்லை. இவர்கள் மக்களை ஏமாற்றிகொண்டிருகின்றார்கள். இவர்களை இனியும் நாம் நம்பத் தயாராக இல்லை. வீரப்பனால் பலர் கடத்தப்பட்டபோது கடத்தப்பட்டவர்களுக்காக எத்தினை முயற்சிகள் எடுக்கப்பட்டது? ஆனால் தமிழக மீனவர்கள் மீது எந்த அக்கறையும் எடுக்கவில்லை.

மீனவர்கள் தாக்குதல்களுக்கு உள்ளாகும் போது இந்த தாக்குதலை யார் செய்தார்கள் என எடுத்துக்கூற கூடியவர்கள் மீனவர்களாகத்தான் இருக்க முடியும். 83 முதல் மீனவர்களை விடுதலை புலிகள் தாக்கியதாகவோ கடத்துவதாகவோ தமிழக மீனவர்களுக்கு எதிரிகளாக இருப்பதாகவோ எந்த தகவலும் இல்லை. அவர்களும் தமிழர்கள், நாமும் தமிழர்கள். அந்த உறவுதான் இருகின்றது.

இலங்கையில் இருக்கும் அரசியல் சூழ்நிலையை வைத்து புலிகளை இந்திய அரசுக்கு எதிரிகளாக மாற்ற வேண்டும், இந்திய அரசை தமிழர்களுக்கு எதிராக திருப்பவேண்டும் என அங்கு அவர்கள் நாடகமாடுகின்றார்கள். அவர்கள் கொடுக்கும் அறிக்கையை ஏற்றுகொள்ள மத்திய அரசில் ஆட்கள் இருகின்றார்கள். மத்திய அரசு சொல்கின்ற போது இங்கு தமிழகத்தில் இருப்பவர்கள் ஏற்கனவே ராஜீவ் காந்தியின் கொலை குற்றச்சாட்டில் சேரக்கப்பட்டுவிடுவோமோ என்ற பயத்தின் காரணமாக அதனை ஏற்று கொள்கின்றார்கள். புலிகளை பொறுத்தவரையில் தமிழக மீனவர்களை பகைத்து கொள்வதற்கோ தமிழர்களை பகைத்து கொள்வதற்கோ இது தருணமல்ல. அவர்கள் அப்படியும் நினைக்கபோவதில்லை. அவர்களுக்கு தமிழகத்தின் ஆதரவு வேண்டும். இந்தியாவின் ஆதரவு வேண்டும். அந்த ஆதரவு இல்லாவிட்டாலும், தமிழக மீனவர்களுக்கு எதிராக இருக்கக்கூடாது என்றுதான் எண்ணுவார்கள். படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில் இருந்து தப்பி வந்த மீனவர்கள் அந்த படகில் இருந்தவர்கள் சிங்களம் பேசியதாக சொன்னார்கள். இந்தவகையில் பார்க்கும் போது எமக்கு எதிராக வன்முறையில் ஈடுபட்டவர்கள் புலிகள் அல்ல. அது இலங்கை கப்பற் படையோ அல்லது சிங்கள தீவிரவாத குழுக்களோ எனத்தான் எண்ணத் தோன்றுகின்றது.

தூத்துகுடி துறைமுகத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த அந்த படகை பார்த்த சம்பவத்தால் பாதிக்கப்பட்ட குமரி மாவட்ட மீனவர்கள் சொல்கிறார்கள் அந்த படகு இல்லை என. இது நடந்து 3 நாட்களிலே சென்னையில் கியு பிராஞ் சொல்கின்றது இவர்கள்தான் என. இதை அரசியல் ஆதாயமாகவே கருதுகின்றோம். இந்து போன்ற பத்திரிகைகளுக்கு அவர்கள் சார்ந்த ஒரு அரசியல் நிலை இருகின்றது. அந்தவகையிலே புலிகளை கொச்சைப்படுத்துவதில் முனைப்பாக இருகின்றார்கள்.

அண்மையில் நடைபெற்ற கடத்தல் கொலை நிகழ்வுகள் இந்திய இலங்கை கூட்டு ரோந்து திட்டத்தை நிறைவேற்ற செய்யப்பட்ட சதியாகவே நாம் கருதுகின்றோம். புலிகளை எதிர்கொள்ள முடியாமல் இந்த சதிவேலையை இலங்கை செய்து வருகின்றது.

தமிழக மீனவர்கள் தமிழீழ போராட்டத்துக்கு ஆதரவாகாத்தான் இருகின்றார்கள். தமிழர்களுக்கு எதிராக எம்மால் சிந்திக்க முடியாது. தமிழீழத்தில் பலத்த இன்னல்களுக்கு பிறகு தமிழீழம் தவிர்க்கமுடியாது என்ற நிலையில் பலத்த இன்னல்களுக்கிடையில் போராடி வருகின்றார்கள். பாலஸ்தீன விடுதலை இயக்கம், பல்வேறு விடுதலை இயக்கங்களை ஆதரித்த இந்திய அரசு ராஜீவ் காந்தி கொலை சம்பவத்தை கருத்தில் கொண்டு பிரபாகரன் மீதுள்ள கோபத்திலே ஒட்டு மொத்த போராட்டத்தை நசுக்குகின்ற நடவடிக்கையில் ஈடுபடுகின்றது எனத்தான் தமிழக மீனவர்கள் கருதுகின்றார்கள். தமிழக மீனவர்கள் ஒரு போதும் தமிழர்களுக்கு எதிராக சிந்திக்க மாட்டார்கள்.

விடுதலை போராளிகளுக்கு சொல்லி கொள்வது உங்கள் இலட்சியம் வெற்றி பெற சுதந்திர தமிழீழம் காண எங்கள் வாழ்த்துக்கள். எந்த சூழ்நிலையிலும் தமிழக மீனவர்கள் உங்களுக்கு எதிரானவர்கள் அல்ல என்பதை நீங்கள் மனதில் வைத்துக்கொள்ள வேண்டும். இந்திய அரசுகள் என்ன சொன்னாலும் தமிழக மீனவர்கள் உங்களோடு இருகின்றார்கள் என்ற உணர்வோடு உங்கள் தொப்புள் கொடி உறவு என்ற உணர்வோடு செயல்படவேண்டும். நாங்களும் அதே உணர்வோடு இருப்போம் என செய்தியை தெரிவித்து கொள்ள விரும்புகின்றேன்

  • ஆண்டனி கோமஸ் அவர்களின் செவ்வியை முழுவதும் படிக்க இங்கு அழுத்துங்கள் http://www.webeelam.com/

4 comments:

Anonymous said...

இத்தனை நாளும் தமிழக மீனவர்கள் விடுதலைப் புலிகள் மீது வீணாக சந்தேகப்படுகிறார்களோ என்ற கவலையோடு இருந்தேன். மீனவர் சங்கத் தலைவரின் பேட்டி அந்தக் கவலையை போக்கி விட்டது.

விடுதலைப் புலிகள்தான் மீனவர்களை கடத்தினார்கள், கொன்றார்கள் என்று ஓலமிட்டவர்கள் இப்பொழுது என்ன சொல்லப் போகிறார்கள்?

Anonymous said...

ஜெயா டி.வி யில் அந்த மீனவர்கள் தெளிவாக பேட்டி கொடுத்தார்களே..
'விடுதைலை புலிகள்தான் எங்களை கடத்தினார்கள்' என்று.அதை என்ன சொல்லுவது?

எனவே யார் சொல்லுவதையும் இப்போதைக்கு நம்பாதீர்கள்.உண்மை நிச்சயம் வெளிவரும் ஒருநாள்.

Anonymous said...

உண்மை ஏற்கனவே வந்து விட்டது. அனித்தன் என்ற சிறுவன் பேட்டி கொடுத்தபோதே உண்மை வெளியே வந்து விட்டது. தற்பொழுது மீனவ சங்கத் தலைவரின் பேட்டியின் மூலம் அந்த உண்மை உறுதிப்படுத்தப்பட்டு விட்டது.

- ஈழவன்

Anonymous said...

நான் சொல்லும் ஜெயா டி.வி பேட்டி, அனித்தன் சொன்னதை தொடர்ந்துதான் எடுக்கப்பட்டது.அதில்தான் அந்த மீனவர்கள் தெளிவாக சொன்னார்கள் 'எங்களை கடத்தியவர்கள் புலிகள்தான்' என்று.

எனவே...

யார் சொல்லுவதையும் இப்போதைக்கு நம்பாதீர்கள்.உண்மை நிச்சயம் வெளிவரும் ஒருநாள்.

மீனவ சங்கத் தலைவரின் பேட்டி தங்களின் எதிர்பார்ப்பை நிறைவு செய்வதாக கருதினால் நம்புவதற்கு உங்களுக்கு முழு உரிமை உண்டு.