Wednesday, June 06, 2007

6 மாதச் சண்டைகளில் 462 புலிகள் வீரச்சாவு!

கடந்த 2006 நவம்பர் 20ஆம் நாளில் இருந்து 2007 மே 15 வரையான 6 மாதங்களில் நடந்த சண்டைகளில் 462 புலிகள் வீரச்சாவடைந்துள்ளனர். கடந்த ஆண்டு 2006 டிசம்பர் மாதத்தில் ஏறக்குறைய 150 போராளிகள் வீரச்சாவை தழுவியுள்ளனர். 2007ஆம் ஆண்டில் மே 15 வரை 282 போராளிகள் வீரச்சாவடைந்துள்ளனர்.

தகவல்களை விடுதலைப் புலிகளின் மாவீரர் பணிமனை வெளியிட்ட விபரங்களினைக் கொண்டு அறிய முடிந்துள்ளது.

போராளிகள் வாகரை, படுவான்கரை, குடும்பிமலை (தொப்பிக்கல) போன்ற இடங்களில் நடந்த சண்டைகளிலும், வவுனியா-மன்னார் எல்லைப் பகுதிகளில் நடந்து வருகின்ற சண்டைகளிலும் வீரச்சாவடைந்துள்ளனர். சில போராளிகள் சிறிலங்காப் படையின் வான்தாக்குதல்கள், வெடிவிபத்துக்கள் போன்றவற்றிலும் வீரச்சாவை தழுவியுள்ளனர்.

காலப் பகுதியில் 500இற்கும் மேற்பட்ட சிறிலங்காப் படையினரும் பலியாகியுள்ளனர். அத்துடன் 1000இற்கும் மேற்பட்ட படையினர் காயமடைந்தும் உள்ளனர். இந்த விபரங்கள் சுயாதீன வட்டாரங்களில் இருந்து தெரியவந்துள்ளன. தொடர்ச்சியாக நடத்தப்பட்டு வரும் கிளைமோர் தாக்குதல்களில் அதிகமான படையினர் காயமடைந்துள்ளனர்.

6 மாதங்களில் சிறிலங்காப் படைகள் தமக்கு சாதகமான பகுதிகள் என்று கருதப்படுகின்ற இடங்களிலேயே வலிந்த தாக்குதல்களை நடத்தியுள்ளன. மறுபுறம் விடுதலைப்புலிகள் வலிந்த தாக்குதல்களை நடத்தாது, தற்காப்புச் சண்டைகளை அவர்களுக்கு சாதகம் குறைந்த பகுதியில் நடத்தியுள்ளனர்.

சிறிலங்காப் படைகளுக்கு இணையான இழப்பு விடுதலைப் புலிகளுக்கு ஏற்பட்டதற்கு காரணமாக இருக்கக்கூடும்.

தற்பொழுது விடுதலைப் புலிகள் வலிந்த அதிரடித் தாக்குதல்களை நடத்தத் தொடங்கியுள்ளனர். கடந்த பத்து நாட்களுக்குள் நெடுந்தீவிலும், மன்னாரின் பாலமோட்டையிலும் விடுதலைப் புலிகள் வலிந்த அதிரடித் தாக்குதல்களை நடத்தி சிறிலங்காப் படைகளுக்கு கடும் இழப்புக்களை ஏற்படுத்தி உள்ளனர்.

வேளை ஒரு ஆச்சரியமான கேள்வி பலர் மத்தியில் எழுந்துள்ளது. பொதுவாக விடுதலைப் புலிகளின் மாவீரர் பணிமனை நவம்பர் மாதத்தில் மாவீரர் வாரத்தின் போதே மாவீரர்கள் பற்றிய விபரங்களை வெளியிடுவது வழக்கம். இப்படி ஆண்டின் இடையில் வெளியிடுவதில்லை.

தற்பொழுது திடீரென்று விடுதலைப் புலிகளின் மாவீரர் பணிமணை வீரச்சாவடைந்த மாவீரர்களின் விபரத்தை வெளியிட்டுள்ளது. இதற்கான காரணம் எது என்பதே பலருடைய ஆச்சரியமான கேள்வியாகும்.

புலிகள் நடத்த இருக்கும் ஒரு மிகப் பெரும் வலிந்த நடவடிக்கைக்கு முன்பாக இந்தப் பட்டியலை வெளியிட்டுள்ளனரா என்ற கேள்வியை சில ஆய்வாளர்கள் எழுப்பி உள்ளனர்.

No comments: