Wednesday, June 13, 2007

"சிவாஜி திரைப்படத்தை புறக்கணியுங்கள்!"

"தேவன் வரப் போகின்றார், "தேவன் வந்து கொண்டிருக்கின்றார்", "இதோ தேவன் வந்து விட்டார்" என்பது போன்று தெய்வீகச் செய்திகளுக்கு மேலாக இதோ ரஜனிகாந்தின் சிவாஜி வரப் போகிறது என்ற பரபரப்பான செய்திகள்தான் இன்று தமிழ் நாட்டையும், தமிழர்கள் புலம்பெயர்ந்து வாழும் தேசங்களையும் ஆக்கிரமித்துக் கொண்டிருக்கின்றன. தமிழகத்தின் வணிகப் பத்திரிகைகளும் உலகின் தமிழ் இணையத் தளங்களும் இதைத்தான் எழுதிக் கொண்டிருக்கின்றன. இந்த தேவனின் வருகைக்காக தமிழ் மக்களும், புலம்பெயர்ந்துள்ள தமிழ் உறவுகளும் ஏங்கித் தவித்த நிற்பது போன்ற தோற்றம் கூட உருவாகி விட்டது. அது உண்மையாகக் கூட இருக்கலாம்.

சுப்பர்ஸ்ரார் என்கின்ற ஆங்கில சொற்தொடரை தனது பெருமையாகக் கொண்டிருக்கும் சிவாஜிராவ் என்கின்ற கன்னடனை முன்னிறுத்தி செயற்படுகின்ற இந்த ஆர்ப்பாட்டங்களின் ஊடாக தமிழன் எவ்வாறு திசை திருப்பப்பட்டு, அவனது பண்பாடும் எதிர்காலமும் எவ்வாறு சிதைக்கப்படுகிறது என்பது குறித்து பலருக்கு அக்கறை இல்லை. ரஜனிகாந்து ஊடாக மாபெரும் சீரழிவு ஒன்று உருவாகி வருகிறது அல்லது உருவாகிவிட்டது என்றே சொல்ல வேண்டும்.

ரஜனிகாந்த் மட்டும்தான் இந்த சீரழிவை செய்கிறாரா மற்றவர்கள் செய்யவில்லையா என்று கேள்வி கேட்பவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். ஒரு தவறைக் கொண்டு இன்னொரு தவறை நியாயப்படுத்தக் கூடாது. அது மட்டும் அல்லாமல் இன்று வரை அல்லது நேற்றுவரை தமிழக சினிமாவில் ரஜனிகாந்த் என்கின்ற நடிகர் மீது தமிழ் நாட்டு மக்கள் கொண்டிருப்பதாக சொல்லப்படும் திரைப்படும் மோகமும் சாதாரணமானது அல்ல. அவருடைய தாக்கமும் வீச்சும் முக்கியமாக கவனத்தில் எடுக்கப்பட வேண்டிய ஒன்றாகும்.

இன்று தமிழ்நாட்டு திரைப்பட ரசிகர்களின் ஆதரவு காரணமாக பணமும் புகழும் பெற்று வாழ்ந்து வருகின்ற ரஜனிகாந்த் என்கின்ற கன்னட மனிதரின் பண்பாட்டு சீரழிவுத் திரைப்படங்கள் செய்கின்ற தாக்கம் ஒருபுறம் இருக்கட்டும். ரஜனிகாந்த் என்கின்ற ஒரு மனிதரை ஒரு கன்னடன் என்று சொல்லி தமிழர்களிடம் இருந்து அந்நியம் பேசுவது சரியா? அதனை தமிழர்கள் செய்யலாமா? என்று சில நியாயமான கேள்விகளும் எழுகின்றன. அவைகளுக்கு உரிய பதில் என்ன?

அவைகளுக்கு உரிய பதிலும் ரஜனிகாந்திடம் இருந்தே வருகின்றது. வந்தும் இருக்கின்றது. ரஜனிகாந்த் எப்போதுமே தன்னை ஒரு கன்னட வெறியன் என்று காட்டியும், நடந்தும் வந்திருக்கிறார் என்பது இங்கே சுட்டிக்காட்டத் தக்கது. சில பழைய சம்பவங்களை சொல்வது இங்கே பொருத்தமாக இருக்கும்.

ரஜனிகாந்த் முன்னாள் சிவாஜிராவாக இருந்த போது செய்த பல தொழில்களில் ஒன்றான மூட்டை தூக்கும் வேலையை செய்து கொண்டிருக்கும் போது "கன்னட பாதுகாப்பு இயக்கம்" என்கின்ற கன்னட தீவிர இயக்கத்தின் உறுப்பினராக இருந்து வந்தார். அந்தக் காலகட்டத்தில் கலைஞர் கருணாநிதியின் படைப்பில் எம்ஜிஆர் அவர்கள் நடித்த "காஞ்சித் தலைவன்" என்ற திரைப்படம் கர்நாடகாவில் திரையிடப்பட்டது. அதில் கன்னட மன்னன் ஒருவனை தாழ்த்தி சில வசனங்கள் சொல்லப்பட்டிருந்தன.

இதற்கு தங்கள் கன்னடத்தை (கண்டனத்தை) காட்டுவதற்காக தமிழர்களின் பல கடைகள் அடித்து நொறுக்கப்பட்டன. அதனை முன்னின்று செய்தவர் யார் தெரியுமா? வேறு யாருமில்லை. தமிழ்நாட்டின் இன்றைய சுப்பர்ஸ்ரார் ரஜனிகாந்தான் அதை முன்னின்று செய்தார். இன்றைய தினம் வரை ரஜனிகாந்த் "கன்னட பாதுகாப்பு இயக்கத்தின்" உறுப்பினராகத்தான் இருக்கிறார். அவருடைய அண்ணன் சத்தியநாராயணா இந்த இயக்கத்தின் ஒரு அமைப்பாளராகவும் இருக்கின்றார்.

இது குறித்து கன்னட தீவிரவாத இயக்கமான சளுவளி இயக்கத்தின் தலைவரான வட்டாள் நாகராஜ் 1992ஆம் ஆண்டு ஜனவரி 4ஆம் திகதி வெளிவந்த "சுடச் சுடச் செய்தி" என்ற பத்திரிகைக்கு தெளிவாகவே செவ்வி அளித்துள்ளார். அதில் அவர் தெரிவிக்கையில் "இங்கே தமிழர்களின் கடைகளை அடித்து நொருக்குவதற்கு சிவாஜிராவ்தான் முன்னணியில் நிற்பான், ஏனென்றால் அவனுக்கு தமிழர்களை கண்டாலே பிடிக்காது, சிவாஜிராவ் நம்ம பையன், அவரை நாம் புரிந்து கொள்ள வேண்டும், அத்தோடு சத்தியநாராயணாவின் பிள்ளைகள் "கன்னட இளைஞர் முன்னணி" என்ற அமைப்பையும் ஆரம்பித்துள்ளார்கள், அப்படி ரஜனிகாந்தின் குடும்பமே கன்னடர்களுக்கு ஆதரவாக உள்ளது, தன்னுடைய படம் தமிழ்நாட்டில் ஓட வேண்டும் என்பதற்காக அவர் செய்கின்ற தமிழர் ஆதரவுப் பேச்சுக்களை நாம் பொருட்படுத்தக் கூடாது" என்று தெரிவித்துள்ளார்.

தமிழ்திரைப்படங்கள் அனைத்தும் கர்நாடகத்தில் ஒரு குறிப்பிட்ட காலத்தின் பின்பே திரையிடப்பட முடியும் என்ற நிலை இருக்கின்ற போது, ரஜனியின் "சிவாஜி" திரைப்படம் மட்டும் உடனடியாகவே எவ்வித பிரச்சனையும் இன்றி கர்நாடகத்தில் திரையிடப்பட முடிவதன் ரகசியமும் இதுதான்.

1991ஆம் ஆண்டு கர்நாடகாவில் ஆயிரக்கணக்கில் தமிழர்கள் கொல்லப்பட்டு, மேலும் ஆயிரக்கணக்கானோர் அகதியாக ஓடி வந்து வந்த போதும் இந்த ரஜனிகாந்த் அவர்களுக்காக வாய் திறக்கவில்லை. நெய்வேலியில் தமிழ்நாட்டு திரையுலகம் பேரணி நடத்திய போது, தனித்து உண்ணாவிரதம் இருந்து ஒற்றுமைக்கு உலை வைத்தார்.

தமிழ்நாட்டு ரசிகர்களின் ஆதரவால் தான் பெற்ற கோடிக்கணக்கான செல்வத்தை ரஜனிகாந்த் இன்று கர்நாடாகவிலேயே பெரும்பாலும் முதலீடு செய்து தொழிற்சாலைகளும் மற்றும் வியாபாரங்களுமாக நடத்தி, தனது இனத்திற்கு உதவி செய்வது ஒரு விதத்தில் பாராட்டப்படக் கூடியதுதான். தான் எங்கு சென்று உழைத்தாலும், தனது இன மக்களும் மாநிலமும் பயன்பெற வேண்டும் என்கின்ற அவரது கன்னடப் பற்றும் பாராட்டுக்கு உரியதுதான்.

ஆனால் வேறொரு இனத்தினை (தமிழ் இனத்தை) ஏமாற்றியும், அவர்களை முட்டாள்கள் ஆக்கியும் அந்த இனத்தின் இலட்சக் கணக்கான இளைஞர்களின் எதிர்காலத்தை பாழ்படுத்தியும் அதன் மூலம் தன்னுடைய இனத்திற்கு உதவி செய்வது என்பது கண்டிக்கத்தக்கது.

வீரப்பன் கடத்திச் சென்ற கன்னட நடிகர் ராஜ்குமாரை ஐயா பழநெடுமாறன் அவர்களும், நக்கீரன் கோபால் அவர்களும் காடு சென்று பேச்சுவார்த்தைகள் நடத்தி மீட்டு வந்த போது, நடிகர் ரஜனிகாந்த் தமிழ்நாட்டில் இருந்து கொண்டு ஒரு அறிக்கை விடுத்தார். அதில் குறிப்பாக நக்கீரன் பத்திரிகை ஆசிரியர் கோபால் அவர்களுக்கு ஒரு பாராட்டை தெரிவித்திருக்கின்றார். ரஜனி அந்தப் பாராட்டில் என்ன சொன்னார் தெரியுமா?

"நீங்கள் செய்த இந்த முயற்சி காரணமாக கர்நாடகாவில் தமிழர்களின் ரத்த ஆறு ஓடுவது தவிர்க்கப்பட்டு உள்ளது"

"சும்மா இருந்த சங்கை ஊதிக் கெடுத்தானாம் ஆண்டி" என்கின்ற மாதிரி கன்னடர்களை தமிழர்களுக்கு எதிராக கிளப்புகின்ற அறிக்கையை ரஜனிகாந்த் வெளியிட்டார். அட, வீரப்பன் என்கின்றவர் ராஜ்குமார் என்கின்ற நடிகரை கடத்தினால் ஏன் கர்நாடகத்து தமிழர்கள் ரத்தம் சிந்த வேண்டும்? ஏன் அப்படி ஒரு சிந்தனையை தமிழ்நாட்டில் வாழுகின்ற இந்த ராஜனிகாந்த் என்கின்ற நடிகர் சொல்கிறார்?

"கர்நாடகத் தமிழர்கள் இரத்தம் சிந்தினால், தமிழ்நாட்டில் கன்னடர்களின் இரத்தம் ஆறாக ஓடும் என்று யாராவது கர்நாடகத்தில் சொல்லி இருக்க முடியுமா? சொல்லியிருந்தால் அவர்கள் கதி என்னவாகி இருக்கும்? அதுதான் தமிழ்நாட்டிற்கும் கர்நாடகாவிற்கும் உள்ள வித்தியாசம்.

அன்று தனது "பாபா" திரைப்படத்திற்கு அதிகூடிய கட்டணத்தில் நுழைவுச் சீட்டுக்களை விற்பதற்கு அனுமதியை பெறவேண்டும் என்பதற்காக அன்றைய தமிழ்நாட்டு முதல்வர் செல்வி ஜெயலலிதாவிற்கு சத்தியநாராயணா மூலம் மலர்க்கொத்து ஒன்றினை அனுப்பி சமாதானத் தூது விட்ட இந்த ரஜனிகாந்த் சில வருடங்களிற்கு முன்பும் செல்வி ஜெயலலிதாவிற்கு அன்புடன் ஒரு வேண்டுகோளையும் விடுத்திருந்தார்.

ஒரு பொதுக்கூட்டத்தில் முதலமைச்சராக இருந்த ஜெயலலிதாவின் முன்னிலையில் ரஜனிகாந்த் பேசும் போது சொல்கிறார் "அம்மா, விடுதலைப் புலிகளால் மட்டும் உங்களுக்கு ஆபத்து வரும் என்று நினைக்காதீர்கள்! இங்கேயும் சில புலிகளால் உங்களுக்கு ஆபத்து வரலாம்! ஆகவே, கவனமாக இருங்கள்! - இது ரஜனிகாந்தின் அன்பான அறிவுரை!

இந்த ரஜனிகாந்த் 2001 ஈழத் தமிழர்களின் தேசியப் பிரச்சனை குறித்து பேசும் போது, இது புராணங்கள் எமக்கு தருகின்ற விளக்கம் என்று புதிராக கருத்தினை வெளியிட்டார். தந்தை பெரியாரின் சீர்திருத்தக் கருத்துக்கள் இன்றைய காலகட்டத்திற்கு ஒத்து வராது என்று முன்னர் சொன்ன போது, ரஜனிக்கு எதிராக பல கண்டனங்கள் எழுந்தன. அப்போது ரஜனியை காப்பாற்ற ஓடோடி வந்தவர் வேறு யாருமில்லை. தந்தை பெரியாரின் பாசறையில் பயின்ற கலைஞர் கருணாநிதிதான். பெரியாருக்கு எதிராக ரஜனி சொன்ன கருத்துக்களை மழுப்பி அறிக்கை ஒன்றை விட்டு நிலைமையை சமாளித்த கருணாநிதி ரஜனியை கண்டிக்கக்கூட இல்லை.

தமிழ்நாட்டு தமிழர்களை சிந்திக்க விடாமல் திரைப்பட மாயையில் அழிழ்த்தி வைத்திருக்கும் அதிகார சக்திகளின் ஒரு கருவிதான் இந்த ரஜனிகாந்த் என்பதில் ஐயமில்லை. ரஜனிகாந்த் என்கின்ற கருவி மழுங்கிப் போனால், புதிய ஒரு முகத்தை உருவாக்கும் பணியில் இந்தச் சக்திகள் இறங்கக்கூடும் என்பதையும் நாம் உணர வேண்டும்.

இதே வேளை தமிழ்நாட்டு தமிழர்களை மட்டும் இந்த திரைப்பட மாயை பாதிக்கவில்லை. இதற்கு பலம் சேர்த்து உலகம் எங்கும் பரவச் செய்ய உறுதுணையாக இருப்பதில் புலம் பெயர்ந்த ஈழத் தமிழர்களுக்கு பெரும் பங்கு உண்டு.

இன்று தமிழகத்தின் மிகப் பெரிய தயாரிப்பாளர்களும், இயக்குனர்களும், நடிகர்களும் நம்பி இருப்பதும், தங்கி இருப்பதும் புலம்பெயர்ந்த தமிழர்களின் பணத்தைத்தான். தமிழ் படங்களின் பெயர்களை ஆங்கிலத்தில் முன்பு வைத்ததற்கும், பாடல்கள் ஆங்கிலத்தில் பாடப்படுவதற்கும், வசனங்கள் தமிங்கிலத்தில் பேசப்படுவதற்கும் தமிழனின் பண்பாடு பகிரங்கத்தில் சீரழிக்கப்படுவதற்கும் காரணமாக இருக்கின்ற தமிழ்நாட்டில் வாழும் மார்வாடிப் பண முதலீட்டார்களக்கு கைகொடுத்து உதவுவது எமது புலம்பெயர்ந்த தமிழர்களே.

இந்திய சீன யுத்தத்தின் போதும், கார்க்கில் போரின் போதும் மற்றைய வேறு பிரச்சனைகளின் போதும் நிதிசேகரித்துக் கொடுப்பதில் இந்தியாவிலேயே தமிழ்நாட்டு திரைப்படத் துறையினர்தான் முன்னிற்கிறார்கள். அவர்களுடைய வருவாயில் முக்கிய பங்கை செய்கின்ற புலம்பெயர்ந்த தமிழர்களின் இரத்த உறவுகள் கொடிய அடக்குமுறையில் துன்பப்படுகின்ற போது இந்தத் திரைப்படத்துறையினர் என்ன செய்து கிழித்தார்கள்?

தென்னாபிரிக்காவில் நிறவெறி என்றவுடன் அந்த நாட்டுடன் விளையாட்டுப் போட்டிகளை தவிர்த்த நாடுகளும் மக்களும் உண்டு. சீனாவில் மனித உரிமை மீறல்களுக்காக அவர்களின் உற்பத்திப் பொருட்களை வாங்க மறுத்தவர்கள் உண்டு. அதே போல் தமிழ் இனப் பண்பாட்டின் சீரழிவை, மொழிக் கொலையை நாம் ஏன் எமது செலவில் இறக்குமதி செய்ய வேண்டும்?

இதற்கு தீர்வாக பலர் பலதரப்பட்ட கருத்துக்களை சொல்கிறார்கள். இது நடைமுறைச் சாத்தியம்தானா, இதற்கு அனைத்து புலம்பெயர்ந்த தமிழ் மக்களும் ஒத்துழைப்பார்களா என்ற யதார்த்தமான கேள்வியையும் சிலர் கேட்கிறார்கள். திரைப்படங்களை திரையில் பார்க்காது ஒளிநாடாக்களிலும், இறுவெட்டுக்களிலும் பார்க்கலாம் என்று சிலர் மாற்றுத் தீர்வு யோசனை சொல்கிறார்கள்.

தமிழ்நாட்டின் அரசியலையும், பொருளாதாரத்தையும் தீர்மானிக்கின்ற மிக முக்கியமான சக்தியாக இன்று தமிழ் திரையுலகம் விளங்குகின்றது. கலைஞரின் வார்த்தைகளை கடன் வாங்கினால் "அது இன்று கொடியவர்களின் கூடாரமாக விளங்கி வருகின்றது". ஆனால் இந்தக் கொடியவர்களின் கூடாரம் இன்று புலம்பெயர்ந்த தமிழர்களின் ஆதரவையும் நம்பித்தான் இயங்குகின்றது என்பதை நாம் மறந்துவிடக் கூடாது.

புலம்பெயர்ந்த தமிழ் மக்கள் மஹாத்மா காந்தியின் வழியில் கொடுக்கக்கூடிய புறக்கணிப்புக்கள் வணிகரீதியில் தமிழ்நாட்டு அரசை மட்டும் அல்ல, மத்திய அரசையும் வழிக்குக் கொண்டு வருவதற்கு ஒரு வழியில் உதவக் கூடும். புலம்பெயர்ந்து வாழுகின்ற எமது உறவுகளே! உங்கள் அனைவருக்கும் உரிமையோடும் உறவோடும் தாயகத்தில் இருந்து நாம் முன்வைக்கின்ற வேண்டுகோளை தயவு செய்து செவிமடுக்குமாறு கேட்டுக் கொள்கிறோம்.

நமக்கு உதவாத, நமக்கு எதிரான இந்தக் கேவலமான கீழ்த்தரமான நடிகர்களினதும், தயாரிப்பாளர்களினதும் திரைப்படத்தை புறக்கணியுங்கள். இவற்றை வாங்கி வெளியிடுகின்ற அன்பு உறவுகளுக்கும் இதே வேண்டுகோளைத்தான் நாம் முன்வைக்கின்றோம். அன்று எம்ஜிஆர் என்கின்ற நடிகர் தமிழ்தேசியத்திற்கு முன்னின்று உதவினார். இன்று ரஜனி என்கின்ற நடிகர் சுயநலத்திற்காக தமிழ்தாயை உதைக்கின்றார்.

புலம்பெயர்ந்த உறவுகளே! உங்களின் சிவாஜிப் படப் புறக்கணிப்பு நீங்கள் எடுத்து வைக்கின்ற முதல் அடியாக இருக்கட்டும். அதுவே நீங்கள் கொடுக்கின்ற முதல் இடியாகவும் இருக்கட்டும். இந்த இடி பேரிடியாக எதிர்காலத்தில் மாறட்டும். இன்று இங்கே அல்லல்பட்டு அகதிகளாக ஓடித்திரிகின்ற எமது உறவுகளுக்கு உங்களின் இந்த நடவடிக்கை தேவனின் உண்மையான வருகையாக அமையட்டும்.

- தாயகத்தில் இருந்து அரங்கன்

16 comments:

Thekkikattan|தெகா said...

செல்லரிச்சுப் போன ஜென்மங்கள்தாம் நம் ஜென்மங்கள். எங்கே போயி முட்டிக்கிறது.

அதிலயும் இங்கே வட அமெரிக்காவில் இருபது டாலார்களுக்கு கொஞ்சம் குறைச்சலாக டிக்கெட் விற்பனையில். அப்படி என்ன பார்க்காமல் தவிர்த்து விட்டால், விக்கியா சாகப்போகிறோம்.

சுரனை கெட்ட ஜென்மங்கள். :-(

Anonymous said...

//கன்னட தீவிரவாத இயக்கமான சளுவளி இயக்கத்தின் தலைவரான வட்டாள் நாகராஜ் 1992ஆம் ஆண்டு ஜனவரி 4ஆம் திகதி வெளிவந்த "சுடச் சுடச் செய்தி" என்ற பத்திரிகைக்கு தெளிவாகவே செவ்வி அளித்துள்ளார். அதில் அவர் தெரிவிக்கையில் "இங்கே தமிழர்களின் கடைகளை அடித்து நொருக்குவதற்கு சிவாஜிராவ்தான் முன்னணியில் நிற்பான், ஏனென்றால் அவனுக்கு தமிழர்களை கண்டாலே பிடிக்காது, சிவாஜிராவ் நம்ம பையன், அவரை நாம் புரிந்து கொள்ள வேண்டும், அத்தோடு சத்தியநாராயணாவின் பிள்ளைகள் "கன்னட இளைஞர் முன்னணி" என்ற அமைப்பையும் ஆரம்பித்துள்ளார்கள், அப்படி ரஜனிகாந்தின் குடும்பமே கன்னடர்களுக்கு ஆதரவாக உள்ளது, தன்னுடைய படம் தமிழ்நாட்டில் ஓட வேண்டும் என்பதற்காக அவர் செய்கின்ற தமிழர் ஆதரவுப் பேச்சுக்களை நாம் பொருட்படுத்தக் கூடாது" என்று தெரிவித்துள்ளார்.//

நீங்க சொல்லீட்டீங்க. இங்க எவனுக்கு சொரண இருக்கு? எல்லாத் தமிழனுமே
வெக்கங்கெட்ட நாதாரிங்க.

சீனு said...

அடடா! என்ன இப்படி சொல்லிட்டீங்க. திங்கட்கிழமை இரவுக்காட்சிக்காக சத்யமில் டிக்கெட் கிடைச்ச சந்தோஷத்தில் இருக்கேன்!!

theevu said...

ஏன் புறக்கணிக்கணும்?இணையத்தில் பார்த்துட்டால் போச்சு:)

G.Ragavan said...

நீங்கள் சொல்லும் பல விஷயங்களை மறுப்பதற்கில்லை என்பதுதான் வேதனையான விஷயம். உங்களது கருத்துகளோடு பெரும்பான்மையாகவே ஒத்துப் போகிறேன்.

வேறெந்தத் தமிழ்த் திரைப்படமும் உடனடியாக கர்நாடகாவை எட்ட முடியாது. ரஜினி படம் என்ற ஒரே காரணத்தால் மட்டுமே அந்த படம் திரையிடப்படப் போகிறது.

இங்கு நெதர்லாந்திலும் வருகின்ற ஞாயிறு படம் ஒரு திரையரங்கில் வெளியிடப்படப் போகிறது. இந்தப் படத்திற்குச் செல்ல வேண்டும் என்ற ஆவல் அறிவிற்குக் கொஞ்சமும் இல்லை. ஆனால் சென்றால் தமிழர்கள் பலரைப் பார்க்கக் கிடைக்கும் என்ற ஒரே காரணம் மட்டுமே என்னை படத்திற்குப் போகச் சொல்கிறது. ஆனால் இன்னும் முடிவு செய்யவில்லை.

என்னைப் பொருத்த வரையில் ரஜினிக்குக் கொடுக்கப்பட்டிருக்கும் இடம் மிகவும் அதிகப்படியானது. இவரோடு ஒப்பிடுகையில் விஜயகாந்த் பலப்பல மடங்கு ஒத்துக்கொள்ளப்படத்தக்கவர் என்பது என்னுடைய கருத்து.

-L-L-D-a-s-u said...
This comment has been removed by the author.
Anonymous said...

அப்ப இந்த சீனு மானங்கெட்ட நாதாரியா? அட கடவுளே

சதுர் said...

ரஜினி பிள்ளையாண்டானின் சிவாஜி படம் விமர்சனம் எழுதிருக்கேன். வந்து பாருங்கோ.

தேவன் said...

உண்மைகள் அழகாக, உறைக்கத்தக்கதாக சொல்லப்பட்டிருக்கிறது பாராட்டுக்கள்.
சினிமாவுக்குள் நியத்தை தொலைத்தவர்கள் எப்போதுதான் வெளியால் வரப்போகிறார்களோ, அதுவரைக்கும் இந்த ஜென்மங்கள் தமிழன் தலையில் மிளகாய் அரைத்துக் கொண்டே இருக்கலாம்.

நாமக்கல் சிபி said...

l-l-d-a-s-u

உடன்பாடானதோ அல்லது உடன்பாடு இல்லாததோ! அது பற்றிக் கவலை இல்லை! ஆனால் கருத்துக்களை நாகரிகமாகத் தெரிவிக்கலாமே!

அல்லது உங்களிடமிருந்தெல்லாம் அதனை எதிர்பார்ப்பது தவறு என்று சொல்கிறீர்களா?

Anonymous said...

//அல்லது உங்களிடமிருந்தெல்லாம் அதனை எதிர்பார்ப்பது தவறு என்று சொல்கிறீர்களா//

ஆம்,தவறு தான்;மிகப்பெரிய தவறு.

Anonymous said...

எண்ணங்க இப்படி எல்லாம் பதிவு போட்டா நிறைய பேர் படம் பார்க்க போமாட்டாங்க உங்களுக்கு சுலபமா டிக்கெட் கிடைச்சிரும்ன்னு நினைக்காதிங்க.

Anonymous said...

ரஜனியின் படம் ஒவ்வொரு முறை வரும் போதும், இது போன்ற கூக்குரல்கள் கேட்கும். பின்பு அடங்கிவிடும்.
அவ்வாறு இல்லாது இதை தொடர்ந்து நடத்த வேண்டும்.
இது போன்ற படங்களைப் புறக்கணிப்பது தமிழ் சினிமாவிற்கும் நல்லபடி அமையலாம். ரஜனி கூட superstar என்ற மாயையை உதறிவிட்டு மீண்டும் நல்ல படங்களில் நடிக்க ஆரம்பிக்கலாம்

Anonymous said...

it is ridiculous. Entire media inside & outside tamilnadu trying to create image as whole tamil nation begging for to watch sivaji. it highly shameful for entire tamil community has been identified as follish & Uncultured people by the outside world.

சீனு said...

//அப்ப இந்த சீனு மானங்கெட்ட நாதாரியா? அட கடவுளே//

அப்படியே இருந்திட்டு போறேன்...அனானி :)

நல்லா இருந்துச்சுன்னா, பல முறை பார்ப்பேன்.

இம்சை said...

சிவாஜி யின் இம்சை இம்சையோ இம்சை

சிவாஜி யின் இம்சை இம்சையோ இம்சை

சிவாஜி யின் இம்சை இம்சையோ இம்சை