தமிழ்நாட்டுத் தமிழர்கள் தனிநாட்டிற்காக போராட வேண்டும் என்று சிறிலங்காவின் பலம் பொருந்திய கட்சிகளில் ஒன்றான ஜாதிக ஹலஉறுமய தெரிவித்துள்ளது।
சிறிலங்கா சிங்களவர்களுக்கு சொந்தம் என்றும், தமிழ்நாடே தமிழர்களுக்கு சொந்தமான நாடு என்றும் அக் கட்சி கூறியுள்ளது। சிறிலங்காவில் தமிழர்கள் ஒரு சிறுபான்மை இனமே தவிர அவர்களுக்கு சொந்தமான தாயகம் இங்கு இல்லை என்றும் அக் கட்சி தெரிவித்தது.
ஜப்பானியர்களுக்கு ஜப்பான் போன்று, ஆங்கிலேயர்களுக்கு இங்கிலாந்து போன்று தமிழர்களுக்கு தமிழ்நாடு இருக்கின்றது என்றும், ஆகவே தமிழர்கள் தமிழ்நாட்டிலேயே தனிநாட்டுக்கான போராட்டத்தை நடத்த வேண்டும் என்றும் ஜாதிக ஹலஉறுமய மேலும் கூறியுள்ளது।
"சிறிலங்காவில் தமிழர்கள் ஒரு தேசிய இனம் அல்ல, அவர்கள் ஒரு சிறுபான்மை இனமே" என்ற ஜாதிக ஹெல உறுமயவின் கருத்தையே இந்திய அரசும் கொண்டிருக்கிறது। அதே போன்று தமிழ்நாட்டு தமிழர்கள் தனிநாட்டுக்காக போராட வேண்டும் என்ற ஜாதிக ஹெல உறுமயவின் கருத்தையும் இந்திய அரசு ஏற்றுக் கொள்ளுமா என்று தெரியவில்லை.
தமிழ்நாட்டுத் தமிழர்கள் தனியாக பிரிந்து செல்வதும், இந்தியக் கூட்டாட்சியில் தொடர்ந்து இருப்பதும் தமிழ்நாட்டுத் தமிழர்கள் எடுக்க வேண்டிய முடிவு। சிங்கள அரசு போன்று இந்திய அரசும் தமிழ்நாட்டுத் தமிழர்களை அடக்க முனையுமானால், அவர்களும் பிரிந்து செல்கின்ற முடிவை எடுக்கக் கூடும்.
ஆயினும் சிங்கள இனவாதக் கட்சியான ஜாதிக ஹெல உறுமய தமிழர்களுக்கு என்று உலகில் இருக்கும் இரண்டு நாடுகளில் ஒன்றை ஏற்றுக் கொண்டிருப்பது நல்ல விடயம். அதே போன்று தமிழீத்தையும் ஏற்றுக்கொள்ள வேண்டிய கட்டாய நிலை விரைவில் வரும்.
3 comments:
இது நல்ல யோசனை! நாம் தமிழ்நாட்டில் தனிநாட்டிற்காக போராடி வெற்றி பெற்று அதன் பிறகு சிறிலங்காவிற்கு படையெடுத்து சென்று அங்குள்ள தமிழர்களுக்கு தமிழீழத்தையும் பெற்றுக் கொடுக்கலாம்.
முதலில் தமிழ்நாடு இந்த திரவிட கும்பலிடமிருந்து விடுதலை பெற வேண்டும்.
இங்க நம்ம புழைப்பே கேலி கூத்தாக இருக்கு. அகதியாக நாடு நாடாக அலைகிறோம். இதுல அடுத்தவன் வீட்டு விழயம் நமக்கு எதுக்கு.
ஈழ தமிழ் அகதி
Post a Comment